மெராப்போ
மெராப்போ | |
---|---|
Merapoh | |
நகரம் | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 4°42′00″N 102°00′00″E / 4.70000°N 102.00000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | லிப்பிஸ் மாவட்டம் |
மெராப்போ (ஆங்கிலம்: Merapoh; மலாய் மொழி: Merapoh) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தின், லிப்பிஸ் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம் ஆகும்.
இந்த நகரம் பகாங், கிளாந்தான் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு ஓர் இரயில் நிலையம் உள்ளது. மெராப்போவில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சுங்கை ரேலாவ் எனும் இடம் உள்ளது. இந்த இடம்தான் தாமான் நெகாரா நுழைவு இடங்களில் ஒன்றாகும்.
பொது
[தொகு]தாமான் நெகாரா, மலேசியாவின் தேசியப் பூங்காக்களில் ஒன்றாகும். தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்து உள்ளது.[1]
தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த மலையான குனோங் தகான் மலை; இந்த நகரத்திற்கு அருகில் உள்ளது. குனோங் தகான் மலை ஏறுபவர்கள் கோலா தகான், மெராப்போ வழியாகப் பயணங்களைத் தொடங்க வேண்டும்.[2][3]
கோத்தா பாரு நகருக்கும் கோலாலம்பூர் மாநருக்கும் இடையில் இந்த நகரம் அமைந்து இருப்பதால், கோத்தா பாரு - கோலாலம்பூர் நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஓர் ஓய்வு இடமாகவும் அமைகின்றது.
இங்குள்ள பெரும்பான்மையான உள்ளூர்வாசிகள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி பேச்சு வழக்கைப் பயன்படுத்துகின்றனர்.
மேற்கோள்
[தொகு]- ↑ "Taman Negara National Park is the perfect place if you love rainforest and outdoor activities. Experience walking on the world's longest canopy walkway, visiting the aborigine village, trekking under rainforest canopy, climbing the highest mountain in Peninsular Malaysia, caving, fishing, camping, observing wildlife,". Taman Negara. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
- ↑ "Taman Negara is the oldest primary rainforest in the world. Research has shown that this rainforest has never been influenced by ice ages and other big changes in time. With 4343 square kilometers it is the biggest National Park in Malaysia, spread out over three states at Peninsular Malaysia; Pahang, Terengganu and Kelantan". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
- ↑ "Taman Negara is nestled between 3 states in Malaysia, namely largest in Pahang which cover an area of 2,477km2, Kelantan (1,043km2) and Terengganu (853km2), with a total area of 4,343km2. It is the largest national park in Peninsular Malaysia and known to be the world's oldest tropical rainforest". pahang.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.