ரொம்பின் ஆறு

ஆள்கூறுகள்: 2°49′N 103°29′E / 2.817°N 103.483°E / 2.817; 103.483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொம்பின் ஆறு
Rompin River
Sungai Rompin
அமைவு
நாடு மலேசியா
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்பகாங்: ரொம்பின் மாவட்டம், கோலா ரொம்பின், தென்சீனக் கடல்
 ⁃ ஆள்கூறுகள்
2°49′N 103°29′E / 2.817°N 103.483°E / 2.817; 103.483
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிபுக்கிட் இபாம், புக்கிட் பத்து பூத்தே, ரொம்பின் மாவட்டம், கோலா ரொம்பின்

ரொம்பின் ஆறு; (மலாய்: Sungai Rompin; ஆங்கிலம்: Rompin River) என்பது பகாங் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு மலேசியா, பகாங் மாநிலத்தின் ரொம்பின் மாவட்டத்தில் (Rompin District) உள்ள புக்கிட் இபாம், புக்கிட் பத்து பூத்தே மலைப் பகுதிகளில் உருவாகி கோலா ரொம்பின் (Kuala Rompin) வழியாகச் சென்று தென் சீனக் கடலில் (South China Sea) கலக்கிறது.[1]

ரொம்பின் ஆற்றுக்கு நெனாசி ஆறு (Nenasi River) அனாக் எண்டாவ் ஆறு (Anak Endau River) ஆகிய ஆறுகள் துணை ஆறுகளாக உள்ளன.

பொது[தொகு]

இந்த ஆறு தென் சீனக் கடலில் கலக்கும் கோலா ரொம்பின் துறைமுகப் பகுதியில் பெரிய வகை நன்னீர் இறால்கள் (Freshwater Prawns) அதிகமாய்க் கிடைக்கின்றன. அதனால் இந்த இடம் இரவு உணவு வகைகளுக்குப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.[2]

கோலா ரொம்பின்[தொகு]

கோலா ரொம்பின் (Kuala Rompin); பகாங், ரொம்பின் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். ரொம்பின் மாவட்டத்தின் தலைப்பட்டணமும் இந்த நகரம்தான்.

இந்த நகரம் தீபகற்ப மலேசியாவின் தென்கிழக்கு கடற்கரையில், தென் சீனக் கடலை எதிர்கொண்டவாறு உள்ளது. பகாங் மாநிலத் தலைநகரான குவாந்தான் மாநகரில் இருந்து தெற்கே சுமார் 133 கி.மீ. தொலைவில் உள்ளது.

மீன்பிடி கிராமம்[தொகு]

பிரித்தானியக் காலனித்துவ நாட்களில், கோலா ரொம்பின் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. பெரும்பாலும் சிங்கப்பூர், குவாந்தான் நகரங்களுக்கு இடையே பயணிக்கும் வணிகர்கள் இந்த நகரத்திற்கு வந்து செல்வது உண்டு. கோலா ரொம்பின் உணவகங்கள் அவற்றின் கடல் உணவுகளுக்குப் பிரபலமானவை.

ரொம்பின் ஆற்றின் கரையோரங்களில் பிடிபடும் நன்னீர் இறால்கள்; நன்னீர் நண்டுகள் (Freshwater Clams) கடல் நண்டுகள் மற்றும் கடல் கணவாய் (Squids) மீன்களுக்கு கோலா ரொம்பின் பிரபலமாய்த் திகழ்கிறது[3]

ரொம்பின் ஆறு காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rompin River". Mapcarta (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
  2. "Official Portal Of Tourism Pahang: Kuala Rompin is renowned for its freshwater prawns. The months of September and October are the best times to visit Rompin for the giant freshwater prawns of the Rompin River, Nenasi River and Anak Endau River. - Rompin". www.pahangtourism.org.my. பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
  3. "Rompin is famous for its yummy prawn dishes. If you are a seafood lover, you should probably visit in the best time : September - October. These fresh prawns are caught from the Rompin river, Nenasi River, Endau and Anak Endau River". www.pahangtourism.org.my. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

பொதுவகத்தில் Rompin River பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொம்பின்_ஆறு&oldid=3750702" இலிருந்து மீள்விக்கப்பட்டது