உள்ளடக்கத்துக்குச் செல்

தெமர்லோ மாவட்டம்

ஆள்கூறுகள்: 3°22′N 102°25′E / 3.367°N 102.417°E / 3.367; 102.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெமர்லோ மாவட்டம்
Daerah Temerloh
தெமர்லோ மாவட்டம்
தெமர்லோ மாவட்டம்
தெமர்லோ மாவட்டம் is located in மலேசியா
தெமர்லோ மாவட்டம்
தெமர்லோ மாவட்டம்
மலேசியாவில் தெமர்லோ மாவட்டம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°22′N 102°25′E / 3.367°N 102.417°E / 3.367; 102.417
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம் தெமர்லோ
தொகுதிதெமர்லோ
உள்ளூராட்சிதெமர்லோ நகராண்மைக் கழகம்
அரசு
 • மாவட்ட அதிகாரிபாட்சி கெனாலி[1]
பரப்பளவு
 • மொத்தம்2,251 km2 (869 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,57,562
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
28xxx
மலேசியத் தொலைபேசி+6-09
மலேசியப் போக்குவரத்து எண்C

(இது தெமர்லோ மாவட்டம் தொடர்பான கட்டுரை. தெமர்லோ நகரம் குறித்த கட்டுரைக்கு தெமர்லோ நகரம் என்பதைச் சொடுக்கவும்.)

தெமர்லோ மாவட்டம் (ஆங்கிலம்: Temerloh District; மலாய்: Daerah Temerloh; சீனம்: 淡马鲁县; ஜாவி: ايره تمرلوه ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 130 கி.மீ. தூரத்தில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது.

தெமர்லோ மாவட்டம்; கிழக்கில் மாரான் மாவட்டம், மேற்கில் பெந்தோங் மாவட்டம், வடக்கில் ஜெராண்டுட் மாவட்டம் மற்றும் தெற்கில் பெரா மாவட்டம் ஆகிய மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு உள்ளது.

குவாந்தான் மாநகருக்கு அடுத்த மிகப் பெரிய பட்டணமாக தெமர்லோ நகரம் விளங்குகிறது. மாநகர் ஆட்சியின் கீழ் உள்ள தெமர்லோ மாவட்டம், மெந்தகாப், லஞ்சாங், கோலா கெராவ், மற்றும் கெர்டாவ் ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது.

மக்கள்தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 1,86,907—    
2000 1,36,214−27.1%
2010 1,58,724+16.5%
2020 1,69,023+6.5%
ஆதாரம்: [3]

பின்வருபவை 2010-ஆம் ஆண்டு மலேசிய புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.

பெராவில் உள்ள இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 124,340 75.7%
சீனர்கள் 33,655 15.8%
இந்தியர்கள் 18,005 7.8%
இதர மக்கள் 2,210 0.7%
மொத்தம் 190,500 100%

தெமர்லோ மாவட்டப் பிரதிநிதிகள்[தொகு]


தொகுதி எண் தொகுதி பெயர் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் கட்சி
பி87 கோல கெராவ் இஸ்மாயில் முகமது சயிட் தேசிய முன்னனி
பி88 தெமர்லோ சய்பூடின் அப்துல்லா தேசிய முன்னனி'

சிறிய மாவட்டங்கள்[தொகு]

தெமர்லோ மாவட்டத்தில் உள்ள சிறிய மாவட்டங்கள் கீழ் வருமாறு:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Laman Web Rasmi Pejabat Daerah dan Tanah Temerloh - Pegawai Daerah Temerloh". pdttemerloh.pahang.gov.my. Archived from the original on 2018-02-25. பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.
  2. primuscoreadmin (5 January 2016). "Latar Belakang".
  3. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமர்லோ_மாவட்டம்&oldid=3427501" இலிருந்து மீள்விக்கப்பட்டது