பொக்கோ சேனா (மக்களவை தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொக்கோ சேனா (P008)
மலேசிய மக்களவை தொகுதி
கெடா
Pokok Sena (P008)
Federal Constituency in Kedah
கெடா மாநிலத்தில் பொக்கோக் சேனா மக்களவை தொகுதி
மாவட்டம்பொக்கோ சேனா மாவட்டம்; கோத்தா ஸ்டார் மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிபொக்கோ சேனா தொகுதி
முக்கிய நகரங்கள்அலோர் ஸ்டார்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அகமத் யாகயா
(Ahmad Yahya)
வாக்காளர்கள் எண்ணிக்கை114,838[1][2]
தொகுதி பரப்பளவு322 ச.கி.மீ[3]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022
2022-இல் பொக்கோ சேனா தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (81.8%)
  சீனர் (15.4%)
  இதர இனத்தவர் (0.4%)

பொக்கோ சேனா மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pokok Sena; ஆங்கிலம்: Pokok Sena Federal Constituency; சீனம்: 波各先那国会议席) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், பொக்கோ சேனா மாவட்டம் (Pokok Sena District); கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District); ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P008) ஆகும்.[4]

பொக்கோ சேனா தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1995-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பொக்கோ சேனா தொகுதி 53 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[5]

பொது[தொகு]

கோத்தா ஸ்டார் மாவட்டம்[தொகு]

கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அலோர் ஸ்டார் உள்ளது.[6]

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம்; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம்; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம்; தெற்கில் யான் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[7]

கோத்தா ஸ்டார் மாவட்டம் 28 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[8]

 • அலோர் மலை (Alor Malai)
 • அலோர் மேரா (Alor Merah)
 • அனாக் புக்கிட் (Anak Bukit)
 • புக்கிட் பினாங் (Bukit Pinang)
 • டெர்கா (Derga)
 • குனோங் (Gunong)
 • ஊத்தான் கம்போங் (Hutan Kampung)
 • காங்கோங் (Kangkong)
 • கோத்தா ஸ்டார் (Kota Setar)
 • கோலா கெடா (Kuala Kedah)
 • குபாங் ரோத்தான் (Kubang Rotan)
 • லங்கார் (Langgar)
 • லெங்குவாசு (Lengkuas)
 • லெப்பை (Lepai)
 • லிம்போங் (Limbong)
 • மெர்கோங் (Mergong)
 • பாடாங் ஆங் (Padang Hang)
 • பாடாங் லாலாங் (Padang Lalang)
 • பெங்காலான் குண்டோர் (Pengkalan Kundor)
 • பும்போங் (Pumpong)
 • சாலா கெச்சில் (Sala Kechil)
 • சுங்கை பாரு (Sungai Baharu)
 • தாஜார் (Tajar)
 • தெபெங்காவ் (Tebengau)
 • தெலாகா மாஸ் (Telaga Mas)
 • தெலோக் செங்கை (Telok Chengai)
 • தெலோக் கெச்சாய் (Telok Kechai)
 • தித்தி காஜா (Titi Gajah)

பொக்கோ சேனா நாடாளுமன்றத் தொகுதி[தொகு]

பொக்கோ சேனா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2022)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கோத்தா ஸ்டார் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
9-ஆவது 1995–1999 வான் அனாபியா
(Wan Hanafiah Wan Mat Saman)
பாரிசான் (அம்னோ)
10-ஆவது 1999–2004 மபுசு உமர்
(Mahfuz Omar)
பாஸ்
11-ஆவது 2004–2008 அப்துல் ரகுமான் இப்ராகிம்
(Abdul Rahman Ibrahim)
பாரிசான் (அம்னோ)
12-ஆவது 2008–2013 மபுசு உமர்
(Mahfuz Omar)
பாஸ்
13-ஆவது 2013–2018
2018 சுயேச்சை
அமாணா
14-ஆவது 2018–2022 பாக்காத்தான் (அமாணா)
15-ஆவது 2022 – தற்போது வரையில் அகமட் யாகயா
(Ahmad Yahaya)
பெரிக்காத்தான் (பாஸ்)

தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
(பொக்கோ சேனா தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
114,838 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
88,976 76.58%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
87,944 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
209 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
823 -
பெரும்பான்மை
(Majority)
31,751 36.10%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்

பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
(பொக்கோ சேனா தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
அகமட் யாகயா
(Ahmad Yahaya)
பெரிக்காத்தான் 52,275 59.44%
மபுசு உமர்
(Mahfuz Omar)
பாக்காத்தான் 20,524 23.34%
நோரான் சாமினி
(Noran Zamini Jamaluddin)
பாரிசான் 14,523 16.51%
நொராயினி சாலே
(Noraini Md Salleh)
வாரிசான் 622 0.71%

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

எண். தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N9 புக்கிட் லாடா
(Bukit Lada)
சலீம் முகமது
(Salim Mahmood)
பெரிக்காத்தான் (பி.என்)
N10 புக்கிட் பினாங்கு
(Bukit Pinang)
வான் ரோமானி வான் சலீம்
(Wan Romani Wan Salim)
பெரிக்காத்தான் (பி.என்)
N11 டெர்கா
(Derga)
தான் கோக் இயூ
(Tan Kok Yew)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]