சிப்பாங் மாவட்டம்
சிப்பாங் மாவட்டம் | |
---|---|
சிலாங்கூர் | |
Daerah Sepang | |
![]() சிப்பாங் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர் | |
ஆள்கூறுகள்: 2°45′N 101°40′E / 2.750°N 101.667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தொகுதி | சாலாக் திங்கி |
உள்ளூராட்சி | சிப்பாங் நகராட்சி மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ரோசுலினா ஜானி[1] |
பரப்பளவு[2] | |
• மொத்தம் | 599.66 km2 (231.53 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,90,889 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே+8) |
தொலைபேசி குறியீடு | +6-03-8 |
வாகனப் பதிவு | B |
சிப்பாங் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Sepang; ஆங்கிலம்: Sepang District; சீனம்: 雪邦縣) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம்; மேற்கில் கோலா லங்காட் மாவட்டம்; வட மேற்கில் கிள்ளான் மாவட்டம்; கிழக்கில் உலு லங்காட் மாவட்டம்; ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் சாலாக் திங்கி (Salak Tinggi).
மலேசியாவில் பிரபலமான ’சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா (Cyberjaya) நகரம், இந்தச் சிப்பாங் மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது.
வரலாறு[தொகு]
உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாநிலங்களில் இருந்து, 1975 ஜனவரி மாதம் முதலாம் தேதி, சிப்பாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டில் சிப்பாங் நகராட்சி தகுதியைப் பெற்றது.[3]
மலேசிய நாடாளுமன்றம்[தொகு]
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சிப்பாங் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி | கட்சி | ||
---|---|---|---|---|---|---|
P113 | சிப்பாங் | முகமட் அனிபா மைடின் | பாக்காத்தான் ஹரப்பான் | அமானா |
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்[தொகு]
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் சிப்பாங் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[4]
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P113 | N54 | தஞ்சோங் சிப்பாட் Tanjong Sepat |
போர்கான் அமான் ஷா Borhan Aman Shah |
பாக்காத்தான் ஹாராப்பான் |
P113 | N55 | டெங்கில் Dengkil |
அடிப் சான் அப்துல்லா Adhif Syan Abdullah |
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்) |
P113 | N56 | சுங்கை பீலேக் Sungai Pelek |
ரோனி லியூ தியான் கியூ Ronnie Liu Tian Khiew |
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க) |
P160 | N44 | லார்கின் | முகமட் இஷார் அகமது Mohd Izhar Ahmad |
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்) |
P160 | N45 | சுதுலாங் | சென் கா எங் Chen Kah Eng |
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க) |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Portal Rasmi PDT Sepang Perutusan Pegawai Daerah". www2.selangor.gov.my. 2021-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சிப்பாங் மாவட்டத்தின் பரப்பளவு புள்ளிவரங்கள்". www2.selangor.gov.my. 2018-08-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Latar Belakang – MAJLIS PERBANDARAN SEPANG". 3 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்". 2018-05-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-03 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Sepang F1 Circuit அதிகாரப்பூர்வ இணையதளம்
- Sepang Town Council website பரணிடப்பட்டது 2006-09-11 at the வந்தவழி இயந்திரம்
- கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- KLIA Express Rail Link
- சிப்பாங் மாவட்டம் திறந்த ஆவணத் திட்டத்தில்
- Time To Attack: Sepang! - Malaysia's First Time Attack Series Official Website பரணிடப்பட்டது 2012-08-27 at the வந்தவழி இயந்திரம்