சுங்கைவே

ஆள்கூறுகள்: 3°05′13.78″N 101°37′10.47″E / 3.0871611°N 101.6195750°E / 3.0871611; 101.6195750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கைவே
புற நகர்
Sungai Way
கூட்டரசு நெடுஞ்சாலைக்கு அருகாமையில் சுங்கைவே
கூட்டரசு நெடுஞ்சாலைக்கு அருகாமையில் சுங்கைவே
ஆள்கூறுகள்: 3°05′13.78″N 101°37′10.47″E / 3.0871611°N 101.6195750°E / 3.0871611; 101.6195750
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு47300
தொலைபேசி குறியீடு+603-60
போக்குவரத்துப் பதிவெண்கள்B

சுங்கைவே, (மலாய்: Sungai Way; ஆங்கிலம்: Sungai Way; சீனம்: 双溪威); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள புற நகர்ப் பகுதி. SS8, SS9, SS9A ஆகிய குடியிருப்புப் பிரிவுகளை உள்ளடக்கியது. இதன் அதிகாரத்துவப் பெயர் ஸ்ரீ செத்தியா (Seri Setia).[1]

இது 1949-ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், பிரிக்ஸ் திட்டம் (Briggs Plan) அமல்படுத்தப்பட்ட போது, சுங்கைவே ஒரு புதிய கிராமமாக நிறுவப்பட்டது.[2] மலேசியச் சுதந்திரத்திற்குப் பிறகு, சுங்கைவே மக்கள்தொகை நிறைந்த இடமாகவும்; சுறுசுறுப்பான சுற்றுப்புறமாகவும் மாறியது.[3]

வரலாறு[தொகு]

1959-ஆம் ஆண்டில், கூட்டரசு நெடுஞ்சாலை (மலேசியா) (Federal Highway (Malaysia) திறப்பதற்கு முன்பு இங்கு ஒரு புதிய தொழில்துறை மண்டலம் (Sungai Way industrial zone) நிறுவப்பட்டது. அந்த வகையில், பெட்டாலிங் ஜெயா பகுதியில் முதன்முதலில் வளர்ச்சி பெற்ற கிராமம் சுங்கைவே கிராமம் ஆகும்.

முன்பு இது ஒரு கிராமம். சுங்கைவே பகுதியில் ஒரு புதுக் கிராமம் உருவாக்கப்பட்டது. அந்தக் கிராமம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து பெரும் நகரமானது. இப்போது சுங்கைவே கிராமம் என்பது இல்லை.[4]

முதல் குடியேற்றம்[தொகு]

சுங்கைவே பகுதியில் ஓடும் சுங்கைவே நதியின் நினைவாக புதிய கிராமத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. 1870-ஆம் ஆண்டுகளில் முதல் குடியேற்றம் நடைபெற்றது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சுங்கைவே கிராமத்தில் ரப்பர் தோட்டங்கள் இருந்தன. மற்றும் பல ஈயச் சுரங்கங்களும் இருந்தன.[4]

2006-ஆம் ஆண்டில் சுங்கைவே கிராமம் நகரத் தகுதியைப் பெற்றது. பெட்டாலிங் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கைவே&oldid=3429657" இருந்து மீள்விக்கப்பட்டது