புக்கிட் பெருந்தோங்

ஆள்கூறுகள்: 3°25′27″N 101°33′20″E / 3.42417°N 101.55556°E / 3.42417; 101.55556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் பெருந்தோங்
Bukit Beruntung
சிலாங்கூர்
Skyline of புக்கிட் பெருந்தோங்
Map
புக்கிட் பெருந்தோங் is located in மலேசியா
புக்கிட் பெருந்தோங்

      புக்கிட் பெருந்தோங்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°25′27″N 101°33′20″E / 3.42417°N 101.55556°E / 3.42417; 101.55556
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு சிலாங்கூர் மாவட்டம்
நிர்வாக மையம்கோலா குபு பாரு
உருவாக்கம்1990-களில்
அரசு
 • ஊராட்சிஉலு சிலாங்கூர் ஊராட்சி
(Ulu Selangor District Council)
மக்கள்தொகை (2018)
 • மொத்தம்199,600
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு48300[1]
தொலைபேசி எண்கள்+603-602
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்mdhs.gov.my

புக்கிட் பெருந்தோங், (மலாய்: Bandar Bukit Beruntung; ஆங்கிலம்: Bukit Beruntung; சீனம்: 武吉伯伦东); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் (Hulu Selangor District) உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 48 கி.மீ. வடக்கே உள்ளது.

இந்த நகரத்திற்கு மிக அருகாமையில் உள்ள நகரம் புக்கிட் செந்தோசா (Bukit Sentosa). அதற்கு அடுத்த நிலையில் அருகிலுள்ள நகரங்கள் ராசா, (Bandar Rasa), செரண்டா (Serendah) மற்றும் பத்தாங்காலி (Batang Kali) நகரங்கள் ஆகும்.

புக்கிட் பெருந்தோங் நகரம் ஒரு திட்டமிட்ட நகரம்; தாலாம் கார்ப்பரேசன் நிறுவனத்தால் (Talam Corporation Berhad) உருவாக்கப்பட்டது. இந்த நகரத்தில்தான் பிரபலமான புக்கிட் பெருந்தோங் குழிப்பந்தாட்டம் திடல் (Bukit Beruntung Golf & Country Club) உள்ளது.[2]

பொது[தொகு]

1995-ஆம் ஆண்டில் புக்கிட் பெருந்தோங் நகரம்; இரண்டாவது பெட்டாலிங் ஜெயாவாக உருவாகலாம் எனும் வதந்தி பரவியது. அத்துடன் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kuala Lumpur International Airport) உலு சிலாங்கூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ளதாகவும் பேசப்பட்டது.[3]

அத்துடன் புக்கிட் பெருந்தோங் நகருக்கு அருகில் உள்ள புக்கிட் தாகார் (Bukit Tagar) எனும் இடத்திற்கு கோலாலம்பூர் குதிரை பந்தயத் திடலும்; பத்தாங்காலி உலு யாம் (Ulu Yam) பகுதிக்கு மலேசிய தேசிய விலங்குக் காட்சி சாலையும் மாற்றப் படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பேசப்பட்டது.

அசையா சொத்துகளின் விலை உயர்வு[தொகு]

அதனால் பொதுமக்கள் அங்கு அசையா சொத்துகளை வாங்குவதற்குப் போட்டிப் போட்டுக் கொண்டு முன்வந்தனர். அந்த வகையில் ஆயிரக் கணக்கான குடியிருப்பு வீடுகளும்; கடைவீடுகளும் பொதுமக்களால் வாங்கப்பட்டன. அசையா சொத்துகளின் விலையும் உயர்ந்தது.

ஆனால் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், சிப்பாங் புறநகர்ப் பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக இப்போதைக்கு புக்கிட் பெருந்தோங்கில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் (Abandoned Buildings) இன்றும் உள்ளன.[3]

அத்துடன் புக்கிட் பெருந்தோங் உள்கட்டமைப்பின் பற்றாக்குறை (Scarce Infrastructure); பொது வசதிகளின் மோசமான பராமரிப்பு (Poor Maintenance of Public Facilities); மற்றும் அடிப்படை வசதிகளின் (Basic Amenities) கடுமையான பற்றாக்குறை; ஆகியவற்றின் பார்வையில் அந்த நகரப்பகுதி இப்போது அழகில்லாத நிலையில் மங்கிப் போய் காணப்படுகிறது.[3]

உள்கட்டமைப்பு[தொகு]

மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்கு வழித்தடம் E1   வழியாகவும் (North–South Expressway Northern Route); மற்றும் மலேசிய கூட்டரசு சாலை 3208 வழியாகவும் (Malaysia Federal Route 3208); புக்கிட் பெருந்தோங் சாலை சந்திப்பு - 118 வழியாகவும் (Jalan Bukit Beruntung) புக்கிட் பெருந்தோங் நகரை அணுகலாம்.[4]

பொது போக்குவரத்தைப் பொறுத்தவரை,  KA11  செரண்டா தொடருந்து நிலையம் (Serendah Komuter Station) மற்றும்  KA12  பத்தாங்காலி தொடருந்து நிலையம் (Batang Kali Komuter Station) ஆகியவை மிக அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும்.

