சயாம்

ஆள்கூறுகள்: 15°N 101°E / 15°N 101°E / 15; 101
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சயாம்
Siam
கொடி of
கொடி
சின்னம் of
சின்னம்
தலைநகரம்பாங்காக்
ஆட்சி மொழி(கள்)தாய் (மொழி)
அதிகாரபூர்வ
வர்வடிவம்
தாய் எழுத்து
அரசாங்கம்முடியாட்சி
• மன்னர்
வச்சிரலோங்கோன்
(Vajiralongkorn)
(Rama X)
தோற்றம்
1238–1448
1351–1767
1768–1782
6 ஏப்ரல் 1782
• முடியரசு
24 சூன் 1932
துவராவதி
துவாரவதி இராச்சியத்தின் ஆட்சிப் பகுதி.
கெமர் காலத்து விஷ்ணு சிற்பம் 10-ஆம் நூற்றாண்டு
13 மீட்டர் நீளமுள்ள சாய்ந்த புத்தர், நகோன் ராட்சசிமா


சயாம் (ஆங்கிலம்: Siam அல்லது Kingdom of Siam; தாய்: สยาม; தமிழ்: சீயம்) என்பது தாய்லாந்து நாட்டின் பழைய பெயராகும். 1939 ஜூன் 23-ஆம் தேதி வரை தாய்லாந்து நாடு, ’சயாம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது.[1][2]

1939 ஜூன் 24-ஆம் தேதி தாய்லாந்து என்பது அதிகாரபூர்வப் பெயராக மாற்றம் கண்டது. இருப்பினும் மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்து எனும் சொல்லுக்கு மாற்றப்பட்டது.[3]

பொது[தொகு]

சயாம் எனும் பெயர் போர்த்துகீசியர்களிடம் இருந்து வந்து இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. அயுத்தயா இராச்சியத்தின் அரசர் பிரம்ம திரிலோக நாதன் (Boromma Tri Lokkanat), தீபகற்ப மலேசியாவின் தெற்கு முனையில் உள்ள மலாக்கா சுல்தானகத்திற்கு 1455-ஆம் ஆண்டில் ஓர் அரசக் குழுவை அனுப்பியதாகப் போர்த்துகீசிய காலச்சுவடுகள் (Portuguese Chronicles) குறிப்பிடுகின்றன.[2]

1511-இல் மலாக்காவைக் கைப்பற்றிய பின்னர், போர்த்துகீசியர்கள் அயூத்தியாவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பினார்கள். அப்போது தாய்லாந்தை சயாம் என்று அழைத்து இருக்கிறார்கள். அந்தப் பெயர் அப்படியே நிலைத்து விட்டது. அதன் பின்னர் அந்தப் பெயரால் அந்தச் சயாம் இராச்சியம் தொடர்ந்து அறியப்படுகிறது.[4] [5]

வெள்ளை யானையின் நிலம்[தொகு]

வாட் ப்ரா பிராங் சாம் யோட் கெமர் கோயில்

பொதுவாக, சயாம் எனும் சொல், தெற்கு தாய்லாந்து உட்பட மத்திய தாய்லாந்தின் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். சயாம் அல்லது சியாம் என்றால், "வெள்ளை யானையின் நிலம்" (The Land of the White Elephant) அல்லது முவாங் தாய் (Muang Thai) நாடு; அல்லது சுதந்திரமான நாடு (Land of the Free) என்று பொருள்படும்.[4][2]

சயாம் எனும் சொல் சியெம், சியாம் அல்லது சியாமா என்றும் எழுதப்பட்டது. சியாமா என்றால் சமக்கிருதத்தில் "இருண்ட" அல்லது "பழுப்பு" எனப் பொருள் படும்.[4]

சுகோத்தாய் இராச்சியம்[தொகு]

வாட் குக்கூட் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை

1238-இல் நிறுவப்பட்ட சுகோத்தாய் இராச்சியத்தின் குறுகிய கால ஆட்சிக்குப் பிறகு, 14-ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயுத்தயா இராச்சியம் (Kingdom of Ayutthaya) எனும் ஓர் ஒருங்கிணைந்த தாய்லாந்து இராச்சியம் நிறுவப்பட்டது.[2]

அந்த இராச்சியம் 1939-ஆம் ஆண்டு வரை சயாம் என்று அழைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளால் ஒருபோதும் கைப்பற்றப் படாத ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு சயாம் நாடு ஆகும்.[6]

