காஜாங்2

ஆள்கூறுகள்: 2°57′54.71″N 101°47′47.65″E / 2.9651972°N 101.7965694°E / 2.9651972; 101.7965694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஜாங்2
Kajang2
சிலாங்கூர்
காஜாங்2 நகர நுழைவாயில்
காஜாங்2 நகர நுழைவாயில்
Map
ஆள்கூறுகள்: 2°57′54.71″N 101°47′47.65″E / 2.9651972°N 101.7965694°E / 2.9651972; 101.7965694
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு லங்காட் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு43000
மலேசிய தொலைபேசி எண்03
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்http://www.mpkj.gov.my

காஜாங்2 (ஆங்கிலம், மலாய்: Kajang2) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு புதிய குடியிருப்பு நகரம் ஆகும். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 22 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.[1]

காஜாங் 2, ரெகோ சாலைக்கு (Jalan Reko) அருகில், பண்டார் பாரு பாங்கி, (Bandar Baru Bangi) செக்சன் 5-க்கு எதிரே அமைந்துள்ளது. எனவே இந்த நகரம் பெரும்பாலும் பண்டார் பாரு பாங்கியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.[2]

பொது[தொகு]

இந்த நகரம் எம்.கே.எச்.பெர்காட் (MKH Berhad) எனும் நிறுவனத்தால் 2020-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. காஜாங் நகரத்தின் மத்திய வணிக மாவட்டமாகவும்; ஒருங்கிணைந்த குடியிருப்பு நகரமாகவும் வடிவமைக்கப்பட்டது. இந்த நகரத்தைக் கட்டி முடிக்க RM 5.7 பில்லியன் செலவானது.[3]

இந்த நகரத்தில் அதற்கே உரிய சொந்த உள்கட்டமைப்பு உள்ளது. இந்த நகரம் தனிப்பட்ட வகையில் சொந்தமாக உள்ள கொமுட்டர் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நகரத்திற்கு என்றே தனியாக ஒரு கொமுட்டர் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையத்தை எம்.கே.எச்.பெர்காட் நிறுவனம் RM 70 மில்லியன் செலவில் கட்டி கொடுத்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஜாங்2&oldid=3776611" இருந்து மீள்விக்கப்பட்டது