கெர்த்தே வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வானூர்தி நிலைய வகை | தனியார் | ||||||||||
உரிமையாளர் | பெட்ரோனாஸ் | ||||||||||
இயக்குனர் | செனாய் வானவூர்தி நிலையச் சேவை நிறுவனம் Senai Airport Terminal Services Sdn Bhd | ||||||||||
சேவை புரிவது | கெமாமான், திராங்கானு, மலேசியா | ||||||||||
அமைவிடம் | கெர்த்தே, திராங்கானு, மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 18 ft / 5 m | ||||||||||
ஆள்கூறுகள் | 04°32′15″N 103°25′36″E / 4.53750°N 103.42667°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2018) | |||||||||||
|
கெர்த்தே வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: KTE, ஐசிஏஓ: WMKE); (ஆங்கிலம்: Kerteh Airport; மலாய்: Lapangan Terbang Kerteh) என்பது மலேசியா, திராங்கானு, கெமாமான், கெர்த்தே எனும் இடத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம்.[1]
இந்த வானூர்தி நிலையம் பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனத்திற்குச் சொந்தமான தனியார் வானூர்தி நிலையம் ஆகும்.
தென் சீனக் கடலில் 100 - 200 கி.மீ. தொலைவில் உள்ள பல்வேறு எண்ணெய்த் தளங்களுக்கு, 'பெட்ரோனாஸ்' நிறுவனப் பணியாளர்களையும்; 'எக்சான்மொபில்' (ExxonMobil) பணியாளர்களையும்; உலங்கூர்திகள் மூலமாக அனுப்பும் நோக்கத்திற்காக இந்த நிலையம் உருவாக்கப்பட்டது.
பின்னர் அதே ஊழியர்களை மலேசியாவின் இதர இடங்களுக்கு வானூர்திகளின் மூலமாகத் திருப்பி அனுப்புவதற்கும் இந்த வானூர்தி நிலையம் பயன்படுத்தப்பட்டது.
பொது
[தொகு]2019-ஆம் ஆண்டில் இருந்து, செனாய் வானவூர்தி நிலையச் சேவை நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த வானவூர்தி நிலையம் சிறியதாக இருந்தாலும், 1,362 மீ (4,469 அடி) நீளமான ஓடுபாதையைக் கொண்டுள்ளது. போயிங் 737-400 ரக விமானங்களின் பயன்பாட்டிற்கு இடமளிக்கும் வகையில் ஓடுபாதை அமைக்கப்பட்டு உள்ளது.[2]
கெர்த்தே வானூர்தி நிலையத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் மலேசிய உலங்கூர்தி சேவை நிறுவனம் (Malaysia Helicopter Services) எனும் நிறுவனத்தின் மூலமாக நடைபெறுகின்றன.
பெட்ரோனாஸ் தொழிலாளர்கள்
[தொகு]உலங்கூர்திகளின் மூலமாக, தென் சீனக் கடலில் உள்ள பெட்ரோனாஸ் எண்ணெய் தளங்களுக்கும்; எக்சான்மொபில் எண்ணெய் தளங்களுக்கும்; தொழிலாளர்கள் கொண்டு செல்லப் படுவது வழக்கமாக உள்ளது.
தவிர, எண்ணெய் தளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை, வார நாட்களில், கோலாலம்பூர், சுபாங்கில் இருக்கும் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்திற்கு (SZB) கொண்டு செல்லவும் இதே கெர்த்தே வானூர்தி நிலையம் பயன்படுத்தப் படுகிறது.
வரலாறு
[தொகு]இருப்பினும் வணிக ரீதியில், பயணிகளின் பற்றாக்குறையால் 1985-ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வானூர்தி நிலையம் பயன்படுத்தப் படாமல் இருந்தது. தென் சீனக் கடலின் எண்ணெய்த் தளங்களுக்குத் தொழிலாளர்களை அனுப்புவதற்கும்; மீண்டும் அவர்களை சுபாங் வானூர்தி நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், சிறிது காலம் பெலாங்கி ஏர் (Pelangi Airways) வானூர்தி நிறுவனம் இயங்கி வந்தது, ஆனால் வருமானம் இல்லாததால் அதன் சேவையும் நிறுத்தப்பட்டது.
போட்டி போடும் நிலை
[தொகு]இந்தக் கெர்த்தே வானூர்தி நிலையம், கோலா திராங்கானுவில் உள்ள சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம் (Sultan Mahmud Airport); மற்றும் குவாந்தான் நகரில் உள்ள சுல்தான் அகமத் ஷா வானூர்தி நிலையம் (Sultan Ahmad Shah Airport); ஆகியவற்றுடன் போட்டி போடும் நிலையிலும் உள்ளது.
2009 ஜனவரி 12-ஆம் தேதி வணிகப் பயன்பாட்டுக்காக இந்த நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பயர்பிளை சேவைகளை வழங்கி வந்தது.
இப்போது திங்கள் முதல் வியாழன் வரை, அதே சேவையை மலின்டோ ஏர் நிறுவனம் தொடர்கிறது.
மேலும் காண்க
[தொகு]கோலா திராங்கானு மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
- ↑ WMKE - KERTEH பரணிடப்பட்டது 2013-12-27 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
- ↑ "Senai International Airport now manages Kertih Airport operations". 2 January 2019.