சொற்பிறப்பு[தொகு]

ஏறக்குறைய 40,000 ஆண்டுகளுக்கு முன்னர், தாய்லாந்தில் மனித நாகரிகம் பரவியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தென்கிழக்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போன்றே, தாய்லாந்திலும் 1-ஆம் நூற்றாண்டில் புனான் இராச்சியம் தொடக்கம்; 13-ஆம் நூற்றாண்டின் கெமர் பேரரசு வரையில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மத வாரியான தாக்கங்கள் பெருமளவில் இருந்து வந்துள்ளன.[7]

கெமர் பேரரசின் வீழ்ச்சி[தொகு]

சுகோத்தாய் இராச்சியம்
கிபி 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பரப்பு
சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா.
சுகோத்தாய் வரலாற்றுப் பூங்காவில் வாட் மகாதத் கோயில் இடிபாடுகள்.

13-ஆம் நூற்றாண்டில் கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், சயாம் நாட்டில், டாய், மொன், கெமர், மலாய் என வெவ்வேறு பிரிவுகளைக் கொண்ட அரசுகள் உருவாகின.

ஆனாலும், 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் முதலாவது சயாமிய நாடு என்பது 1238-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுகோத்தாய் நாடு தான் எனக் கருதப்படுகிறது.

அயுத்தயா இராச்சியம்[தொகு]

கெமர் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கிய பின்னர், பௌத்த தாய்லாந்து இராச்சியங்களான சுகோத்தாய், லான்னா இராச்சியம், லான் காங் (இன்றைய லாவோஸ்) என்பன எழுச்சி பெற்று வந்தன.

ஆனாலும், 14-ஆம் நூற்றாண்டின் மத்தியில் சாவோ பிரயா ஆறு பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்ட அயுத்தயா இராச்சியம்; ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர், சுகோத்தாய் இராச்சியத்தின் வலிமையைக் குன்றச் செய்து விட்டது. அந்தக் காலக் கட்டத்தில், ஆசியாவிலேயே அயுத்தயா இராச்சியம் ஒரு முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்தது.

ஐரோப்பிய வணிகர்களின் வருகை[தொகு]

சயாமில் ஐரோப்பிய வணிகர்களின் வருகை 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. முதலில் போர்த்துக்கீசியர்; பின்னர் பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயரும் வரத் தொடங்கினர்.

1767-இல் அயுத்தயா இராச்சியம் பர்மியர்களிடம் வீழ்ச்சி அடைந்த பின்னர், அயுத்தயா மன்னர் தக்சின் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு தாய்லாந்தின் தலைநகரை தோன்புரிக்கு மாற்றினார். தற்போதைய தாய்லாந்தின் இரத்தனகோசின் காலம் 1782-ஆம் ஆண்டில் ஆரம்பமானது. அப்போது சக்கிரி வம்சத்தின் முதலாம் இராமாவின் ஆட்சியில் பேங்காக் தலைநகரானது.

சயாம் மரண இரயில்பாதை[தொகு]

அயுத்தயா இராச்சியம்
1540-இல் சயாம்
அயுத்தயா காலத்து வரைப்படம்
1540-இல் அயூத்தியா காலத்தில் கட்டப்பட்ட பௌத்த ஆலயம்].
செப்டம்பர் 1945-இல், பாங்காக்கில் நிராயுதபாணிகளான ஜப்பானிய வீரர்கள்

நேச அணி கூட்டுப் படைகளுக்கு எதிரான ஜப்பானின் படையெடுப்புகளுக்கு தாய்லாந்து உதவியது. அதே காலக் கட்டத்தில், தாய்லாந்து விடுதலைக்கான ஓர் இயக்கம் (ஆங்கிலம்: Free Thai Movement; தாய்: เสรีไทย); ஜப்பானிய ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப் படைகளுடன் சேர்ந்து போராடி வந்தது. இந்த இயக்கத்தை அப்போதைய அமெரிக்காவிற்கான தாய்லாந்து தூதர் செனி பிரமோஜ் (Seni Pramoj) என்பவர் 1942 சனவரி மாதம் தோற்றுவித்தார்.

போர்க் காலத்தில் 200,000 ஆசியக் கட்டாயத் தொழிலாளர்கள் மற்றும் 60,000 கூட்டுப் படைப் போர்க் கைதிகள் தாய்லாந்து-பர்மிய சயாம் மரண இரயில்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.[8] இரண்டாம் உலகப் போரின் முடிவில், தாய்லாந்து அமெரிக்காவின் கூட்டணியில் இணைந்தது.

