குவாந்தான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாந்தான் மாவட்டம்
Kuantan District
Daerah Kuantan
குவாந்தான் மாவட்டம்
குவாந்தான் மாவட்டம்
குவாந்தான் மாவட்டம் is located in மலேசியா
குவாந்தான் மாவட்டம்
குவாந்தான் மாவட்டம்
      குவாந்தான் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°55′N 103°5′E / 3.917°N 103.083°E / 3.917; 103.083ஆள்கூறுகள்: 3°55′N 103°5′E / 3.917°N 103.083°E / 3.917; 103.083
நாடு மலேசியா
மாநிலம்Flag of Pahang.svg பகாங்
மாவட்டம்குவாந்தான்
தொகுதிகுவாந்தான்
உள்ளூராட்சிகுவாந்தான் நகராண்மைக் கழகம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசிலிசா சுல்கிப்ளி[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்2,960.42 km2 (1,143.02 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்4,45,695
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு25xxx
மலேசியத் தொலைபேசி+6-09
மலேசியப் போக்குவரத்து எண்C

குவாந்தான் மாவட்டம் (ஆங்கிலம்: Kuantan District; மலாய்: Daerah Kuantan; சீனம்: 关丹县; சாவி: كوانتن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது.

இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் செராண்டுட்டு மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குவாந்தான் மற்றும் பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota). இதர நகரங்கள் பஞ்சிங், சுங்கை லெம்பிங், கம்பாங் மற்றும் பெசெரா.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

மாரான் மாவட்டத்தில் 6 முக்கிம்கள் உள்ளன:[3]

குவாந்தான் மாவட்ட வரலாறு[தொகு]

முதலாம் நூற்றாண்டில் சிது, ஆங்கிலம்: Chih-Tu; or Chihtu; or Ch-ih-t'u;; சமசுகிருதம்: Raktamaritika or Raktamrittika; சீனம்: 赤土国; மலாய்: Tanah Merah) எனும் பேரரசின் ஒரு பகுதியாக குவாந்தான் நகரம் இருந்தது. 'சிது' என்றால் 'சிகப்பு மண்' (Red Earth Kingdom) என்று பொருள்.[4][5]

11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா பேரரசாலும் ஆளப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீன சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சீன வணிகர்களின் வருகையால் குவாந்தான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. குவாந்தான் நகரம் 1850-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மக்கள்தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1991 2,55,974 —    
2000 3,44,319 +34.5%
2010 4,43,796 +28.9%
2020 5,48,014 +23.5%

பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

பெக்கான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம் மக்கள்
தொகை
விழுக்காடு
பூமிபுத்ரா 60,696 67.2%
சீனர் 24,511 27.1%
இந்தியர் 4,739 5.2%
மற்றவர் 358 0.4%
மொத்தம் 90,304 100%

தட்பவெப்ப நிலை[தொகு]

குவாந்தான் மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை வெப்ப மண்டல மழைக்காடு ஆகும். தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை.

தட்பவெப்ப நிலைத் தகவல், குவாந்தான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.3
(83)
30
(86)
30.6
(87)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.1
(88)
31.1
(88)
29.4
(85)
27.8
(82)
30.6
(87)
தாழ் சராசரி °C (°F) 22.2
(72)
22.2
(72)
22.8
(73)
23.3
(74)
23.9
(75)
23.3
(74)
22.8
(73)
23.3
(74)
22.8
(73)
23.3
(74)
22.8
(73)
22.8
(73)
22.8
(73)
பொழிவு mm (inches) 300
(11.81)
170
(6.69)
180
(7.09)
170
(6.69)
190
(7.48)
160
(6.3)
160
(6.3)
170
(6.69)
230
(9.06)
270
(10.63)
310
(12.2)
440
(17.32)
2,860
(112.6)
ஆதாரம்: http://www.weatherbase.com/weather/weather.php3?s=75684&refer=&units=metric

மேற்கோள்[தொகு]

  1. "Pegawai Kanan". pdtkuantan.pahang.gov.my. 2018-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-06-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Peta & Keluasan". Pejabat Daerah dan Tanah Kuantan. 2018-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-06-05 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Peta & Keluasan". Pejabat Daerah dan Tanah Kuantan. 2018-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-06-05 அன்று பார்க்கப்பட்டது.
  4. Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7591-0279-1. 
  5. Geoff Wade (2007). Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:967-9948-38-2. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாந்தான்_மாவட்டம்&oldid=3591690" இருந்து மீள்விக்கப்பட்டது