மோரிப்

ஆள்கூறுகள்: 2°44′54.88″N 101°26′35.8″E / 2.7485778°N 101.443278°E / 2.7485778; 101.443278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோரிப்
Morib
சிலாங்கூர்
1945-ஆம் ஆண்டு மோரிப்பில் தரையிறங்கிய பிரித்தானிய; இந்திய இராணுவ விடுதலைப் படைகளுக்கான நினைவுச்சின்னம்
1945-ஆம் ஆண்டு மோரிப்பில் தரையிறங்கிய பிரித்தானிய; இந்திய இராணுவ விடுதலைப் படைகளுக்கான நினைவுச்சின்னம்
மோரிப் is located in மலேசியா
மோரிப்

      மோரிப்       மலேசியா
ஆள்கூறுகள்: 2°44′54.88″N 101°26′35.8″E / 2.7485778°N 101.443278°E / 2.7485778; 101.443278
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோலா லங்காட் மாவட்டம்
நிர்வாக மையம்பந்திங்
அரசு
 • ஊராட்சிகோலா லங்காட் ஊராட்சி
(Kuala Langat District Council)
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு42700
தொலைபேசி எண்கள்++60-03 3198
போக்குவரத்துப் பதிவெண்கள்B

மோரிப் (Morib, மலாய்: Morib; சீனம்: 摩立) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற கடற்கரைச் சுற்றுலா தளமான மோரிப் கடற்கரை இந்த நகர்ப் பகுதியில் தான் உள்ளது.[1] மோரிப் நகரம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தென்மேற்கே 72 கி.மீ.; கிள்ளான் நகரில் இருந்து தெற்கே 32 கி.மீ.; பந்திங் நகரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

1945 செப்டம்பர் 9-ஆம் தேதி, சிப்பர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மோரிப் கடற்கரையில் தரையிறங்கிய இந்திய இராணுவ விடுதலைப் படையைச் சேர்ந்த 42,651 போர் வீரர்களுக்காக, இங்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் ஆண்டுதோறும் அந்த நினைவுச் சின்னத்திற்கு சிறப்பு வழிபாடுகளும் நிகழ்த்தப்படுகின்றன.[2]

மோரிப் கடற்கரை[தொகு]

மோரிப் கடற்கரை, பந்திங் நகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சிம்பாங் மோரிப் அருகே அமைந்துள்ள அமைதியான விடுமுறை இடமாகும். கடற்கரையில் ஓய்வெடுக்கவும் சுத்தமான கடல் காற்றை அனுபவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.[3] இதனால் மோரிப் கடற்கரை, "மலேசியாவின் தங்கக் கடற்கரை" என்றும் அழைக்கப் படுகிறது. இது மலாக்கா நீரிணையை நோக்கி 22 கி.மீ. நீளமுள்ள கடற்கரை முகப்பைக் கொண்டுள்ளது.

சிறுவர் பெரியவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகள் மற்றும் உணவு வளாகங்கள் போன்ற வசதிகளுடன்; பொழுதுபோக்கு பூங்காவுடன் மோரிப் கடற்கரையோரம் உருவாக்கப்பட்டு உள்ளது.[4]

வரலாறு[தொகு]

இந்திய இராணுவத்தின் 46-ஆவது பட்டாளம்[தொகு]

பிரித்தானிய இந்திய இராணுவப் படையினர்

இரண்டாம் உலகப் போரின் முடிவில், 1945 செப்டம்பர் 9-ஆம் தேதி, மலாயாவில் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் விடுதலைப் படைகள் தரையிறங்கிய முதல் இடங்களில் மோரிப் கடற்கரையும் ஒன்றாகும். அந்தத் தரையிறக்கத்திற்கு சிப்பர் நடவடிக்கை என்று பெயர். இந்திய இராணுவத்தின் 46-ஆவது பட்டாளத்தின் 42,651 இராணுவ வீரர்கள் இங்கு தரையிறக்கப் பட்டனர். மற்றும் 3698 கவச வாகனங்களும் தரையிறக்கப் பட்டன. இரண்டாம் உலகப் போரில் சப்பானியர்களின் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்தத் தரையிறக்கம் அமைந்தது.

இந்திய இராணுவத்தின் 50-ஆவது கவசப் படை[தொகு]

இதுவே மலாயாவில் மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு முன்னோடியாகவும் அமைந்தது. அங்கு தரையிறங்கிய போர் வீரர்களில் 21 வயதான சியா-உல்-ஹக் என்பவரும் ஒருவர். இவர் 50-ஆவது இந்திய இராணுவத்தின் கவசப் படையின் இரண்டாவது லெப்டினன்ட் பதவி வகித்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு 1978-இல் பாகிஸ்தானின் 6-ஆவது அரசுத்தலைவராக பதவியேற்றார்.

நினைவுச் சின்னம்[தொகு]

இந்திய இராணுவ விடுதலைப் படையை சேர்ந்த போர் வீரர்களுக்காக, இங்கு 1947-ஆம் ஆண்டில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு உள்ளது. சரியான கண்காணிப்பு இல்லாததால் அந்தச் சின்னம் காலப் போக்கில் சிதைக்கப்பட்டது. இருப்பினும் 1998-ஆம் ஆண்டில் அதே இடத்தில் அதே நினைவுச்சின்னம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அத்துடன் ஆண்டுதோறும் அந்த நினைவுச் சின்னத்திற்கு சிறப்பு வழிபாடுகளும் செய்யப் படுகின்றன.[2]

சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி[தொகு]

மோரிப் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 135 மாணவர்கள் பயில்கிறார்கள்; 15 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD1058 சிம்பாங் மோரிப் SJK(T) Simpang Morib[6] சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி 42700 பந்திங் 135 15

காட்சியகம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pantai Morib is a great holiday destination located near Simpang Morib, about 10km from the town of Banting. It is a pleasant and peaceful place where everyone can relax and enjoy by the ocean. It is a famous tourist attraction, thus also known as Malaysia's Gold Coast". பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
  2. 2.0 2.1 "Morib Beach which today is a popular picnic spot in Banting, Selangor saw one of the largest landings in history code named "Operation Zipper" which marked the return of British forces to Malaya". 8 September 2019. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
  3. "Located within a 30-minutes drive from Klang, Morib Beach is a popular recreational spot surrounded by whispering Casuarinas and swaying palms. At low tide, the shore stretches far into the Straits of Malacca". பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
  4. trips, Filed under Day; Langat, Kuala (5 April 2017). "As one of the nearest beaches to Kuala Lumpur, Pantai Morib or Morib Beach is an ideal spot for city dwellers in search of a quick weekend getaway by the sea. Kuala Langat's Morib Beach has a shoreline spanning approximately 3 km, shaded by whispering Casuarinas and swaying palms". Visit Selangor.
  5. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  6. "சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி". sjktsimpangmorib2.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரிப்&oldid=3750910" இலிருந்து மீள்விக்கப்பட்டது