செகிஞ்சான்

ஆள்கூறுகள்: 3°30′0″N 101°6′0″E / 3.50000°N 101.10000°E / 3.50000; 101.10000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செகிஞ்சான்
Sekinchan
சிலாங்கூர்
Skyline of செகிஞ்சான்
செகிஞ்சான் is located in மலேசியா
செகிஞ்சான்

      செகிஞ்சான்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°30′0″N 101°6′0″E / 3.50000°N 101.10000°E / 3.50000; 101.10000
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்சபாக் பெர்ணம் மாவட்டம்
நிர்வாக மையம்சுங்கை பெசார்
அரசு
 • ஊராட்சிசபாக் பெர்ணம் ஊராட்சி
(Sabak Bernam District Council)
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு45400
தொலைபேசி எண்கள்++60-3-3241
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்www.mdsb.gov.my

செகிஞ்சான் (மலாய்: Sekinchan; ஆங்கிலம்: Sekinchan; சீனம்: 适耕庄) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் (Sabak Bernam District) உள்ள ஒரு சிறிய நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. வட மேற்கே உள்ளது.[1]

மலேசியாவில் நெல் உற்பத்திக்கு பிரபலமாக விளங்கும் இந்த நகரம்; மலேசியாவில் இயற்கைச் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு குறைந்த அளவிற்கு மலேசியத் தமிழர்களும் நெல் விவசாயம் செய்கின்றனர்.[2]

செகிஞ்சான் கிராம நகர்ப்புறத்தைச் சுற்றியுள்ள பரந்த பகுதியில், நீர்ப்பாசனம் முறை நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப் படுகிறது. நாட்டிலேயே அதிக நெல் விளைச்சல் தரும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

பொது[தொகு]

Map
2020-இல் செகிஞ்சான் இனப் பிரிவுகள்
இனங்கள் %
மலாயர்
47.5%
சீனர்
44.2%
இந்தியர்
7.7%
இதர இனத்தவர்
0.6%

செகிஞ்சான் அதன் கடல் உணவுக்காகப் பெயர் பெற்றது. அதற்காக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வருகை தருவது வழக்கம். அத்துடன் கோலாலம்பூர் மற்றும் ஈப்போவில் இருந்தும் உணவு அருந்துபவர்கள் வருவதும் வழக்கம். மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை கொள்முதல் செய்யும் சில அரிசி ஆலைகளும் இப்பகுதியில் உள்ளன.

செகிஞ்சானில் ஒரு நீர் பூங்கா உள்ளது. அதன் பெயர் செக்கின் ஓண்டர்லேண்ட் (MSekin Wonderland). 2021-இல் திறக்கப்பட்ட இந்தப் பூங்கா, கடற்கரையில் இருந்து வெகு அருகில் உள்ளது.[3]

நிலவியல்[தொகு]

செகிஞ்சான் வடமேற்கு சிலாங்கூர் சமவெளியில் அமைந்துள்ளது. இது தஞ்சோங் காராங்கில் இருந்து சபாக் பெர்ணம் மற்றும் மலாக்கா நீரிணை (Straits of Malacca) வரை நீடிக்கிறது. கடலோரங்களில் மீன்பிடி கிராமங்கள் உள்ளன.

தட்டையான சமவெளியில் அமைந்து இருப்பதால் இந்தச் சமவெளியை "சிலாங்கூர் அரிசி கிண்ணம்" (Rice bowl of Selangor) என்றும் அழைக்கிறார்கள்.

சபாக் பெர்ணம் மாவட்டம்[தொகு]

சபாக் பெர்ணம் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தின் நெல் விளையும் கேந்திரப் பகுதியாகும். அந்த வகையில் சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கை விவசாயம். இந்த மாவட்டம் சிலாங்கூரின் அதி மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை உள்ளன.

சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: சபாக்; சுங்கை பெசார்; செகிஞ்சான். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் சபாக் பெர்ணம் நகரம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செகிஞ்சான்&oldid=3704080" இருந்து மீள்விக்கப்பட்டது