பீடோங்
பீடோங் | |
---|---|
Bedong | |
கெடா | |
ஆள்கூறுகள்: 5°43′48″N 100°31′12″E / 5.73000°N 100.52000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | கோலா மூடா |
நாடாளுமன்றம் | ஜெராய் |
நகரத் தோற்றம் | 1900-களில் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 08100 |
மலேசியத் தொலைபேசி எண் | +6044 (தரைவழித் தொடர்பு) |
பீடோங் (மலாய்: Bedong; ஆங்கிலம்: Bedong; சீனம்: 美农) மலேசியா, கெடா மாநிலத்தின் கோலா மூடா மாவட்டத்தில்; ஜெராய் மக்களவை தொகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.
இந்த நகரம் சுங்கை பட்டாணி நகரில் இருந்து 12 கி.மீ. வடக்கே உள்ளது. பீடோங் ஒரு துணை மாவட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்குதான் ம.இ.காவின் கல்விக் கழகமான ஏய்ம்ஸ்ட் மருத்துவப் பல்கலைக்கழகமும் (AIMST University) உள்ளது.
பொது
[தொகு]பூஜாங் பள்ளத்தாக்கு எனும் வரலாற்றுப் புகழ் பூஜாங் பள்ளத்தாக்கு, ஜெராய் மலை ஆகியவற்றின் நுழைவாயிலாகவும் பீடோங் நகரம் விளங்கி வருகிறது. 1900-களில் பீடோங் புறநகர்ப் பகுதியில் நிறைய ரப்பர் தோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாய் கொண்டு வரப்பட்டனர்.
1970-ஆம் ஆண்டுகளுக்கு முன்னால் பீடோங்கைச் சுற்றிலும் நிறைய செம்பனைத் தோட்டங்களும் இருந்தன. நில மேம்பாட்டுத் திட்டங்கள், நகரமயத் திட்டங்கள், நவீனமயமாக்க நடைமுறைகளினால் இப்போது அந்தத் தோட்டங்கள் மூடப் பட்டு விட்டன. அங்கு வேலை செய்தவர்களில் பெரும்பாலோர் நகர்ப்புறங்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.
எய்மிஸ்ட் மருத்துவப் பல்கலைக்கழகம்
[தொகு]இந்திய மாணவர்களுக்கு உயர்க் கல்வியில் அதிக வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது ‘எய்மிஸ்ட்” (AIMST - Asian Institute of Medicine, Science and Technology) பல்கலைக்கழகம் ஆகும். கீழ்க்காணும் கல்விக் கழகங்களுடன் இணைந்து மருத்துவர்களையும் மருத்துவத் தொழில்நுட்பர்களையும் உருவாக்கி வருகிறது.
- பிரிஸ்டல் பல்கலைக்கழகம் (University of Bristol) இங்கிலாந்து
- லா துரோபே பல்கலைக்கழகம், (La Trobe University) ஆஸ்திரேலியா
- கிரிபித் பல்கலைக்கழகம் (Griffith University)
- குயின்ஸ்லேண்ட் தொழில்நுட்பப் பலகலைக்கழகம் (Queensland University of Technology for Biotechnology)
கல்வி வளர்ச்சிக் கழகம்
[தொகு]ம.இ.காவின் கல்விக் கரமாக விளங்கி வரும் மாஜு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் (Maju Institute of Educational Development (MIED) 2001 மார்ச் 21-ஆம் தேதி இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.[1] ம.இ.காவின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ உத்தாமா ச. சாமிவேலு அவர்களின் அரும் முயற்சிகளினால் இந்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
சுங்கை பட்டாணி அருகே செமிலிங் என்ற இடத்தில் இந்தப் பல்கலைக்கழகம் இப்போது செயல்பட்டு வருகிறது. ஆங்கில மொழியைப் போதனா மொழியாகக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில், தற்சமயம் 3200 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
சுங்கை பட்டாணி நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அலோர் ஸ்டார் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இந்தக் கல்விக்கழகம் அமைந்து உள்ளது.
பீடோங் வட்டாரத் தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]மலேசியா; கெடா; கோலா மூடா மாவட்டம்; பீடோங் வட்டாரத்தில் (Kuala Muda District) மொத்தம் 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1113 மாணவர்கள் பயில்கிறார்கள். 144 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBD3074 | பீடோங் | SJK(T) Bedong | பீடோங் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 275 | 27 |
KBD3075 | ஆர்வார்ட் தோட்டம் 1 | SJK(T) Harvard Bhg I | ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1 | 08100 | பீடோங் | 110 | 14 |
KBD3076 | ஆர்வார்ட் தோட்டம் 2 | SJK(T) Harvard 2 | ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2 | 08100 | பீடோங் | 20 | 8 |
KBD3077 | ஆர்வார்ட் தோட்டம் 3 | SJK(T) Ladang Harvard Bhg 3 | ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3 | 08100 | பீடோங் | 73 | 10 |
KBD3078 | சுங்கை பத்து தோட்டம் | SJK(T) Ldg Sg Batu | சுங்கை பத்து தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 20 | 8 |
KBD3079 | சுங்கை போங்கோக் தோட்டம் | SJK(T) Ldg Sungai Bongkok | சுங்கை போங்கோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 23 | 8 |
KBD3080 | சுங்கை புந்தார் தோட்டம் | SJK(T) Ldg Sungai Puntar | சுங்கை புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 35 | 8 |
KBD3081 | சுங்கை தோக் பாவாங் | SJK(T) Sungai Tok Pawang | சுங்கை தோக் பாவாங் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 239 | 24 |
KBD3082 | துப்பா தோட்டம் | SJK(T) Ldg Tupah | துப்பா தோட்டத் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 22 | 9 |
KBD3095 | சுங்கை லாலாங் | SJK(T) Sungai Getah | சுங்கை கெத்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 133 | 13 |
KBD3096 | சுங்கை சாலை | SJK(T) Palanisamy Kumaran | பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி | 08000 | பீடோங் | 152 | 15 |