தொழில்துறை பகுதி[தொகு]

அண்மைய ஆண்டுகளில், புக்கிட் பெருந்தோங் தொழில்துறைப் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் தொழிற்சாலைகள், பொருள் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உற்பத்தித் தளங்களைத் திறந்துள்ளன. இது இங்கு அண்மையில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றமாகவே கருதப்படுகிறது.[5]

  • பெரோடுவா வாகன உற்பத்தி நிறுவனம்
    • (Perodua Manufacturing Sdn Bhd)
  • பெரோடுவா வாகன இயந்திர உற்பத்தி நிறுவனம்
    • (Perodua Engine Manufacturing Sdn Bhd)
  • பெரோடுவா பன்னாட்டு உற்பத்தி நிறுவனம்
    • (Perodua Global Manufacturing Sdn Bhd)
  • பெரோடுவா டாயாட்சு காவாமூரா உற்பத்தி நிறுவனம்
    • (Perodua Daihatsu Kawamura-Kako Manufacturing (PDKM) Sdn Bhd)
  • கிவி ஆசியா நிறுவனம் (பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆடை)
    • (Givi Asia Sdn Bhd (Safety Equipment & Clothing))
  • புஜி இருக்கைகள் தயாரிப்பு நிறுவனம்
    • (Fuji Seats (M) Sdn Bhd (Transportation Equipment))
  • ஏபிஎம் வாகன பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்
    • (APM Automotive Holding Berhad)
  • ஏபிஎம் வாகன பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்
    • (APM Plastics Sdn Bhd)
  • இங்க்ரெசு தொழிநுட்ப நிறுவனம்
    • (INGRESS TECHNOLOGIES SDN. BHD)
  • ரிவர்சுடோன் வளங்கள் நிறுவனம்
    • (Riverstone Resources Sdn Bhd)
  • தஞ்சோங் சரக்கு பட்டுவாடா நிறுவனம்
    • (Tanjong Express (M) Sdn Bhd)

குடியிருப்பு பகுதிகள்[தொகு]

  • தாமான் செமாராக்
    • (Taman Semarak)
  • தாமான் தஞ்சோங்
    • (Taman Tanjung)
  • தாமான் சரோஜா
    • (Taman Seroja)
  • செரி கெம்பாங்கன் அடுக்குமாடி
    • (Apartment Seri Kembangan)
  • செரி தஞ்சோங் அடுக்குமாடி
    • (Apartment Seri Tanjung)
  • செரி செரோஜா அடுக்குமாடி

Apartment Seri Seroja)

  • செரி தொம்பெட் அடுக்குமாடி
    • (Apartment Seri Trompet)
  • செரி லீலி அடுக்குமாடி
    • (Apartment Seri Lili)
  • செரி செமாராக் அடுக்குமாடி
    • (Apartment Sri Semarak)
  • தாமான் மெலோர்
    • (Taman Melor)
  • தாமான் இனாய்
    • (Taman Inai)
  • மெலோர் அடுக்குமாடி
    • (Apartment Melur)
  • தாமான் பூங்கா ராயா
    • (Taman Bunga Raya)
  • தாமான் அடினியம்
    • (Taman Adenium)
  • கெனங்கா அடுக்குமாடி
    • (Apartment Kenanga)
  • தெராத்தாய் அடுக்குமாடி
    • (Apartment Teratai)
  • டாலியா அடுக்குமாடி
    • (Apartment Dahlia)
  • கெமுனிங் அடுக்குமாடி
    • (Apartment Kemuning)
  • அங்கெரிக் அடுக்குமாடி
    • (Apartment Anggerik)
  • மாவார் அடுக்குமாடி
    • (Apartment Mawar)
  • தாமான் கசுதூரி
    • (Taman Kasturi)
  • பிரிமா பெருந்தோங்
    • (Prima Beruntung)
  • மாவார் அடுக்குமாடி
    • (Apartment Mawar)
  • அங்கெரிக் அடுக்குமாடி
    • (Apartment Anggerik)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bukit Beruntung, Rawang - Postcode - 48300 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 29 April 2023.
  2. "Bukit Beruntung Golf & Country Resort (BBGC) is a proprietary golf club with a 18-hole championship-length golf course, sprawled over 362 acres of land and was built in 1993". பார்க்கப்பட்ட நாள் 29 April 2023.
  3. 3.0 3.1 3.2 "Living in a 'war zone': Bukit Beruntung township has been scarred by the ugly sight of thousands of abandoned buildings, scarce infrastructure, poor maintenance of public facilities and a severe lack of basic amenities". Malay Mail (in ஆங்கிலம்). 18 April 2015. பார்க்கப்பட்ட நாள் 29 April 2023.
  4. Administrator. "PLUS MALAYSIA BERHAD - Toll Abbreviation". www.plus.com.my. Archived from the original on 2018-12-09. பார்க்கப்பட்ட நாள் 2018-11-23.
  5. "Bukit Beruntung dan Bukit Sentosa terus dibangunkan". www.selangorkini.my. Selangorkini. பார்க்கப்பட்ட நாள் 13 Apr 2020.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_பெருந்தோங்&oldid=3740903" இலிருந்து மீள்விக்கப்பட்டது