பாலிங் மாவட்டம்
பாலிங் மாவட்டம் | |
---|---|
Baling District | |
மலேசியா | |
கெடா மாநிலத்தில் பாலிங் மாவட்டம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°40′N 100°55′E / 5.667°N 100.917°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | பாலிங் மாவட்டம் |
தொகுதி | பாலிங் |
நகராட்சி | பாலிங் நகராட்சி மன்றம் (பாலிங் நகரம்) |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சுகைமி அப்துல் ரஹ்மான் (Shuhaimie Abdul Rahman) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,530 km2 (590 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,33,403 |
• மதிப்பீடு (2015) | 71,300 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
இடக் குறியீடு | +6-04 |
வாகனப் பதிவு | K |
பாலிங் மாவட்டம் என்பது (மலாய்:Daerah Baling; ஆங்கிலம்:Baling District; சீனம்:华玲县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரத்தின் பெயர் பாலிங். பாலிங் நகரம், பாலிங் மக்களவை தொகுதியின் தலைமை நகரமாகவும் உள்ளது.[1][2]
இந்த மாவட்டம் கெடா மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டார் நகரில் இருந்து ஏறக்குறைய 110 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டத்திற்குத் தெற்கே பேராக் மாநிலம்; வடக்கே தாய்லாந்து நாட்டின் பெத்தோங் நகரம் உள்ளன.
வரலாறு
[தொகு]மலேசிய வரலாற்றில் சிறப்பு பெற்ற மாவட்டங்களில் பாலிங் மாவட்டமும் ஒன்றாகும். 1948-ஆம் ஆண்டில் இருந்து 1960-ஆம் ஆண்டு வரை, மலாயா கம்னியூஸ்டுப் போராளிகளுக்கு எதிராகப் பாலிங் மாவட்டத்தில் அவசரகாலப் பிரகடனம் செய்யப் பட்டது.
மலாயா வரலாற்றில் புகழ்பெற்ற பாலிங் பேச்சுவார்த்தை இங்குதான் நடைபெற்றது. மலாயா கம்னியூஸ்டு கட்சிக்கும் மலாயா அரசாங்கத்திற்கும் இடையே அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.[3]
மலாயா அவசரகால நிலைமையைத் தீர்க்கும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான், டத்தோ டான் செங் லோக், சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.[4][5]
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின் பெங்; அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் ரசீட் மைடின்; மத்திய பிரசார அமைப்பின் தலைவர் சென் தியென் கலந்து கொண்டனர்.[6]
ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு. ஆனால், சின் பெங் முன்வைத்தக் கோரிக்கைளை மலாயா அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
அதே சமயத்தில் சரணடைதல் விதிமுறைகளை மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]பாலிங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.
- பாக்காய் (Bakai)
- பொங்கோர் (Bongor)
- பாலிங் நகரம் (Baling Town)
- குப்பாங் (Kupang)
- பூலாய் (Pulai)
- சியோங் (Siong)
- தாவார் (Tawar)
- தெலோய் கானான் (Teloi Kanan)
மலேசிய நாடாளுமன்றம்
[தொகு]மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) பாலிங் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P16 | பாலிங் | அசான் சாட் | பெரிக்காத்தான் நேசனல் |
பாலிங் மாநிலச் சட்டமன்றம்
[தொகு]கெடா மாநிலச் சட்டமன்றத்தில் பாலிங் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P16 | N30 | பாயூ | அப்துல் நாசிர் இட்ரிஸ் | பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) |
P16 | N31 | குப்பாங் | டத்தோ நாஜ்மி அகமட் | பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) |
P16 | N32 | கோலா கெட்டில் | கேப்டன் மன்சுர் சக்காரியா | பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) |
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kulim
- Kulim’s Municipal Council Website
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MAJLIS DAERAH BALING – Portal PBT Kedah". pbt.kedah.gov.my. பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
- ↑ "Baling District". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
- ↑ L, Klemen; et al. (1999–2000). "Seventy minutes before Pearl Harbor – The landing at Kota Bharu, Malaya, on December 7, 1941". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942.
- ↑ The Baling Talks were held in Malaya in 1956 in an attempt to resolve the Malayan Emergency situation. The main participants were Chin Peng, David Marshall and Tunku Abdul Rahman.
- ↑ The 1955 Baling Talks. Singapore Arts Festival 2011.
- ↑ பாலிங் பேச்சுவார்த்தை தொடர்பான காணொலி.