உள்ளடக்கத்துக்குச் செல்

கோலா மூடா மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°40′N 100°30′E / 5.667°N 100.500°E / 5.667; 100.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோலா மூடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோலா மூடா மாவட்டம்
Kuala Muda District
 மலேசியா
கெடா மாநிலத்தில் கோலா மூடா மாவடடம் அமைவிடம்
கெடா மாநிலத்தில் கோலா மூடா மாவடடம் அமைவிடம்
Map
கோலா மூடா மாவட்டம் is located in மலேசியா
கோலா மூடா மாவட்டம்
கோலா மூடா மாவட்டம்
      கோலா மூடா மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°40′N 100°30′E / 5.667°N 100.500°E / 5.667; 100.500
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்கோலா மூடா மாவட்டம்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்4,56,605
 • நகர்ப்புற அடர்த்தி923/km2 (2,390/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
08500
மலேசியத் தொலைபேசி+60-08
மலேசிய வாகனப் பதிவெண்கள்K
இணையதளம்கோலா மூடா மாவட்ட இணையத்தளம்

கோலா மூடா மாவட்டம் என்பது (மலாய்:Daerah Kuala Muda; ஆங்கிலம்:Kuala Muda District; சீனம்:瓜拉姆达县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.[1] இந்த மாவட்டத்தின் நிர்வாக மையம் சுங்கை பட்டாணியில் உள்ளது.

இந்த மாவட்டம் கெடா, பினாங்கு மாநிலங்களின் எல்லைக்கு அருகாமையில் உள்ளது. தீக்காம் பத்து, பாடாங் தெம்புசு, சுங்கை லாலாங், பீடோங், புக்கிட் செலாம்பாவ், சீடாம், குரூண், செமெலிங், மெர்போக், கோத்தா கோலா மூடா, தஞ்சோங் டாவாய் ஆகியவை கோலா மூடா மாவட்டத்தில் உள்ள இதர நகரங்கள் ஆகும்.

பொது

[தொகு]

மலேசியாவில் புகழ்பெற்ற ஜெராய் மலை இந்த மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூடா ஆறு இந்த மாவட்டத்தையும் பினாங்கு மாநிலத்தையும் பிரிக்கிறது. பினாங்கு பாலம் இந்த மாவட்டத்தின் தீக்காம் பத்துவையும் பினாங்கு மாநிலத்தின் பும்போங் லீமா எனும் இடத்தையும் இணைக்கின்றது.

கோலா மூடா மாவட்டம் கெடா மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டம் ஆகும். மலேசியாவில் புரதான நாகரீகங்கள் தோன்றிய இடமாகவும் இந்த இடம் கருதப் படுகிறது.[2]

2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலைகளின் தாக்குதல்களினால் கோலா மூடா மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப் பட்டன.

வரலாறு

[தொகு]

கெடா மாநிலத்தின் தென்பகுதியை சுங்கை மூடா (Sungai Muda) ஆறு இரண்டாகப் பிரித்துச் செல்கிறது. இந்தச் சுங்கை மூடா ஆற்றின் பெயரில் இருந்து தான் கோலா மூடா எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[3] இந்தச் சுங்கை மூடா ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் இடத்தில் கம்போங் சுங்கை மூடா, கோத்தா கோலா மூடா எனும் மீன்பிடி கிராமங்கள் உள்ளன.

மூடா ஆறு, மெர்போக் ஆறு (Sungai Merbok), சுங்கை மாஸ் (Sungai Mas) போன்ற ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தான் மலாயாவின் பண்டைய கால நாகரீகங்கள் தோன்றி இருக்கலாம் எனும் கருத்து நிலவி வருகிறது

கோலா மூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

மலேசியா; கெடா; கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) மொத்தம் 24 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 3,664 மாணவர்கள் பயில்கிறார்கள். 422 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த வட்டாரத்தின் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி 2020 மார்ச் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது.[4]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD3074 பீடோங் SJK(T) Bedong பீடோங் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 275 27
KBD3075 ஹார்வார்ட் தோட்டம் 1 SJK(T) Harvard Bhg I ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1 08100 பீடோங் 110 14
KBD3076 ஹார்வார்ட் தோட்டம் 2 SJK(T) Harvard 2 ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2 08100 பீடோங் 20 8
KBD3077 ஹார்வார்ட் தோட்டம் 3 SJK(T) Ladang Harvard Bhg 3 ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3 08100 பீடோங் 73 10
KBD3078 சுங்கை பத்து தோட்டம் SJK(T) Ldg Sg Batu சுங்கை பத்து தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 20 8
KBD3079 சுங்கை போங்கோக் தோட்டம்m SJK(T) Ldg Sungai Bongkok சுங்கை போங்கோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 23 8
KBD3080 சுங்கை புந்தார் தோட்டம் SJK(T) Ldg Sungai Puntar சுங்கை புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 35 8
KBD3081 சுங்கை தோக் பாவாங் SJK(T) Sungai Tok Pawang சுங்கை தோக் பாவாங் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 239 24
KBD3082 துப்பா தோட்டம் SJK(T) Ldg Tupah துப்பா தோட்டத் தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 22 9
KBD3083 சுங்கை லாலாங் SJK(T) Ladang Sungkai Para சுங்கை பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 18 8
KBD3084 சுங்கை பட்டாணி SJK(T) Arumugam Pillai ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 352 34
KBD3085 புக்கிட் லெம்பு தோட்டம் SJK(T) Tun Sambanthan துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 159 16
KBD3086 பாடாங் தெமுசு SJK(T) Kalaimagal கலைமகள் தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 295 24
KBD3087 தாமான் சுத்திரா ஜெயா SJK(T) Mahajothi மகா ஜோதி தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 626 39
KBD3088 கோலா மூடா தோட்டம் SJK(T) Ldg Kuala Muda Bhg Home கோலா மூடா தோட்டத் தமிழ்ப்பள்ளி 08009 சுங்கை பட்டாணி 72 10
KBD3090 பட்டாணி பாரா தோட்டம் SJK(T) Ldg Patani Para பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி 08007 சுங்கை பட்டாணி 14 8
KBD3091 ஸ்கார்புரோ தோட்டம் SJK(T) Ldg Scarboro Bhg 2 ஸ்கார்புரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 2 08000 சுங்கை பட்டாணி 57 11
KBD3093 சுங்கை துக்காங் தோட்டம் SJK(T) Somasundram சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 182 16
KBD3094 தாமான் தியோங் SJK(T) Saraswathy சரஸ்வதி தமிழ்ப்பள்ளி (சுங்கை பட்டாணி) 08000 சுங்கை பட்டாணி 596 45
KBD3095 சுங்கை லாலாங் SJK(T) Sungai Getah சுங்கை கெத்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 133 13
KBD3096 ஜாலான் சுங்கை SJK(T) Palanisamy Kumaran பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி 08000 பீடோங் 152 15
KBD3097 லூபோக் செகிநாத் தோட்டம் SJK(T) Ldg Lubok Segintah லூபோக் செகிநாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி 08010 சுங்கை பட்டாணி 92 16
KBD3106 பாடாங் லெம்பு SJK(T) Kalaivaani கலைவாணி தமிழ்ப்பள்ளி 08330 குரூண் 99 15
KBD3107 தாமான் கெளாடி SJK(T) Taman Keladi தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 226
(2020-ஆம் ஆண்டு)
276
(2021-ஆம் ஆண்டு)
27

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_மூடா_மாவட்டம்&oldid=3805448" இலிருந்து மீள்விக்கப்பட்டது