உள்ளடக்கத்துக்குச் செல்

கோலா டுங்குன்

ஆள்கூறுகள்: 4°37′22.2″N 103°05′14.5″E / 4.622833°N 103.087361°E / 4.622833; 103.087361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா டுங்குன்
Kuala Dungun
 திராங்கானு
Map
ஆள்கூறுகள்: 4°37′22.2″N 103°05′14.5″E / 4.622833°N 103.087361°E / 4.622833; 103.087361
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் டுங்குன்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
23000
தொலைபேசி+6-09-6
வாகனப் பதிவெண்கள்T

கோலா டுங்குன்; (ஆங்கிலம்: Kuala Dungun; மலாய்: Kuala Dungun) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், டுங்குன் மாவட்டத்தில் (Dungun District) உள்ள நகரம்; ஒரு முக்கிம். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 72 கி.மீ.; கோலா பெசுட் (Kuala Besut) நகரில் இருந்து 200 கி.மீ. தெற்கில் உள்ளது. [1]

இந்த நகரம் தஞ்சோங் ஜாரா நகரத்திற்கும் பாக்கா நகரத்திற்கும் நடுவே உள்ளது. அத்துடன் தென் சீனக் கடலில் பாயும் டுங்குன் ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடக்கில் செரங்காவ்; கிழக்கில் பாசிர் ராஜா; தெற்கில் உலு பாக்கா மற்றும் மேற்கில் பாக்கா ஆகிய முக்கிம்கள் எல்லைகளாக உள்ளன .

பொது

[தொகு]

1940-ஆம் ஆண்டுகளில் கோலா டுங்குன் ஓர் இரும்புச் சுரங்க நகரமாக இருந்தது. மேற்கில் அமைந்துள்ள புக்கிட் பீசி (Bukit Besi) என்ற சிறிய நகரத்தில் இரும்புத் தாது எடுக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் கோலா டுங்குன் துறைமுகமாகச் செயல்பட்டது. அங்கு இருந்து இரும்புத் தாது கப்பல்களுக்கு மாற்றப்பட்டது.[2]

சுரங்கத் தொழிலுக்கு பெயர் பெற்ற கோலா டுங்குன் மற்றும் புக்கிட் பீசி நகரங்கள், தொடருந்து பாதையால் இணைக்கப்பட்டு இருந்தன. அந்தத் தொடருந்து பாதை உள்நாட்டு கிராம மக்களுக்கும், வணிக செயல்பாடுகளுக்கும் பொது போக்குவரத்துச் சேவையை வழங்கி வந்தது.

மக்கள் தொகை

[தொகு]

2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோலா டுங்குன் மக்கள் தொகை ஏறக்குறைய 10,000 என மதிப்பிடப்பட்டு உள்ளது. பெரும்பான்மையான மக்கள் மலாய்க்காரர்கள்; சிறுபான்மையினர் சீனர்கள் மற்றும் இந்தியர்கள்.

கோலா டுங்குன் இரவுச் சந்தை

[தொகு]

கோலா டுங்குன் நகரம் இப்போது திராங்கானு மாநிலத்தில் மற்றொரு கடற்கரை நகரமாக விளங்குகிறது. ஒவ்வொரு வியாழன் தோறும் வாராந்திர இரவுச் சந்தை (Weekly Night Market) வணிகத்திற்காகத் திறக்கும் போது மட்டும் டுங்குன் நகரம் உயிர்பெறுகிறது.

கோலா டுங்குன் இரவுச் சந்தை திராங்கானுவில் மிகப்பெரிய இரவு சந்தையாக அறியப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள் இரவுச் சந்தையில் விற்கப்படுகின்றன. கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள் விலைகுறைந்த பொருட்களை வாங்குவதற்கு கோலா டுங்குன் நகரத்திற்கு வருகிறார்கள்.

கோலா டுங்குன் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் டுங்குன் நகருக்கு அருகில் உள்ள கெர்த்தே (Kerteh) நகரத்தின் பெட்ரோலியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமங்கள்

[தொகு]

கோலா டுங்குன் நகர்ப் பகுதியில் உள்ள கிராமங்கள் (முக்கிம்கள்):

  • கம்போங் பாரு கோலா டுங்குன் (Kampung Baru Kuala Dungun)
  • கம்போங் தஞ்சோங் சாத்தி (Kampung Tanjung Jati)
  • கம்போங் சாபி (Kampung Jabi)
  • கம்போங் சூரா தெங்கா (Kampung Sura Tengah)
  • கம்போங் பெங்காலான் அஜால் (Kampung Pengkalan Ajal)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Located in Terengganu, Malaysia, Kuala Dungun is home to an impressive selection of attractions and experiences". பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
  2. "Located at the mouth of Sungai Dungun just a few kilometers from Dungun at the main road to Kuala Terennganu, Kuala Dungun was first known as a iron mi ing town in the 1940's. However with the exhaustion of iron in this area, this little town finds its survival in fishing industry. Today it is nothing more than a coastal quite fishing town in the east coast of Peninsular Malaysia". www.terengganutourism.com.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_டுங்குன்&oldid=4034336" இலிருந்து மீள்விக்கப்பட்டது