உள்ளடக்கத்துக்குச் செல்

சிக் மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°50′N 100°45′E / 5.833°N 100.750°E / 5.833; 100.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக் மாவட்டம்
Sik District
 மலேசியா
கெடா மாநிலத்தில் சிக் மாவட்டம்
கெடா மாநிலத்தில் சிக் மாவட்டம்
Map
சிக் மாவட்டம் is located in மலேசியா
சிக் மாவட்டம்
சிக் மாவட்டம்
      சிக் மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°50′N 100°45′E / 5.833°N 100.750°E / 5.833; 100.750
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்சிக் மாவட்டம்
தொகுதிசிக்
ஊராட்சிசிக் மாவட்ட ஊராட்சி
(Sik District Council)
பரப்பளவு
 • மொத்தம்1,634.56 km2 (631.11 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்65,774
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
06xxx
மலேசிய தொலைபேசி+6-04
மலேசிய போக்குவரத்து பதிவெண்K
சிக் மாவட்ட ஊராட்சி

Sik District Council
Majlis Daerah Sik
வகை
வகை
உள்ளூராட்சி
வரலாறு
தோற்றுவிப்பு1 ஆகத்து 1975
தலைமை
தலைவர்
மகமத் சுகைமி மான் (Mahamad Suhaimi Man)
மாவட்டச் செயலாளர்
முகமது மிசார் மொராட் (Muhamad Mizar Morat)
வலைத்தளம்
pbt.kedah.gov.my/index.php/majlis-daerah-sik

சிக் மாவட்டம் (மலாய்: Daerah Sik; ஆங்கிலம்: Sik District; சீனம்: 锡县) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

கெடா மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான சிக் மாவட்டத்தின் பரப்பளவு 1635 சதுர கி.மீ.; அதாவது கெடா மாநிலத்தின் பரப்பளவில் 17.35% ஆகும்.

இந்த மாவட்டத்தின் வடமேற்கில் பாடாங் தெராப் மாவட்டம் (Padang Terap District), வடக்கே தாய்லாந்து நாடு, தெற்கே பாலிங் மாவட்டம் (Baling District), தென்மேற்கில் கோலா மூடா மாவட்டம் (Kuala Muda District), மேற்கில் பெண்டாங் மாவட்டம் (Pendang District) ஆகியவை எல்லைகளாக உள்ளன.

சொல் பிறப்பியல்

[தொகு]

இந்த மாவட்டத்தின் பெயர் அரபு வார்த்தையான "சையத்" (Syed) அல்லது "செயிக்" (Sheikh) என்பதில் இருந்து பெறப்பட்டதாக அறியப்படுகிறது.

இப்பகுதியில் இசுலாமிய சமயத்தைப் பரப்பிய அரேபிய சமயப்பரப்பு குழுவினரின் பெயர்களில் "சையத்" அல்லது "செயிக்" எனும் சொற்கள் பரவலாக இருந்தன. அந்தச் சொற்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியில் (Pattani Malay) "சிக்" (Sik) மற்றும் "சைக்" (Saik) என உச்சரிக்கப் படுகிறது.

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

முக்கிம்கள்

[தொகு]

சிக் மாவட்டம் 3 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • செனரி (Jeneri)
  • சிக் (Sik)
  • சொக் (Sok)

நகரங்கள்

[தொகு]
  • சிக் நகரம் (Sik Town)
  • பெக்கான் பத்து லீமா சிக் (Pekan Batu Lima Sik)
  • பெக்கான் குலாவ் (Pekan Gulau)
  • பெக்கான் காஜா பூத்தே (Pekan Gajah Puteh)
  • பெக்கான் சாரோக் பாடாங் (Pekan Charok Padang)

மூடா ஆறு

[தொகு]

சிக் மாவட்டத்தில் மிக முக்கியமானது மூடா ஆறு. இந்த ஆறு ஒரு வகையில் இந்த மாவட்டத்தின் வரப்பிரசாதமாக அமைகிறது. கெடா மாநிலத்தில் மிக நீளமான ஆறு. 178 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு, மலாக்கா நீரிணையை அடைவதற்கு முன், கோலா மூடா, பாலிங், சிக் மற்றும் கூலிம் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.[2]

கெடா, பினாங்கு மாநிலங்களுக்கு எல்லையாக அமைந்து உள்ள இந்த ஆறு பினாங்கு மாநிலத்திற்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது. தவிர இந்தப் பகுதியின் நெல் சாகுபடிக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளது.[2]

ஆற்றுப் படுகை நகரங்கள்

[தொகு]

உள்கட்டமைப்பு

[தொகு]

மூடா ஆற்றில், 2004-ஆம் ஆண்டு, 360 மில்லியன் ரிங்கிட் செலவில் பெரிஸ் அணை (Beris Dam) கட்டப்பட்டது. நிலப் பாசனத்திற்குக் கிடைக்கும் தண்ணீரைப் பெருக்கவும்; மூடா நதிப் படுகையில் உள்ள நீரின் ஓட்டத்தைச் சீராக்கவும் அந்த அணை கட்டப்பட்டது.[3]

பருவமழைக் காலத்தில், மூடா ஆற்றில் பெரும்பாலும் மழை வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடும். 2003 அக்டோபர் 6-ஆம் தேதி, மூடா ஆற்றின் நீர் அளவீடு, வரலாறு காணாத அளவிற்கு 1340 m³/s-ஆக உயர்ந்து, வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Laman Web Rasmi Pejabat Daerah Sik - Profail Daerah". pds.kedah.gov.my. Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2023-06-01.
  2. 2.0 2.1 "Sungai Muda is one the longest river in Kedah. It is the main river flowing out of Muda Lake, or Tasik Muda, on a long and winding course that eventually ends at the Straits of Malacca. The final stretch of Sungai Muda forms the boundary between the states of Kedah and Penang". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
  3. "Muda River Basin in which the river and its catchment originates in Kedah but subsequently flows into Penang". பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
  4. "Landang Victoria River" (PDF).

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்_மாவட்டம்&oldid=3731866" இலிருந்து மீள்விக்கப்பட்டது