உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய பல்லூடகப் பெருவழி

ஆள்கூறுகள்: 2°55′0″N 101°39′0″E / 2.91667°N 101.65000°E / 2.91667; 101.65000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய பல்லூடகப் பெருவழி
Multimedia Super Corridor
பொருளாதார மண்டலம்
Special Economic Zone
மலேசிய பல்லூடகப் பெருவழியின் ஒரு பகுதியான சைபர்ஜெயா
மலேசிய பல்லூடகப் பெருவழியின் ஒரு பகுதியான சைபர்ஜெயா
மலேசிய பல்லூடகப் பெருவழி is located in மலேசியா
மலேசிய பல்லூடகப் பெருவழி
      பல்லூடகப் பெருவழி
ஆள்கூறுகள்: 2°55′0″N 101°39′0″E / 2.91667°N 101.65000°E / 2.91667; 101.65000
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
பரப்பளவு
 • மொத்தம்750 km2 (290 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

மலேசிய பல்லூடகப் பெருவழி (MSC) (மலாய்:Koridor Raya Multimedia; ஆங்கிலம்:Multimedia Super Corridor) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economic Zone); மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓர் உயர் தொழில்நுட்ப வணிக மாவட்டமும் ஆகும்.

இந்த வணிகப் பொருளாதார மண்டலம், தற்சமயம் எம்.எஸ்.சி. மலேசியா (MSC Malaysia) என்று சுருக்கமாகப் பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்த மண்டலம் பெரும் அளவிலாண பரப்பளவைக் கொண்டது.

புவியியல் அமைவு

[தொகு]

மலேசிய பல்லூடகப் பெருவழி மண்டலத்தின் வடக்கு முனை கோலாலம்பூர் நகரத்தில் உள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சி சைபர்ஜெயா, புத்ராஜெயா, கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் சிப்பாங் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கடக்கிறது.[1]

அதன் பின்னர் பண்டார் துன் ரசாக், பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், ஆகிய இடங்களைக் கடந்து நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் புறநகர்ப் பகுதிகளில் முற்றுப் பெறுகிறது.[2]

நோக்கங்கள்

[தொகு]

மலேசிய பல்லூடகப் பெருவழி திட்டம் 1996 பிப்ரவரி 12-ஆம் தேதி, மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கப்பட்டது.

தொலைநோக்கு 2020 (Vision 2020) எனும் வியூக நோக்கங்களை விரைவு படுத்துவதற்கும்; 2020-ஆம் ஆண்டளவில் மலேசியாவை ஒரு நவீன நாடாக மாற்றுவதற்கும்; நவீனத் தொழிநுட்ப அறிவை ஏற்றுக் கொள்வதற்கும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

காட்சியகம்

[தொகு]

மலேசிய பல்லூடகப் பெருவழி அமைந்துள்ள இடங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jeong Chun Hai @Ibrahim, & Nor Fadzlina Nawi. (2007). Principles of Public Administration: An Introduction. Kuala Lumpur: Karisma Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-195-253-5
  2. Jeong Chun Hai @Ibrahim. (2007). Fundamental of Development Administration. Selangor: Scholar Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-5-04508-0

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]