தெலுக் பாங்லிமா காராங்

ஆள்கூறுகள்: 3°46′12″N 100°58′48″E / 3.77000°N 100.98000°E / 3.77000; 100.98000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலுக் பாங்லிமா காராங்
Telok Panglima Garang
சிலாங்கூர்
தெலுக் பாங்லிமா காராங் is located in மலேசியா
தெலுக் பாங்லிமா காராங்

      தெலுக் பாங்லிமா காராங்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°46′12″N 100°58′48″E / 3.77000°N 100.98000°E / 3.77000; 100.98000
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோலா லங்காட் மாவட்டம்
நிர்வாக மையம்பந்திங்
அரசு
 • ஊராட்சிகோலா லங்காட் ஊராட்சி
(Kuala Langat District Council)
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு42600
தொலைபேசி எண்கள்++60-3-3122
போக்குவரத்துப் பதிவெண்கள்B

தெலுக் பாங்லிமா காராங் (மலாய்: Telok Panglima Garang; ஆங்கிலம்: Telok Panglima Garang; சீனம்: 直落邦里玛嘉朗) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா லங்காட் மாவட்டத்தில் (Kuala Langat District) உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும்.

மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து மேற்கே 47 கி.மீ.; கிள்ளான் நகரில் இருந்து தெற்கே 16 கி.மீ.; பந்திங் நகரில் இருந்து வடக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஒரு தீர்வையற்ற வணிக மண்டலம் (Free Trade Zone) உள்ளது.

மலாக்கா நீரிணையை எதிர்கொள்ளும் கேரி தீவு மற்றும் இண்டா தீவு போன்ற கடலோரத் தீவுகளுக்கு அருகில் அமைந்து இருக்கிறது. ஆகவே இந்த நகரும் ஒரு கடலோர நகரமாகவே கருதப் படுகிறது.[1]

வரலாறு[தொகு]

தெலுக் பாங்லிமா காராங்கின் அசல் பெயர் நிபோங் டெங்கில் (Nibong Dengkil). அதன் புவியியல் நிலை காரணமாக, பழங்குடியின மக்களால் 'வளைகுடா' என்று அழைக்கப்படுகிறது. தெலுக் (Telok) என்றால் மலாய் மொழியில் வளைகுடா என்று பொருள்படும்.[1]

முன்பு காலத்தில் அந்த நிபோங் டெங்கில், தெமுவான் (Temuan) பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களின் குடியேற்றமாக இருந்தது. நிபோங் டெங்கில் பகுதி, லங்காட் ஆற்றின் அருகே நல்ல ஓர் உத்திசார்ந்த நிலையில் அமைந்து இருந்ததால், அது அச்சே (Acheh) வணிகர்களின் நிறுத்தப் பகுதியாகவும் மாறியது.[2]

பின்னர் அச்சே (Acheh) வணிகர்கள் லங்காட் ஆற்றின் கீழ்ப் பகுதியில் நிரந்தரக் குடியேற்றங்களை உருவாக்கினர். அந்தப் பகுதி பெத்திங் பாக் அச்சே (Beting Pak Acheh) என்று அழைக்கப்பட்டது. தெமுவான் பழங்குடி இனத்தவர் அச்சே வணிகர்களிடம் சரண் அடைந்து, டெங்கில் (Dengkil) பகுதியில் உள்ள புக்கிட் தம்போய் (Bukit Tampoi) எனும் இடத்திற்குப் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[2]

போக்குவரத்து[தொகு]

தெலுக் பாங்லிமா காராங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் 5 கிள்ளான்-பந்திங் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 2012-ஆம் ஆண்டில்,இந்த நகரம் E26   தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டது.

இந்த நெடுஞ்சாலை தெலுக் பாங்லிமா காராங் நகரத்தை கிள்ளான், செஞ்சாரோம், பந்திங், சிப்பாங் மற்றும் போர்ட்டிக்சன் நகரங்களுடன் இணைக்கிறது.

தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளி[தொகு]

தெலுக் பங்லீமா காராங் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 444 மாணவர்கள் பயில்கிறார்கள்; 37 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD3048 தெலுக் பாங்லிமா காராங் SJK(T) Telok Panglima Garang[4] தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளி 42500 தெலுக் பாங்லிமா காராங் 444 37

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]