கிள்ளான் தீவு

ஆள்கூறுகள்: 3°00′N 101°18′E / 3.000°N 101.300°E / 3.000; 101.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிள்ளான் தீவு
கிள்ளான் தீவில்
சதுப்புநிலக் காடுகள்
கிள்ளான் தீவு is located in மலேசியா
கிள்ளான் தீவு
கிள்ளான் தீவு
      கிள்ளான் தீவு       மலேசியா
புவியியல்
அமைவிடம்மலாக்கா நீரிணை
ஆள்கூறுகள்3°00′N 101°18′E / 3.000°N 101.300°E / 3.000; 101.300
பரப்பளவு2.70 km2 (1.04 sq mi)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகைஇல்லை

கிள்ளான் தீவு (மலாய்: Pulau Klang; ஆங்கிலம்: Klang Island; சீனம்: 巴生岛) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் மலாக்கா நீரிணை கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு.[1]

சதுப்பு நிலங்களால் (Mangrove Swamps) சூழப்பட்டுள்ள இந்தத் தீவு, 2.70 கிமீ² பரப்பளவைக் கொண்டது. இண்டா தீவுக்கு (Indah Island) அடுத்த நிலையில் [[கிள்ளான் மாவட்டம்|கிள்ளான் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவு; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தீவுகளில் மூன்றாவது பெரிய தீவும் ஆகும்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் தென்மேற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ளது.

பொது[தொகு]

கிள்ளான் தீவுகள் எட்டு சிறிய சதுப்புநிலத் தீவுகளை உள்ளடக்கியது. அவற்றில் மூன்று தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் சார்ந்தவை. மற்ற ஐந்து சதுப்புநிலத் தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pulau Klang is an island on the mouth of the Klang River in Selangor. The island faces North Port across the Klang Straits, and is covered with mangrove swamp". பார்க்கப்பட்ட நாள் 4 May 2023.
  2. "Klang Islands comprise eight major mangrove islands (known locally as pulau), three of which are inhabited and local livelihoods have traditionally been fisheries-linked. The islands are located in the Straits of Malacca, approximately 50 km to the southwest of the Malaysian capital Kuala Lumpur". பார்க்கப்பட்ட நாள் 4 May 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளான்_தீவு&oldid=3910617" இலிருந்து மீள்விக்கப்பட்டது