உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை பூலோ

ஆள்கூறுகள்: 3°12′36″N 101°32′59″E / 3.21000°N 101.54972°E / 3.21000; 101.54972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கை பூலோ
Sungai Buloh
சுங்கை பூலோ is located in மலேசியா
சுங்கை பூலோ
சுங்கை பூலோ
தீபகற்ப மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°12′36″N 101°32′59″E / 3.21000°N 101.54972°E / 3.21000; 101.54972
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
மக்கள்தொகை
 • மொத்தம்93,497
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
அஞ்சல் குறியீடு
40160, 47000
தொலைபேசி எண்+603-60, +603-614, +603-615
போக்குவரத்துப் பதிவெண்கள்B

சுங்கை பூலோ, (மலாய்: Sungai Buloh; ஆங்கிலம்: Sungai Buloh; சீனம்: 双溪毛糯); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.

கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள் டாமன்சாரா, கெப்போங், குவாங் மற்றும் கோலா சிலாங்கூர்.

மலேசியாவின் மிகப்பெரிய தொழுநோய் மருத்துவமனைகளில் ஒன்றான (Sungai Buloh Leprosarium) இங்குதான் உள்ளது. 1930-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]

வரலாறு

[தொகு]

1890-ஆம் ஆண்டுகளில் சுங்கை பூலோவில் இரயில் சேவைகள் தொடங்கி விட்டன. இருந்தாலும், சுங்கை பூலோவின் தோற்றம் மற்றும் குடியேற்றம் தொடர்பான தெளிவான வரலாற்று பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

கோலா சிலாங்கூர் மாவட்டம் வழியாகப் பாயும் சுங்கை பூலோ நதியில் இருந்து சுங்கை பூலோ என்ற பெயர் வந்து இருக்கலாம். மலாய் மொழியில் சுங்கை (Sungai) என்றால் ஆறு. பூலோ (Buloh) என்றால் மூங்கில்.

சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனை

[தொகு]

1930-ஆம் ஆண்டுகளில் சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனை, உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்கியது. உலகிலேயே இரண்டாவது பெரிய தொழுநோய் ஆய்வு மையமாகவும் புகழ் பெற்று விளங்கியது.[2]

1926-ஆம் ஆண்டு மலாயாவில் தொழுநோயாளிகள் சட்டம் அமலுக்கு வந்தது. 1930 ஆம் ஆண்டில், சுங்கை பூலோ புக்கிட் லகோங் எனும் இடத்தில், மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், யூரேசியர்கள் மற்றும் துருக்கியர்கள் அடங்கிய ஒரு குழுவினர் அங்கு ஒரு சமூகத்தை அமைத்தனர்.

நம்பிக்கையின் பள்ளத்தாக்கு

[தொகு]

அந்த இடத்திற்கு நம்பிக்கையின் பள்ளத்தாக்கு (Leprosy Valley Of Hope) எனும் பெயரும் சூட்டப் பட்டது.[3] ஒரு காலக் கட்டத்தில் சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனையில் 2400 பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.

1935-ஆம் ஆண்டில் சுங்கை பூலோ தொழு நோய் மருத்துவமனை, நோயாளிகள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய பணத்தாள்களை (Banknotes of the Sungei Buloh Settlement) அச்சிட்டு வெளியீடு செய்தது. அந்தக் காலத்தில் தொழு நோயாளிகளைப் பற்றி பொது மக்களிடம் ஒரு தவறான கருத்து நிலவி வந்தது.

மருத்துவமனை நோயாளிகளுக்காக பணத்தாள்கள்

[தொகு]

ஏற்கனவே தொழு நோய் நோயாளிகள் அரசாங்கம் வெளியிட்ட பணத்தாள்களைப் பயன்படுத்தி வந்தார்கள். அந்தப் பணத்தாள்கள் மூலமாகத் தொழுநோய் கிருமிகள் பரவி வருவதாக வதந்திகள் கிளம்பின. அதனால் தொழு நோய் மருத்துவமனை நோயாளிகளுக்காக தனிப்பட்ட வகையில் பணத்தாள்களை அச்சிடப் பட்டன.

அந்த பணத்தாள்களில் தமிழ் மொழியும் இடம்பெற்று இருந்தது. தவிர ஆங்கிலம்; சீனம்; அரபு மொழிகளும் இடம்பெற்று இருந்தன.[4]

உள்ளூர் நிர்வாகம்

[தொகு]

சுங்கை பூலோ, நான்கு நகராண்மைக் கழகங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது:

சுங்கை பூலோ வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

சிலாங்கூர்; பெட்டாலிங் மாவட்டம்; சுங்கை பூலோ வட்டாரத்தில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. இரு பள்ளிகளிலும் 849 மாணவர்கள் பயில்கிறார்கள். 59 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD8456 சுங்கை பூலோ SJK(T) RRI Sungai Buloh[9] ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளி 47000 சுங்கை பூலோ 431 25
BBD8457 சுங்கை பூலோ SJK(T) Saraswathy Sungai Buloh[10] சரஸ்வதி தமிழ்ப்பள்ளி (சுங்கை பூலோ) 47000 சுங்கை பூலோ 418 34

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jun, Soo Wern. "Sungai Buloh's Valley of Hope: From leprosy settlement to gardening hub | Malay Mail". www.malaymail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  2. "History of the Sungai Buloh Settlement | The Way Home". www.thewayhome.my. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  3. Gomes, Vanessa; Gomes, Vanessa (16 April 2018). "Valley of Hope: A Look Into Sungai Buloh's Leprosy History". ExpatGo. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  4. "The rare Sungei Buloh Leprosarium Settlement Banknote". பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  5. "Majlis Bandaraya Shah Alam". www.mbsa.gov.my. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  6. "Official Portal of Petaling Jaya City Council (MBPJ)". Petaling Jaya City Council (MBPJ) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  7. "Selayang Municipal Council (MPS)". Official Portal of Selayang Municipal Council (MPS) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  8. "Kuala Selangor Municipal Council (MPKS)". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  9. "ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளி - SJKT RRI SUNGAI BULOH: AKTIVITI SEKOLAH". SJKT RRI SUNGAI BULOH. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  10. "சரஸ்வதி தமிழ்ப்பள்ளி (சுங்கை பூலோ)". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுங்கை பூலோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கை_பூலோ&oldid=3996873" இலிருந்து மீள்விக்கப்பட்டது