ஜெலாய் ஆறு
ஜெலாய் ஆறு Jelai River | |
---|---|
ஜெலாய் ஆறு | |
அமைவு | |
நாடு | மலேசியா; |
மாநிலம் | பகாங் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | கேமரன் மலை |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | கோலா பகாங் |
நீளம் | 97.14 km (60.36 mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | தெம்பிலிங் ஆறு |
ஜெலாய் ஆறு; (மலாய்: Sungai Jelai; ஆங்கிலம்: Jelai River) என்பது மலேசியாவின் பகாங் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஆறு ஆகும். 97 கி. மீ. நீளமுடைய இந்த ஆறு, பகாங் மாநிலத்தில் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1]
இந்த ஜெலாய் ஆறு, கேமரன் மலையில் உற்பத்தியாகிறது. பின்னர் தெம்பிலிங் ஆற்றுடன் இணைகிறது. பின்னர் பகாங் ஆற்றுடன் கலந்து, தென்சீனக் கடலில் கலக்கிறது.
ஜெலாய் ஆறு; தெம்பிலிங் ஆறு ஆகிய ஆறுகளின் மூலமாக உருவாகும் பகாங் ஆற்றின் வடிநிலப் பகுதியின் பரப்பளவு 29,300 சதுர கி.மீ ஆகும். இந்தப் பரப்பில் 27,000 சதுர கி.மீ. அளவிற்கு பகாங் மாநிலத்திலேயே அமைந்துள்ளது. [2]
ஆற்றின் வழித்தடங்கள்
[தொகு]தித்திவாங்சா மலைத்தொடரின் (Titiwangsa Mountains) மேல் சரிவுகளில் உள்ள கேமரன் மலையில் இருந்து ஜெலாய் ஆறு (Jelai River), தென்கிழக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. அதன் பின்னர் தெம்பிலிங் ஆற்றுடன் (Tembeling River) இணைவதற்கு முன்பாக கோலா லிப்பிஸ் வழியாகப் பாய்கிறது.[3]
தெம்பிலிங் ஆறு, பகாங் மற்றும் திராங்கானு மாநிலங்களின் எல்லையில் உள்ள உலு தெம்பிலிங்கில் தொடங்கி தென்கிழக்கு திசையில் நகர்ந்து கோலா தகான் வழியாகக் கடந்து செல்கிறது.
பகாங் ஆறு, தெற்கு திசையில் கடந்து ஜெராண்டுட், கோலா குராவ், கெர்டாவ் (Kerdau) மற்றும் தெமர்லோ ஆகிய பகுதிகளைக் கடந்து செல்கிறது. மெங்காராக் (Mengkarak) எனும் இடத்தில், வடகிழக்கு நோக்கி திரும்பி செனோர் (Chenor) வழியாகப் பாய்ந்து பின்னர் லுபோக் பாக்கு (Lubuk Paku) கிராமத்தை அடைந்து, லெபார் என்ற இடத்தில் கிழக்குத் திசையை நோக்கி திரும்புகிறது.
லிப்பிஸ் ஆறு
[தொகு]ஜெலாய் ஆற்றின் கிளை ஆறான லிப்பிஸ் ஆறு; பகாங் மற்றும் பேராக் மாநிலங்களின் எல்லையில் உள்ள ரவுப் மாவட்டத்தின் உலு சுங்கை (Ulu Sungai) எனும் இடத்தில் உற்பத்தியாகிறது.
ஜெலாய் ஆறு முடிவு அடையும் இடத்தில் கோலா லிப்பிஸ் எனும் இடத்தில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
நகரங்கள் மற்றும் பாலங்கள்
[தொகு]ஜெலாய் ஆறு மற்றும் தெம்பிலிங் ஆறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஜெராண்டுட் நகரம் அமைந்துள்ளது. தெமர்லோ நகரம், செமந்தான் ஆறும்; பகாங் ஆறும் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sungai Jelai, Pahang, Malaysia".
- ↑ "Pahang River" (PDF). Bereau of Metereology. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2017.
- ↑ "Pahang River, river in Pahang region, West Malaysia (Malaya). It is the longest river on the Malay Peninsula. It rises in two headstreams, the Jelai and Tembeling, about 10 miles (16 km) north of Jerantut". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.