1932-ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை அடுத்து முழுமையான மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அன்று முதல் தாய்லாந்து 17 அரசியலமைப்புச் சட்டங்களைக் கண்டுள்ளது.[9][10] இக்காலக் கட்டத்தில் இராணுவ ஆட்சிகளும், சனநாயக ஆட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், அனைத்து அரசுகளும் மரபுவழி அரசர்களைத் தமது நாட்டுத் தலைவராக ஏற்றுக் கொண்டன.

சுகோத்தாய் இராச்சியம்[தொகு]

1932-ஆம் ஆண்டுக்கு முன்னர், சயாம் இராச்சியம் ஒரு அரசியலமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அனைத்து அரசியல் அதிகாரங்களும் மன்னரிடத்திலேயே இருந்தன.

12-ஆம் நூற்றாண்டில் சுகோத்தாய் இராச்சியம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து சயாமிய மன்னர் "தர்ம வழி கொண்டு ஆட்சி நடத்துபவர்" அல்லது "தர்மராசா" என அழைக்கப்பட்டார்.[11]

இரத்தம் சிந்தாப் புரட்சி[தொகு]

1932 சூன் 24-ஆம் தேதி, பொது மக்களையும் இராணுவத்தினரையும் கொண்ட கானா ரத்சோதான் (Khana Ratsadon) குழு, இரத்தம் சிந்தாப் புரட்சி (Siamese Revolution) ஒன்றை நடத்தி வெற்றி கண்டனர்.

இதனை அடுத்து 150 ஆண்டு காலம் பதவியில் இருந்த சக்கிரி வம்சம் (Chakri Dynasty) ஒரு முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக அரசியல்சட்ட முடியாட்சி முறை கொண்டு வரப்பட்டது.

காட்சியகம்[தொகு]

தாய்லாந்து மூன்று தலைவர்கள், 1947–1957
பீல்ட் மார்சல்
பிளேக் பிபுன்சோங்க்ராம்
பீல்ட் மார்சல்
சானித் தானாராத்
போலீஸ் ஜெனரல்.
பாவோ சியானோன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "After the short-lived kingdom of Sukhothai founded in 1238, a unified Thai kingdom (Ayutthaya) was established in the mid-14th century; it was known as Siam until 1939. Thailand is the only southeast Asian country never have been taken over by a European power". www.nationsonline.org. பார்க்கப்பட்ட நாள் 26 September 2022.
  2. 2.0 2.1 2.2 2.3 Campos 1941, ப. 119
  3. history.htm Thailand (Siam) History, CSMngt-Thai.
  4. 4.0 4.1 4.2 Eliot, Charles (1921). The Project Gutenberg EBook of Hinduism and Buddhism, An Historical Sketch, Vol. 3 (of 3) [EBook #16847]. London: Routledge & Kegan Paul Ltd.. பக். Ch. xxxvii 1; citing in turn Footnote 189: The name is found on Champan inscriptions of 1050 A.D. and according to Gerini appears in Ptolemy Samarade = Sâmaraṭṭha. See Gerini, Ptolemy, p. 170. But Samarade is located near Bangkok and there can hardly have been Tais there in Ptolemy's time; and Footnote 190: So too in Central Asia Kustana appears to be a learned distortion of the name Khotan, made to give it a meaning in Sanskrit.. 
  5. Wright & Breakspear 1908, ப. 18
  6. Wright & Breakspear 1908, ப. 18
  7. Thailand. History.
  8. Werner Gruhl, Imperial Japan's World War Two, 1931–1945, Transaction Publishers, 2007 ISBN 978-0-7658-0352-8
  9. The Council of State, Constitutions of Thailand.
  10. Thanet Aphornsuvan, The Search for Order: Constitutions and Human Rights in Thai Political HistoryPDF (152 KB), 2001 Symposium: Constitutions and Human Rights in a Global Age: An Asia Pacific perspective
  11. Edmund Roberts (diplomat) (1837). "Chapter XIX―titles of the king". Embassy to the Eastern courts of Cochin-China, Siam, and Muscat : in the U. S. sloop-of-war Peacock ... during the years 1832-3-4. Harper & brothers. பக். 302. https://archive.org/details/embassytoeaster00unkngoog. பார்த்த நாள்: 28 January 2013. 

நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thai monarchy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயாம்&oldid=3778651" இலிருந்து மீள்விக்கப்பட்டது