நுவாங் மலை

ஆள்கூறுகள்: 3°16′N 101°54′E / 3.267°N 101.900°E / 3.267; 101.900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுவாங் மலை
Mount Nuang
உயர்ந்த இடம்
உயரம்1,493 m (4,898 அடி)
இடவியல் புடைப்பு856 m (2,808 அடி)
ஆள்கூறு3°16′N 101°54′E / 3.267°N 101.900°E / 3.267; 101.900
புவியியல்
மூலத் தொடர்தித்திவாங்சா மலைத்தொடர்

நுவாங் மலை (மலாய்: Gunung Nuang; ஆங்கிலம்: Mount Nuang) என்பது மலேசியா; பகாங்; சிலாங்கூர் மாநிலங்களின் எல்லையில் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலை.

இந்த மலையின் உயரம் 1,493 மீட்டர் (4,898 அடி). அதன் சிகரம் பகாங் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் எல்லையாக உள்ளது. மற்றும் இந்த மலை, பகாங் - சிலாங்கூர் - நெகிரி செம்பிலான் எல்லை முக்கோணத்திற்கு அருகிலும் உள்ளது.[1][2]

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செமாங்கோக் மலை (Mount Semangkok); மற்றும் உலு காலி மலை (Mount Ulu Kali); மலைகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயரமான மலையாக நுவாங் மலை விளங்குகிறது. இந்த மூன்று மலைகளும் தித்திவாங்சா மலைத்தொடரில் (Titiwangsa Mountains) உள்ள மலைகளின் ஒரு பகுதியாகும்.

பொது[தொகு]

நுவாங் மலையின் சிகரத்திற்குச் செல்ல மூன்று நடைபாதைகள் உள்ளன. அவை அனைத்தும் தீபகற்ப மலேசியாவின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (Department of Wildlife and National Parks Peninsular Malaysia) உருவாக்கியவை ஆகும்.

அவற்றில் இரண்டு பாதைகள் சிலாங்கூரில் தொடங்குகின்றன; ஒரு பாதை உலு லங்காட்டில் உள்ள கோலா பாங்சூனில் (Kuala Pangsoon) தொடங்குகிறது; மற்றொன்று கோம்பாக்கில் உள்ள கம்போங் கெமென்சாவில் (Kampung Kemensah) தொடங்குகிறது.

காணாமல் போகும் சம்பவங்கள்[தொகு]

நுவாங் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு நீர்த்தேக்கம்

மூன்றாவது பாதை பகாங்; பெந்தோங்கில் உள்ள புக்கிட் திங்கி மலையில் இருந்து உருவாகிறது. நுவாங் சிகரத்தில் இருந்து இரவு நேரத்தில் கெந்திங் மலை நன்றாகத் தெரியும்.

இந்த மலைப் பகுதியில் சில விபத்துகள் நிகழ்ந்து உள்ளன. மற்றும் காணாமல் போகும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளன. இன்னும் நிகழ்ந்து வருகின்றன. இங்கு ஒரு குகை இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சிலாங்கூர் மாநிலத்திலும் மற்றும் மலேசியாவிலும்; மிகப்பெரிய மூங்கில் இனப்பெருக்கம் செய்யும் பகுதியும் இங்கு தான் உள்ளது.

நுவாங் மலையில் ஏறுபவர்கள், கீழே தண்ணீர்க் குளத்தில் கட்டப்பட்ட நீர் குழாய்களின் வழியாகவும் மேலே ஏறிச் செல்லலாம். தேவைப்பட்டால், கோலா பாங்சூனின் மலேசியப் பழங்குடியினர் தெமுவான் வழிகாட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவாங்_மலை&oldid=3705659" இலிருந்து மீள்விக்கப்பட்டது