கிளேபாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளேபாங்
Klebang
Klebang.JPG
நாடுFlag of Malaysia.svg மலேசியா
மாநிலம்Flag of Malacca.svg மலாக்கா
உருவாக்கம்15-ஆம் நூற்றாண்டு
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்மாஸ் எர்மியாத்தி சம்சுடின் (2013 - 2018)
 • சட்டமன்ற உறுப்பினர்லிம் பான் ஹோங்
(2013 - 2018)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு75200
தொலைபேசி குறியீடு06

கிளேபாங் (ஆங்கிலம், மலாய் மொழி: Klebang) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கடற்கரை நகரமாகும். கிளேபாங் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. கிளேபாங் பெசார் (Klebang Besar); கிளேபாங் கெச்சில் (Klebang Kecil) என்பதே அந்த இரு பகுதிகள்.[1]

மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஒரு பகுதியான கிளேபாங், மலாக்கா மாநகரத்திற்கும் சுங்கை ஊடாங் நகரத்திற்கும் நடுவில் அமைந்து உள்ளது. கிளேபாங் பெசார் பகுதியில் கம்போங் புலாவ் காடோங், கம்போங் பெர்மாத்தாங், கம்போங் பாலிக் பூலோ எனும் கிராம்ங்கள் உள்ளன. மலேசியாவில் கிராமங்களைக் கம்போங் என்று அழைக்கிறார்கள்.

கிளேபாங் பெசார் வழியாக செங் நகரைச் சென்றடையலாம். இங்குள்ள கடற்கரை அகலப்படுத்தப் பட்டு, பொழுது போக்கு மையமாக மாற்றம் கண்டுள்ளது. மலாக்காவின் முதலமைச்சராக அலி ரோஸ்தாம் இருக்கும் போது, அந்த விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

கிளேபாங் நகர்ப் பகுதி:

தொலைவில் இருக்கிறது. கிளேபாங்கிற்கு மிக அருகாமையில் இருப்பது மலாக்கா நகரமாகும்.

அருகாமையில் உள்ள இடங்கள்[தொகு]

கிளேபாங்கிற்கு அருகாமையில் உள்ள நகரங்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளேபாங்&oldid=2543530" இருந்து மீள்விக்கப்பட்டது