லாங் தெங்கா தீவு

ஆள்கூறுகள்: 5°47′N 102°53′E / 5.783°N 102.883°E / 5.783; 102.883
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லாங் தெங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லாங் தெங்கா தீவு
உள்ளூர் பெயர்:
Lang Tengah Island
லாங் தெங்கா தீவின் கடற்கரை
லாங் தெங்கா தீவு is located in மலேசியா
லாங் தெங்கா தீவு
லாங் தெங்கா தீவு
      லாங் தெங்கா தீவு
      மலேசியா
புவியியல்
அமைவிடம்தென்சீனக் கடல்
ஆள்கூறுகள்5°47′N 102°53′E / 5.783°N 102.883°E / 5.783; 102.883
தீவுக்கூட்டம்மலேசியா
நிர்வாகம்

லாங் தெங்கா தீவு (மலாய்: Pulau Lang Tengah; ஆங்கிலம்: Lang Tengah Island) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின், கோலா நெருஸ் மாவட்டத்தில், தென்சீனக் கடலில் அமைந்து உள்ள ஒரு தீவு.

இந்தத் தீவிற்கு கடற்கரை நகரமான மெராங் நகரத்தில் இருந்து படகுகள் மூலமாகச் செல்லலாம். தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மாநகர் கோலா திராங்கானுவில் இருந்து வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் தென்சீனக் கடலில் அமைந்துள்ளது.[1]

பொது[தொகு]

இந்தத் தீவைச் சுற்றிலும் கடல் நீர் எப்போதும் மிகத் தெளிவாக இருக்கும். கடற்கரைகள் வெண்மையாகவும் சுத்தமாகவும் உள்ளன. இதன் வெப்பமண்டல காடுகள் இன்றும் தீண்டப் படாமல் பாதுகாக்கப் படுகின்றன.

இந்தத் தீவு ரெடாங் தீவுக்கும் பெர்கெர்ந்தியான் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தத் தீவு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு உள்ளது. இந்தத் தீவில் சாலைகள் எதுவும் இல்லை. பெரும்பாலும் ஒற்றையடிப் பாதைகள் மட்டுமே உள்ளன.

பச்சை ஆமைகள்[தொகு]

இந்தத் தீவில் பவளப்பாறைகள் நிறைந்து உள்ளன. அவ்வப்போது சுறா மீன்களும் திருக்கை மீன்களும் காணப்படுகின்றன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பச்சை ஆமைகள் (Green Turtles) கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம்.[2]

எப்போதாவது அழுங்காமை (ஆக்சுபில்) ஆமைகளும் (Hawksbill Turtles) காணப் படுகின்றன. காட்டு உடும்புகளும் உள்ளன. ஆனாலும் கடற்கரைகளுக்கு அருகில் அரிதாகவே காணப் படுகின்றன. மற்றும் பல்வேறு வகையான பறவைகள், தவளைகள், பல்லிகள் மற்றும் பூச்சிகள் இந்தத் தீவில் உள்ளன.

லாங் தெங்கா தீவு காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lang Tengah Island
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=லாங்_தெங்கா_தீவு&oldid=3446040" இருந்து மீள்விக்கப்பட்டது