மெர்சிங்
மெர்சிங் Mersing | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 2°26′N 103°50′E / 2.433°N 103.833°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | மெர்சிங் |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 70,894 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 86800 |
இடக் குறியீடு | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
மெர்சிங் (ஆங்கிலம்: Mersing; மலாய்: Mersing; சீனம்: 丰盛港; ஜாவி:مرسيڠ) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், மெர்சிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.
மெர்சிங் நகரம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்த நகரம் மெர்சிங் மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. ஜொகூர் மாநிலத்தில் மெர்சிங் எனும் பெயரில் இரு இடங்கள் உள்ளன.
- மெர்சிங் நகரம்
- மெர்சிங் மாவட்டம்
மலேசியத் தலைநகரமான கோலாலம்பூர் மாநகரில் இருந்து 355 கி.மீ.; ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 127 கி.மீ.; பகாங் மாநிலத் தலைநகரமான [குவாந்தான்]] மாநகரில் இருந்து 165 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
பொது
[தொகு]மெர்சிங் மாவட்டத்தில் நிறைய சுற்றுலாத் தீவுகள் உள்ளன. அழகிய கடற்கரைகளில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த நகரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடல்கரை அழகிற்குப் பிரபலமானவை. இந்த நகரத்தில் இருந்துதான் தென்சீனக் கடலில் இருக்கும் சுற்றுலாத் தீவுகளுக்குப் படகு ஏறிச் செல்ல வேண்டும்.
மெர்சிங் நகரம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. ஜொகூர் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு முக்கிய நகரங்களில் மெர்சிங் நகரமும் ஒன்றாகும். மற்றொரு நகரம் கோத்தா திங்கி.
தெற்கு மற்றும் கிழக்கு ஜொகூரை இணைக்கும் பிரதான சாலையில் மெர்சிங் நகரம் அமைந்துள்ளது. பகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தான் உட்பட மற்ற கிழக்குக்கரை நகடங்களை இணைக்கின்றது. மேலும் தியோமான் தீவு போன்ற தென்சீனக் கடல் தீவுகளுக்குச் செல்வதற்கு இந்த நகரம் படகுதுறை நகரமாகவும் விளங்குகிறது.[2]
இயற்கைச் சுற்றுச்சூழல் சுற்றுலா, மீன்பிடித் தொழில், கடல் சார் மீன்வளர்ப்புத் தொழில், விவசாயம் மற்றும் இலகு வகை தொழிற்சாலைகள் ஆகியவை இந்த நகரத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள்.[3]
மெர்சிங் மாவட்டத்தில் ஏழுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவை உள்நாட்டு; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன. தியோமன்தீவிற்குச் சுற்றுலாப் பயணிகளைப் படகு மூலம் கொண்டு செல்ல மெர்சிங் நகரத்தில் படகுத் துறையும் உள்ளது.
பெயர் வரலாறு
[தொகு]மெர்சிங் எனும் பெயர் மாவ் ஷெங் போர்ட் (Mau Sheng Port) எனும் சீன மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. 1880-ஆம் ஆண்டு முதல், மெர்சிங் எனும் சொல் ஜொகூர் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும் அமீர் சிங் (Amir Singh) அல்லது மென் சிங் (Men Singh) என்று பெயர் கொண்ட சீக்கிய வணிகர் ஒருவரிடம் இருந்தும், மெர்சிங் எனும் பெயர் பெறப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்கவில்லை.[4]
மெர்சிங் சுற்றுலா தீவுகள்
[தொகு]- அவுர் தீவு (Aur Island)
- பெசார் தீவு (Besar Island)
- அரிமாவ் தீவு (Harimau Island)
- அரோங் பொழுதுபோக்கு வனப்பூங்கா (Arong Recreational Forest)
- பெமாங்கில் தீவு (Pemanggil Island)
- ராவா தீவு (Rawa Island)
- சிபு தீவு (Sibu Island)
- தாமான் நெகாரா எண்டாவ் ரொம்பின் (Taman Negara Endau Rompin)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Proposed Mersing Laguna Reclamation - Detailed Environmental Impact Assessment, by DHI Water & Environment Sdn. (M) Bhd., "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2012-04-17. பார்க்கப்பட்ட நாள் 2016-01-11.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Latif, Zulkifly Ab (14 July 2020). "Mersing's main claim to fame is it being the principal gateway to Johor's group of islands as well as the neighboring Pahang's Tioman island". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
- ↑ "Mersing is a town in Johor, Malaysia. It remains as a fishing village despite the developing city centre of Johor Bahru". johor.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
- ↑ "Toponymy Heritage Places". பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.