லங்காவி மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லங்காவி (மக்களவை தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லங்காவி (P004)
மலேசிய மக்களவை தொகுதி
கெடா
Langkawi (P004)
Federal Constituency in Kedah
லங்காவி மக்களவை தொகுதி
மாவட்டம்லங்காவி மாவட்டம்; கெடா
முக்கிய நகரங்கள்லங்காவி; குவா
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமது சுகைமி அப்துல்லா
(Mohd Suhaimi Abdullah)
வாக்காளர்கள் எண்ணிக்கை66,777
தொகுதி பரப்பளவு469 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் லங்காவி தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (90.6%)
  சீனர் (6.8%)
  இதர இனத்தவர் (0.4%)

லங்காவி (மலாய்: Langkawi; ஆங்கிலம்: Langkawi; சீனம்: 兰卡威) என்பது மலேசியா. கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதி (P004) ஆகும்.[1]

லங்காவி தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி, லங்காவி தொகுதி 26 தேர்தல் மாவட்டங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2][3]

பொது[தொகு]

லங்காவி மாவட்டம் என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.

இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவி தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் (Jewel of Kedah; மலாய்: Langkawi Permata Kedah) என்றும் அழைப்பார்கள்.[4]

பந்தாய் செனாங்[தொகு]

இந்தத் தீவுக் குழும மாவட்டம், வடமேற்கு மலேசியாவின் கடற்கரையில், தாய்லாந்து எல்லையை ஒட்டி உள்ள கோ தருடா (Ko Tarutao) எனும் தீவிற்கு சில கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது.

லங்காவி தீவு கெடாவின் நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாகும். குவா அதன் பெரிய நகரமாக உள்ளது. லங்காவிக்கு அருகாமையில் அமைந்து இருக்கும் பந்தாய் செனாங் (Pantai Cenang) தீவு, மிகவும் பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாப் பகுதியாகும்.[5]

சுற்றுலா மையm[தொகு]

இந்தத் தீவுகள் கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகும். லங்காவி தீவு தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது. இதன் மக்கள் தொகை 64,792. லங்காவி தீவிற்கு அருகாமையில் உள்ள தூபா தீவில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.[6]

மற்றத் தீவுகளில் மனிதக் குடியேற்றம் இல்லை. லங்காவித் தீவில் பெரிய பட்டணம் துவா ஆகும். லங்காவி தீவு ஒரு தீர்வையற்ற சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.

லங்காவி நாடாளுமன்றத் தொகுதி[தொகு]

லங்காவி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
லங்காவி தொகுதி ஜெர்லுன்-லங்காவி தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டு, லங்காவி தொகுதி என மறுபெயரிடப்பட்டது
9-ஆவது 1995–1999 அபுபக்கர் தாயிப்
(Abu Bakar Taib)
பாரிசான் (அம்னோ)
10-ஆவது 1999–2004
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2018 நவாவி அகமத்
(Nawawi Ahmad)
14-ஆவது 2018–2022 மகாதீர் பின் முகமது
(Mahathir Mohamad)
பாக்காத்தான் (பெர்சத்து)
2020 பாக்காத்தான் (பெர்சத்து)
சுயேட்சை
2020–2022 பெஜுவாங்
15-ஆவது 2022–தற்போது முகமது சுகைமி அப்துல்லா
(Mohd Suhaimi Abdullah)
பெரிக்காத்தான் (பெர்சத்து)

தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
(லங்காவி தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள் 66,777 100.00%
வாக்களித்தவர்கள் 48,123 71.10%
செல்லுபடி வாக்குகள் 47,480 -
செல்லாத வாக்குகள் 643 -
வேட்பாளர் விவரங்கள்
சின்னம் வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
முகமது சுகைமி அப்துல்லா
(Mohd Suhaimi Abdullah)
பெரிக்காத்தான் 25,463 53.63%
அர்மிசா சிராட்
(Armishah Siradj)
பாரிசான் 11,945 25.16%
சாபிதி யாகயா
(Zabidi Yahya)
பாக்காத்தான் 5,417 11.41%
மகாதீர் பின் முகமது
(Mahathir Mohamad)
உள்நாட்டு போராளிகள் கட்சி 4,566 9.62%
அப்துல் காதிர் சைனுதீன்
(Abd Kadir Sainudin)
சுயேட்சை 89 0.19%

மேற்கோள்கள்[தொகு]

  1. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 2022-10-31.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 2. Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Pantai Cenang - Everything you Need to Know About Pantai Cenang". langkawi-info.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-03.
  5. Charles de Ledesma; Mark Lewis; Pauline Savage (2006). the Rough Guide to Malaysia, Singapore and Brunei (5th ). Rough Guides. பக். 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84353-687-1. https://books.google.com/books?id=hS0_GehsGPwC&pg=PA218. 
  6. "Langkawi Eagle Square - Dataran Lang". Langkawi Insight.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்காவி_மக்களவை_தொகுதி&oldid=3894219" இலிருந்து மீள்விக்கப்பட்டது