ஜெர்லுன் (மக்களவை தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்லுன் (P005)
மலேசிய மக்களவை தொகுதி
கெடா
Jerlun (P005)
Federal Constituency in Kedah
ஜெர்லுன் மக்களவை தொகுதி
மாவட்டம்குபாங் பாசு மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிஜெர்லுன் தொகுதி
முக்கிய நகரங்கள்ஜெர்லுன்; ஜித்ரா
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அப்துல் கனி அகமது
(Abdul Ghani Ahmad)
வாக்காளர்கள் எண்ணிக்கை67,601
தொகுதி பரப்பளவு316 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் ஜெர்லுன் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  இதர இனத்தவர் (1.4%)

ஜெர்லுன் (மலாய்: Jerlun; ஆங்கிலம்: Jerlun; சீனம்: 杰伦) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதி (P005) ஆகும்.

ஜெர்லுன் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி, ஜெர்லுன் தொகுதி 35 தேர்தல் மாவட்டங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1]

பொது[தொகு]

ஜெர்லுன் நகரம்[தொகு]

ஜெர்லுன் நகரம் (Jerlun) கெடா, குபாங் பாசு மாவட்டத்தில் (Kubang Pasu District) உள்ள ஒரு நகரம். பெர்லிஸ் மாநிலத்திற்கு தெற்கே உள்ளது. இது ஒரு கிராமப்புற நகரம்.

இந்த நகரத்திற்கு அருகில் கோலா ஜெர்லுன் எனும் கடற்கரை கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் புகழ்பெற்றது.[2]

ஜெர்லுன் எனும் பெயரில் ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதியும் உள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 14-ஆவது 2018|மலேசியப் பொதுத் தேர்தலில்]] இந்தத் தொகுதியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதி[தொகு]

ஜெர்லுன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
லங்காவி தொகுதி ஜெர்லுன்-லங்காவி தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டு, ஜெர்லுன் தொகுதி என மறுபெயரிடப்பட்டது
9-ஆவது 1995–1999 அனாபி ரம்லி
(Hanafi Ramli)
பாரிசான் (அம்னோ)
10-ஆவது 1999–2004 அபுபக்கர் ஒசுமான்
(Abu Bakar Othman)
பெரிக்காத்தான் (பாஸ்)
11-ஆவது 2004–2008 அப்துல் ரகுமான் அரிபின்
(Abdul Rahman Ariffin)
பாரிசான் (அம்னோ)
12-ஆவது 2008–2013 முக்ரிஸ் மகாதீர்
(Mukhriz Mahathir)
13-ஆவது 2013–2018 ஒசுமான் அசீஸ்
(Othman Aziz)
14-ஆவது 2018–2022 முக்ரிஸ் மகாதீர்
(Mukhriz Mahathir)
பாக்காத்தான் (பெர்சத்து)
2020 பாக்காத்தான் (பெர்சத்து)
சுயேட்சை
2020–2022 பெஜுவாங்
15-ஆவது 2022–தற்போது அப்துல் கனி அகமது
(Abdul Ghani Ahmad)
பெரிக்காத்தான் (பாஸ்)

தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
(ஜெர்லுன் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள் 67,601 100.00%
வாக்களித்தவர்கள் 52,909 77.23%
செல்லுபடி வாக்குகள் 52,207 -
செல்லாத வாக்குகள் 635 -
வேட்பாளர் விவரங்கள்
சின்னம் வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
அப்துல் கனி அகமது
(Abdul Ghani Ahmad)
பெரிக்காத்தான் 31,685 60.69%
ஒசுமான் அசீஸ்
(Othman Aziz)
பாரிசான் 11,229 21.51%
முகமது பாட்சிலி முகமது அலி
(Mohamed Fadzli Mohd Ali)
பாக்காத்தான் 6,149 11.78%
முக்ரிஸ் மகாதீர்
(Mukhriz Mahathir)
உள்நாட்டு போராளிகள் கட்சி 3,144 6.02%

மேற்கோள்கள்[தொகு]

  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.

மேலும் காண்க[தொகு]