உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்போக் ஆறு

ஆள்கூறுகள்: 5°41′00″N 100°21′00″E / 5.68333°N 100.35000°E / 5.68333; 100.35000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்போக் ஆறு
Sungai Merbok
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஜெராய் மலை
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மலாக்கா நீரிணை
 ⁃ ஆள்கூறுகள்
5°41′00″N 100°21′00″E / 5.68333°N 100.35000°E / 5.68333; 100.35000
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்45 km (28 mi)
வடிநில அளவு439 km2 (169 sq mi)

மெர்போக் ஆறு என்பது (மலாய்: Sungai Perlis; ஆங்கிலம்: Merbok River) மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு.[1] ஜெராய் மலை (Mount Jerai) மற்றும் சுங்குப் (Sungkap) மலைக்காடுகளில் இந்த ஆற்றின் மூலங்கள் உருவாகின்றன.

மெர்போக் ஆற்றின் மற்ற துணை ஆறுகள் பட்டாணி ஆறு மற்றும் பூஜாங் ஆறு. இந்த ஆற்றின் முகத்துவாரம் சுமார் 2.5 கி.மீ. அகலம் கொண்டது. இந்த ஆறு, பூஜாங் பள்ளத்தாக்க்கின் வரலாற்று நதியாக அறியப் படுகிறது.

பந்தாய் மெர்டேகா[தொகு]

சுங்கை பட்டாணியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சுங்கை மெர்போக் ஆற்றின் முகப்பில் பந்தாய் மெர்டேகா (Pantai Merdeka) எனும் அழகிய கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரைக்குச் செல்வதற்கு திக்காம் பத்து (Tikam Batu) நகரத்தின் வழியாகச் செல்ல வேண்டும்.[2]

பந்தாய் மெர்டேகா மிகவும் பிரபலமான கடற்கரை. வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொதுவாகக் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இங்கு ஒரு பெரிய உணவுக் கூடம் உள்ளது. உணவு வகைகள் மற்றும் பானங்கள், நினைவுப் பொருட்கள், உடைகள், காற்றாடிகள், பொம்மைகள் போன்றவற்றை விற்கும் பல சிறுகடைகளும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sungai Merbok river (Sungai Petani) (Malaysia), the entrance to which is formed between the low coast on the N and the hills to the S, is fronted by the coast mud flat, which has depths under 5.5m, and extends nearly 3 miles to seaward". www.sea-seek.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
  2. "Pantai Merdeka is a beautiful beach at the river mouth of the Sungai Merbok about 30 km from Sungai Petani". பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.

மேலும் காண்க[தொகு]

மலேசிய ஆறுகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்போக்_ஆறு&oldid=3518876" இலிருந்து மீள்விக்கப்பட்டது