கம்போங் ராஜா

ஆள்கூறுகள்: 5°47′30″N 102°33′36″E / 5.79167°N 102.56000°E / 5.79167; 102.56000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்போங் ராஜா
Kampung Raja
Kota Putera
 திராங்கானு
Map
ஆள்கூறுகள்: 5°47′30″N 102°33′36″E / 5.79167°N 102.56000°E / 5.79167; 102.56000[1]
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் பெசுட்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு22200
மலேசியத் தொலைபேசி+6-09-697
மலேசியப் போக்குவரத்து எண்T

கம்போங் ராஜா அல்லது கோத்தா புத்ரா; (ஆங்கிலம்: Kampung Raja; அல்லது Kota Putera மலாய்: Kampung Raja, Besut) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், பெசுட் மாவட்டத்தில் (Besut District) உள்ள நகரம். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 82 கி.மீ. தொலைவில் உள்ளது

பெசுட் மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் தலைநகரமாகவும் விளங்கும் கம்போங் ராஜா, ஒரு காலக் கட்டத்தில் திராங்கானு அரசர்கள் வாழ்ந்த இடமாகவும் அறியப் படுகிறது. அதனால்தான் அதற்கு கோத்தா புத்ரா எனும் அடைமொழிப் பெயரும் உள்ளது.

பொது[தொகு]

கோத்தா (Kota) என்றால் மலாய் மொழியில் கோட்டை; புத்ரா (Putera) என்றால் மைந்தர் அல்லது இளவரசர் என்று பொருள்.

நீண்ட காலத்திற்கு முன்பு, இங்கு ஒரு ராஜா வாழ்ந்தார் என்றும் அவருடைய கோட்டை இங்கே கட்டப்பட்டது என்றும் இங்குள்ள கிராமவாசிகள் கூறுகின்றனர். ஆனால் இப்போது அந்தக் கோட்டை இங்கு இல்லை. கோலா திராங்கானுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் இசுதானா தெங்கு லாங் (Istana Tengku Long) என்று அழைக்கப்படும் ஒரு பழைய கோட்டை மட்டுமே இன்னும் இங்கு உள்ளது.[2]

கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி[தொகு]

கம்போங் ராஜா நகரம் திராங்கானு மாநிலத்தில் அமைந்து இருந்தாலும், அங்குள்ள மக்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியை (Kelantanese Malay) பேசுகிறார்கள். மற்றும் கிளாந்தான் மாநிலத்திற்கு அருகாமையில் இருப்பதால் கலாசார ரீதியாக கிளந்தானிய மக்களாகவே (Kelantanese) வாழ்கின்றனர்.[3]

கம்போங் ராஜா நகரத்தில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள், திராங்கானிய அடையாளத்தை விட (Terengganuan identity) கிளந்தானிய அடையாளத்துடன் (Kelantanese identity) தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.[4]

பெசுட் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரான ஜெர்த்தே நகரம் (Jerteh), கம்போங் ராஜா நகரத்தைவிட மிகவும் வளர்ச்சி அடைந்த நகரமாகத் திகழ்கின்றது.

காலநிலை[தொகு]

மாராங் ஒரு வெப்பமண்டல மழைக்காடு காலநிலையையும்; ஆண்டு முழுவதும் கனமான மழை பொய்வையும் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், கம்போங் ராஜா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.6
(83.5)
29.5
(85.1)
30.9
(87.6)
32.0
(89.6)
32.4
(90.3)
32.0
(89.6)
31.6
(88.9)
31.4
(88.5)
31.3
(88.3)
30.6
(87.1)
29.3
(84.7)
28.6
(83.5)
30.68
(87.23)
தினசரி சராசரி °C (°F) 25.4
(77.7)
25.9
(78.6)
26.8
(80.2)
27.7
(81.9)
28.1
(82.6)
27.8
(82)
27.4
(81.3)
27.3
(81.1)
27.2
(81)
26.9
(80.4)
26.2
(79.2)
25.8
(78.4)
26.88
(80.38)
தாழ் சராசரி °C (°F) 22.3
(72.1)
22.4
(72.3)
22.7
(72.9)
23.5
(74.3)
23.8
(74.8)
23.6
(74.5)
23.2
(73.8)
23.2
(73.8)
23.1
(73.6)
23.2
(73.8)
23.2
(73.8)
23.0
(73.4)
23.1
(73.58)
மழைப்பொழிவுmm (inches) 264
(10.39)
118
(4.65)
126
(4.96)
79
(3.11)
124
(4.88)
142
(5.59)
128
(5.04)
196
(7.72)
233
(9.17)
292
(11.5)
537
(21.14)
621
(24.45)
2,860
(112.6)
ஆதாரம்: Climate-Data.org[5]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்போங்_ராஜா&oldid=3748819" இருந்து மீள்விக்கப்பட்டது