குவார் செம்படாக்
குவார் செம்படாக் | |
---|---|
Guar Chempedak | |
கெடா | |
ஆள்கூறுகள்: 5°52′N 100°28′E / 5.867°N 100.467°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | யான் |
நாடாளுமன்றம் | ஜெராய் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 08800 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
குவார் செம்படாக் (மலாய்: Guar Chempedak; ஆங்கிலம்: Guar Chempedak; சீனம்: 瓜尔豆) மலேசியா, கெடா மாநிலத்தில், யான் மாவட்டத்தில் (Yan District), ஜெராய் மக்களவை தொகுதியில் (Jerai Federal Constituency) அமைந்துள்ள ஒரு சிறு நகரம்.[2]
அலோர் ஸ்டார் மாநகருக்கும் சுங்கை பட்டாணி பெருநகருக்கும் இடையில்; குரூண் நகருக்கு வடக்கில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற நகரமாக அறியப்படுகிறது.
பொது
[தொகு]கெடாவின் பிரபலமான இயற்கை நீர்வீழ்ச்சிகள் இந்த நகருக்கு அருகில் உள்ளன.
- செரி பெரிகி நீர்வீழ்ச்சி (Seri Perigi)[3]
- தாங்கா கெனாரி நீர்வீழ்ச்சி (Tangga Kenari)
- தித்தி அயூன் நீர்வீழ்ச்சி (Titi Hayun)[4]
- பத்து அம்பார் நீர்வீழ்ச்சி (Batu Hampar)[5]
- புத்திரி மண்டி நீர்வீழ்ச்சி (Puteri Mandi)[6]
யான் மாவட்டம்
[தொகு]யான் மாவட்டத்தின் வடக்கே கோத்தா ஸ்டார் மாவட்டம், வடகிழக்கில் பெண்டாங் மாவட்டம் மற்றும் தெற்கே கோலா மூடா மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
யான் மாவட்டம் மலாக்கா நீரிணையின் கடற்கரைப் பகுதியில் உள்ளது. இது கெடா மாநிலத்தின் மிகச் சிறிய மாவட்டம் ஆகும். "யான் பெசார்" என்பது யான் மாவட்டத்தின் நிர்வாக நகரமாகும். யான் பெசார் நகரத்தில் காவல் நிலையங்கள், கீழ்நிலை நீதிமன்றம், மாவட்ட அலுவலகம் மற்றும் நில அலுவலகம் போன்ற நிர்வாக வசதிகள் உள்ளன.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]கெடாவில் மிக உயரமான சிகரம் கொண்ட ஜெராய் மலை இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. 1242 மீட்டர்கள் (3,235 அடி) உயரம் கொண்டது. ஜெராய் மலையின் உச்சிக்கு தித்தி அயூன் நீர்வீழ்ச்சியின் வழியாகப் படிக்கட்டுகளின் மூலம் ஏறிச் செல்லலாம்.
யான் மாவட்டம் 5 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[7]
- துலாங் (Dulang)
- சாலா பெசார் (Sala Besar)
- சிங்கீர் (Singkir)
- சுங்கை டவுன் (Sungai Daun)
- யான் (Yan)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GPS coordinates of Guar Chempedak, Malaysia. Latitude: 5.8667 Longitude: 100.4667". Latitude.to, maps, geolocated articles, latitude longitude coordinate conversion. (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 June 2023.
- ↑ "Guar Chempedak is a small town in Yan District, Kedah. It is a rural community located midway between Alor Setar and Sungai Petani; just north of Gurun". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 June 2023.
- ↑ Seri Perigi பரணிடப்பட்டது 2009-04-28 at the வந்தவழி இயந்திரம் at visitkedah.com.my
- ↑ Titi Hayun பரணிடப்பட்டது 2009-04-29 at the வந்தவழி இயந்திரம் at visitkedah.com.my
- ↑ Batu Hampar பரணிடப்பட்டது 2008-06-12 at the வந்தவழி இயந்திரம் at visitkedah.com.my
- ↑ Puteri Mandi பரணிடப்பட்டது 2008-12-06 at the வந்தவழி இயந்திரம் at mdy.gov.my
- ↑ "Kod dan Nama Sempadan Pentadbiran Tanah, Unique Parcel Identifier (UPI) KEDAH" (PDF). Jawatankuasa Teknikal Standard MyGDI (JTSM). 2011.
{{cite web}}
: CS1 maint: url-status (link)
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Yan District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.