மாராங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°10′N 103°10′E / 5.167°N 103.167°E / 5.167; 103.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாராங் மாவட்டம்
Marang District
 திராங்கானு
Map
மாராங் மாவட்டம் is located in மலேசியா
மாராங் மாவட்டம்
      மாராங் மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°10′N 103°10′E / 5.167°N 103.167°E / 5.167; 103.167
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் மாராங்
தொகுதிமாராங்
ஊராட்சிமாராங் ஊராட்சி[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்666.54 km2 (257.35 sq mi)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்1,02,500
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு21xxx
மலேசியத் தொலைபேசி+6-09-6
மலேசியப் போக்குவரத்து எண்T

மாராங் மாவட்டம் (ஆங்கிலம்: Marang District; மலாய்: Daerah Marang; சீனம்: 马江县; ஜாவி: ماراڠ) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்தின் வடக்கில் கோலா நெருசு மாவட்டம் (Kuala Nerus District); கோலா திராங்கானு மாவட்டம் (Kuala Terengganu District); தெற்கில் டுங்குன் மாவட்டம் (Dungun District); மேற்கில் உலு திராங்கானு மாவட்டம் (Hulu Terengganu District) மற்றும் கிழக்கில் தென்சீனக் கடல் (South China Sea) ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் மாராங் ('Marang) ஆகும்.

சொல் பிறப்பியல்[தொகு]

மாராங் மாவட்டத்தின் பெயர்த் தோற்றம், இந்தப் பகுதியில் முதலில் குடியேறியவர்களில் ஒருவரான மா (Ma) என்ற ஒருவரின் பெயரில் இருந்து மட்டுமே அறியப்படுகிறது. உலர்ந்த கடல் பொருட்களின் சீன தொழில்முனைவோராக இருந்தார் என்றும்; ராங் (rang) எனும் அடுக்குத் தட்டுகளைப் பயன்படுத்தி கடல் பொருட்களை உலர வைத்தார் என்றும் காரணம் சொல்லப்படுகிறது.

மாராங்கில் இருந்த அனைத்து அடுக்குத் தட்டுகளுக்கும் அந்த சீன வணிகர் சொந்தக்காரராக இருந்ததால் அந்த இடத்திற்கு மாராங் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வரலாறு[தொகு]

மாராங்கின் நிர்வாக வரலாறு, திராங்கானுவின் ஒன்பதாவது சுல்தான் பாகிண்டா ஓமார் (Baginda Omar) (1839-1876) ஆட்சியில், மாராங் நதிக்கரை மாவட்டங்களை (Riverine Districts) ஆளும் பிரபுக்களின் (Governing Nobles) நியமனத்துடன் தொடங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், சுல்தானக உயர் அதிகாரியாக இருந்தவர் சுல்தானின் சார்பாக வரி வசூல் செய்வது; மற்றும் வருவாயை நிர்வகிக்கும் பொறுப்புகளை வகிக்கத் தொடங்கினார்.[4]

அதற்கு முன்பு, வரி வசூலிக்கும் அதிகாரம் கிராமத் தலைவர்களின் (Village Heads) கைகளில் இருந்தது; பின்னர் இவர்களுக்கு கிராம அளவிலான நிர்வாகத்திற்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டது. புதிய நிர்வாக முறையினால் வரி மற்றும் வருவாய் வசூலைப் பெரிதும் மேம்படுத்தியது; மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் செயல்திறனையும் அதிகரிக்கச் செய்தது.[5]

பொது[தொகு]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

மாராங் மாவட்டம் 8 முக்கிம்கள் (Mukim) எனும் துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • செரோங் (Jerung)
  • புலாவ் கெராங்கா (Pulau Kerengga)
  • ருசிலா (Rusila)
  • பெங்காலான் பெராங்கான் (Pengkalan Berangan)
  • பண்டார் மாராங் (Marang)
  • புக்கிட் பாயோங் (Bukit Payong )
  • அலோர் லிம்பாட் (Alor Limbat)
  • மெர்ச்சாங் (Merchang)

பிரித்தானிய நிர்வாகம்[தொகு]

1912-ஆம் ஆண்டில், மாவட்ட நிர்வாகம் மாவட்ட அதிகாரிகளின் (District Officers) நிர்வாகத்திற்குள் மாற்றப்பட்டது. மாராங் மாவட்ட அலுவலகக் கட்டடம் (Marang District Office Building) 1915-இல் மாராங்கில் கட்டப்பட்டது. இருப்பினும், 1923-இல், சுல்தான் சுலைமான் பத்ருல் ஆலம் சா (Sultan Sulaiman Badrul Alam Shah) (1920-1942) ஆட்சியின் போது, பிரித்தானிய ஆலோசகர், ஜே.எல். அம்பெரிசு (British Adviser, J.L. Humpherys), மாவட்ட அளவில் மறுசீரமைப்பு செய்தார்.[6]

நதியோர மாவட்டங்கள் அகற்றப்பட்டு, மூன்று சார்புநிலை நிர்வாகங்களாக (Dependencies) மாற்றப்பட்டன. ஒவ்வொரு சார்புநிலை நிர்வாகமும் ஓர் ஆணையரால் (Commissioner) தலைமை தாங்கப்பட்டது; மற்றும் ஓர் உதவி பிரித்தானிய ஆலோசகர் (Assistant British Adviser) அவருக்குத் துணையாக இருந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாராங்_மாவட்டம்&oldid=3749984" இருந்து மீள்விக்கப்பட்டது