பந்தாய் மெர்டேக்கா

ஆள்கூறுகள்: 5°39′58″N 100°22′3″E / 5.66611°N 100.36750°E / 5.66611; 100.36750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்தாய் மெர்டேக்கா
Pantai Merdeka
கெடா
Map
ஆள்கூறுகள்: 5°39′58″N 100°22′3″E / 5.66611°N 100.36750°E / 5.66611; 100.36750
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்கோலா மூடா
தொகுதிசுங்கை பட்டாணி
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு08500
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்K

பந்தாய் மெர்டேக்கா (மலாய் மொழி: Pantai Merdeka; ஆங்கிலம்: Merdeka Beach; சாவி: ڤنتاي مرديک) என்பது மலேசியா, கெடா, கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) உள்ள ஒரு கடற்கரை நகரம். மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற கடற்கரைகளில் இந்தக் கடற்கரையும் ஒன்றாகும்.

சுங்கை பட்டாணி நகரில் இருந்து ஏறக்குறைய 35 கி.மீ. தொலைவில் இந்தக் கடற்கரை நகரம் உள்ளது.[1]

கெடா மாநிலத்தின் ஒரே மணல் கடற்கரை இதுவாகும். வடக்கு பினாங்கு மற்றும் கெடா மாநிலம் முழுவதிலும் இருந்து வரும் கடற்கரைப் பிரியர்களுக்கு இந்த இடம் ஒரு முக்கிய ஈர்ப்பாகும். கம்போங் தெப்பி சுங்கை (Kampung Tepi Sungai), கோத்தா கோலா மூடா (Kota Kuala Muda), பந்தாய் மெர்டேக்கா (Pantai Merdeka) மற்றும் புலாவ் சயாக் (Pulau Sayak) ஆகிய கடற்கரை பகுதிகளில் பல்வேறு கடல் உணவுகள் கிடைக்கின்றன.

பொது[தொகு]

1970-களின் முற்பகுதியில், கெடா மாநிலம் மற்றும் செபராங் பிறை நகரத்தில் இருந்து பொதுமக்களை இந்தக் கடற்கரை ஈர்த்தது. அதன்பிறகு அங்கு ஏற்பட்ட கடல் அரிப்பு காரணமாக கடற்கரையின் பிரபலம் குறைந்தது.

அண்மைய காலங்களில் யான் மாவட்டத்தின் பந்தாய் முர்னி மற்றும் பட்டர்வொர்த் பந்தாய் பெர்சே ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரைகளை பொதுமக்கள் தேர்வு செய்கிறார்கள்.[2]

சாலை வழியாக 80 கி.மீ[தொகு]

இதன் காரணமாக 1989-இல் பந்தாய் மெர்டேக்கா கடற்கரையில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட்டன.[3] மெர்போக் ஆற்றின் குறுக்கே ஒரு படகுப் பயணச் சேவை பந்தாய் மெர்டேக்காவை தஞ்சோங் டாவாய் என்ற ஒரு சிறிய நகரத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக பந்தாய் மெர்டேக்காவிற்குச் செல்வது என்றால் 80 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டும்.[4]

காட்சியகம்[தொகு]


மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தாய்_மெர்டேக்கா&oldid=3923917" இலிருந்து மீள்விக்கப்பட்டது