செமினி

ஆள்கூறுகள்: 2°56′50″N 101°50′45″E / 2.94722°N 101.84583°E / 2.94722; 101.84583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செமினி
நகரம்
Semenyih
செமினி is located in மலேசியா மேற்கு
செமினி
செமினி
தீபகற்ப மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°56′50″N 101°50′45″E / 2.94722°N 101.84583°E / 2.94722; 101.84583
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு லங்காட் மாவட்டம்
மக்கள்தொகை
 • மொத்தம்93,497
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு43500
தொலைபேசி குறியீடு+60-3
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்காஜாங் நகராண்மைக் கழகத்தின் இணையத்தளம்

செமினி, (மலாய்: Bandar Semenyih; ஆங்கிலம்: Semenyih; சீனம்: 士毛月); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு லங்காட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.[1]

காஜாங் நகரின் தென்கிழக்கே 8 கி.மீ. (5 மைல்) தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகருக்குத் தென்கிழக்கே 28 கி.மீ. (17 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது.

நிலவியல்[தொகு]

செமினியின் சுற்றுப்புறங்கள் மலைப் பாங்கானவை. இந்த நகருக்கு அருகில் உள்ள மிக உயர்ந்த மலை புக்கிட் ஆராங் (Bukit Arang); 560 மீ (1,840 அடி) உயரம் கொண்டது. இயற்கை எழில் சூழ்ந்த பல நீர்வீழ்ச்சிகளுக்கு, செமினி நகரம் பிரவலமானது.[2]

இந்த நகரத்தில் தீக்கோழி வளர்ப்புப் பண்ணை (Ostrich Wonderland Show Farm) மிகவும் பிரபலமானது.[3] காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை மற்றும் காஜாங் சில்க் நெடுஞ்சாலை போன்ற புதிய நெடுஞ்சாலைகள் மூலம் இந்த நகரம் மிகவும் எளிதாக அணுகக்கூடிய நகரமாக விளங்கி வருகிறது.

செமினி எரி உலைத்திட்டம்[தொகு]

2001-ஆம் ஆண்டில், செமினி நகரத்திற்கு புரோகா நகரத்திற்கும் இடையில் 150 கோடி ரிங்கிட் செலவில் எரி உலை கட்டுவதற்கு நடுவண் அரசு திட்டம் வகுத்தது. [4][5] அந்தத் திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய எரி உலை திட்டமாகக் கருதப் பட்டது.[6]

அதன் முக்கிய நோக்கம் கோலாலம்பூரின் கழிவுகளை அங்கு கொண்டு வந்து சுத்திகரிப்புச் செய்வது ஆகும். 2003-ஆம் ஆண்டில் செமினி, புரோகா வாழ் மக்கள் ஆலைக் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்கள். மலேசிய வரலாற்றில் அது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது.

2005-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்றம் தற்காலிகமாகத் ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்தது.[7] அந்த வகையில் பொது மக்கள் வெற்றி பெற்றார்கள். இருப்பினும் அந்த ஆலையின் கட்டுமானத்திற்கு அதிகம் செலவாகும் என்பதால் அந்தக் கட்டுமானம் நிறுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.

புரோகா மலை[தொகு]

புரோகா மலையின் பசுமை இயற்கை

செமினி நகரத்திற்கு மிக அருகில் புரோகா மலை உள்ளது. மலேசியா தித்திவாங்சா மலைத்தொடரின் விளிம்பில் இந்த நகரம் அமைந்து உள்ளது. இந்த நகரம் வெப்பமண்டல மழைக்காடுகளும் பசுமையான மலைகளாலும் சூழப்பட்டு உள்ளது.

அவற்றில் மிக முக்கியமானது புரோகா குன்று. பொதுவாக இந்தக் குன்றை புரோகா மலை என்றே பலரும் அழைக்கிறார்கள். ஏறக்குறைய 400 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை; அதன் தனித்துவமான தோற்றத்திற்குச் சிறப்புப் பெற்று உள்ளது.

அந்த மலையில் மரங்கள் எதுவும் இல்லை. ஆனால் அதைச் சுற்றிலும் வெப்ப மண்டல மழைக்காடுகள் சூழ்ந்து உள்ளன. அதுவே ஓர் அசாதாரணமான நிலவியல் அமைப்பாகும்.

புரோகா மலையின் மற்றொரு இயற்கைக் காட்சி
புரோகா மலையின் அடிவாரத்தில் நடைப் பயணிகள்

புரோகா சுற்றுலாத் தளம்[தொகு]

புரோகா மலை மிக உயரமான மலை அல்ல. 400 மீட்டர் உயரம் தான். ஆக அதன் உயரத்தின் காரணமாகப் பெரும்பாலான மக்கள் அந்த மலையில் ஏறுவதற்கு அடிக்கடி வருகிறார்கள். சாதாரண நடைப் பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் மாறி வருகிறது.

அத்துடன் மலை அடிவாரத்தைச் சுற்றிலும் அழகு அழகான இயற்கைக் காட்சிகள். அதனால் அண்மைய காலங்களில் இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தளமாகத் தடம் பதித்தும் வருகிறது.

2016-ஆம் ஆண்டில் ஓலா போலா Ola Bola எனும் உள்ளூர்த் திரைப் படத்தின் சில காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டன.[8] புரோகா மலையும் மிகப் பிரபலம் அடைந்தது. அதன் பின்னர் இந்தப் பகுதிகளில் சில மேம்பாட்டுத் திட்டங்கள் தீவிரம் அடைந்தன. அதனால் இந்த மலையின் தனித்துவமான அழகு அமைப்பும் நிரந்தரமாகச் சேதம் அடைந்து வருகிறது.

செமினி வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

சிலாங்கூர்; உலு லங்காட் மாவட்டம்; செமினி நகர்ப்பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 788 மாணவர்கள் பயில்கிறார்கள். 75 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD4053 செமினி SJK(T) Ldg Dominion[9] டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 43500 செமினி 23 8
BBD4057 பண்டார் ரிஞ்சிங் SJK(T) Ldg Rinching[10] ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 43500 செமினி 368 39
BBD4060 செமினி SJK(T) Ladang Semenyih[11][12] செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி 47000 செமினி 397 28

மேற்கோள்கள்[தொகு]

 1. "Hulu Langat Municipal Council". பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
 2. "Best Trails in Semenyih". பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
 3. "Ostrich Wonderland, Semenyih, Selangor". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
 4. "Incinerator project". பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
 5. New dumpsite in Broga under study, New Straits Times, January 16, 2001
 6. R.B. Bhattacharjee (1 Jun 2006), Safe options in managing waste, Sun2Surf, archived from the original on 8 ஜனவரி 2007, பார்க்கப்பட்ட நாள் 27 January 2021 {{citation}}: Check date values in: |archive-date= (help)
 7. Sashi Ambi (April 2, 2006), Burn, Broga, burn..., New Straits Times
 8. "'Ola Bola' rakes in RM23 million at local box office". பார்க்கப்பட்ட நாள் 27 January 2021.
 9. "டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
 10. "ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
 11. Semenyih, SJKT Ladang. "செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Semenyih" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
 12. "செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
செமினி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=செமினி&oldid=3378813" இலிருந்து மீள்விக்கப்பட்டது