உள்ளடக்கத்துக்குச் செல்

பெரா மாவட்டம்

ஆள்கூறுகள்: 3°16′N 102°27′E / 3.267°N 102.450°E / 3.267; 102.450
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரா மாவட்டம்
Daerah Bera
பெரா மாவட்டம்
பெரா மாவட்டம்
Map
பெரா மாவட்டம் is located in மலேசியா
பெரா மாவட்டம்
      பெரா மாவட்டம்
ஆள்கூறுகள்: 3°16′N 102°27′E / 3.267°N 102.450°E / 3.267; 102.450
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம்பெரா
தொகுதிபெரா
உள்ளூராட்சிபெரா நகராட்சி
அரசு
 • மாவட்ட அதிகாரிரசிகான் அசாருடின்
பரப்பளவு
 • மொத்தம்2,214.44 km2 (855.00 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்90,304
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
28xxx
தொலைபேசி+6-09
வாகனப் பதிவெண்கள்C
பெரா மாவட்டத்தில் கெமாயான் நகரம்

பெரா மாவட்டம் (ஆங்கிலம்: Bera District; மலாய்: Daerah Bera; சீனம்: 百乐县; ஜாவி: ﺮﺍ}}); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம்.

இந்த மாவட்டத்தின் மேற்கில் நெகிரி செம்பிலான் மாநிலம்; தெற்கில் ஜொகூர்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 2,241 கி.மீ² பரப்பளவு கொண்டது. மலேசியப் புகழ் பெரா ஏரி இந்த மாநிலத்தில்தான் உள்ளது.

மலேசியாவின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இந்த மாவட்டத்தின் பெரா தொகுதியைச் சேர்ந்தவர். இவர் 2021 ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி முதல், நாட்டின் 9-ஆவது பிரதமராகப் பதவி வகித்து வருகின்றார்.[2]

சொற்பிறப்பியல்

[தொகு]

மலேசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பெரா ஏரி (Lake Bera) இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. 1994 நவம்பர் மாதம் முதல் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அந்த ஏரி பாதுகாக்கப் பட்டு வருகிறது.[3]

அந்த ஏரியின் பெயரே இந்த மாவட்டத்திற்கும் வைக்கப்பட்டது. பெரா ஏரிப் பகுதியில் செமலை (Semelai) எனும் ஒராங் அஸ்லி பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, பெரா எனும் பெயர் ரெபா (Reba) எனப்படும் ஒரு வகை கடல் பாசியில் இருந்து பெறப்பட்டது. பெரா ஏரியில் அந்த வகையான கடல்வாழ் பாசிகள் உள்ளன.[4]

பொது

[தொகு]
பெரா மாவட்ட வரைப்படம்

பெரா மாவட்டத்தின் தலைநகரம் பெரா. இந்த நகரம் முன்பு தெமர்லோ மாவட்டத்தில் இருந்தது. 1992-ஆம் ஆண்டு பெரா மாவட்டம் உருவாக்கப் பட்டது. அதன் பின்னர் பெரா நகரம் இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆனது.

பகாங் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியியில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் வடக்கில் தெமர்லோ மாவட்டம் மற்றும் மாரான் மாவட்டம் உள்ளன. கிழக்கில் ரொம்பின் மாவட்டம் மேற்கில் பெந்தோங் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செம்போல் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

முக்கிம்கள்

[தொகு]

பெரா மாவட்டத்தில் இரண்டு முக்கிம்கள் எனும் துணை மாவட்டங்கள் உள்ளன.

தெற்கில் இருந்து, மலேசிய இரயில் சேவையின் நகரிடை இயங்கும் ஊர்தி (KTM Intercity) இந்த மாவட்டத்தின் வழியாக பகாங் மாநிலத்திற்குள் நுழைகின்றது. கெமாயான்; கெராயோங்; மெங்காராக் நிலையங்களில் நின்று செல்கின்றது.

முக்கிய நகரங்கள்

[தொகு]

பெரா மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்:

மக்கள்தொகையியல்

[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
2000 77,685—    
2010 94,105+21.1%
2020 98,137+4.3%
ஆதாரம்: [5]

பின்வருபவை 2010-ஆம் ஆண்டு மலேசிய புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.

பெராவில் உள்ள இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 60,696 67.2%
சீனர்கள் 24,511 27.1%
இந்தியர்கள் 4,739 5.2%
இதர மக்கள் 358 0.4%
மொத்தம் 90,304 100%

பெரா மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

பெரா மாவட்டத்தில் (Bera District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 73 மாணவர்கள் பயில்கிறார்கள். 31 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBDA097 மெந்திரி தோட்டம்
Ladang Menteri
SJK(T) Ldg Menteri மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி[6] 28300 திரியாங் 124 11
CBDA098 மெங்காராக்
Mengkarak
SJK(T) Ldg Karmen கார்மென் தோட்டத் தமிழ்ப்பள்ளி[7] 28200 பெரா 14 8
CBDA099 கெமாயான்
Kemayan
SJK(T) Kemayan கெமாயான் தமிழ்ப்பள்ளி[8] 28380 கெமாயான் 81 12

மேற்கோள்கள்

[தொகு]
  1. primuscoreadmin (5 January 2016). "Latar Belakang".
  2. "Ismail Sabri appointed 9th prime minister". Malaysiakini (in ஆங்கிலம்). 20 August 2021. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
  3. "Tasik Bera (Lake Bera) is located in the centre of Peninsular Malaysia, in the southwestern corner of the state of Pahang". www.ecologyasia.com. பார்க்கப்பட்ட நாள் 7 May 2022.
  4. Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  5. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  6. "SJK(T) Ladang Menteri - The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  7. "SJKT LADANG KARMEN". sjkt (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  8. "SJKT KEMAYAN - 2 Januari 2018 Melaksanakan Program Guru Penyayang untuk mengalu-alukan kehadiran murid pada hari pertama ke sekolah". பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]


மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரா_மாவட்டம்&oldid=4045955" இலிருந்து மீள்விக்கப்பட்டது