உள்ளடக்கத்துக்குச் செல்

காப்பார்

ஆள்கூறுகள்: 3°08′N 101°23′E / 3.133°N 101.383°E / 3.133; 101.383
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்பார்
Kapar
காப்பார் is located in மலேசியா
காப்பார்
      காப்பார்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°08′N 101°23′E / 3.133°N 101.383°E / 3.133; 101.383
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கிள்ளான் மாவட்டம்
நிர்வாக மையம்காப்பார்
மக்கள்தொகை
 (2022)
 • மொத்தம்1,89,369
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
42xxx
தொலைபேசி எண்கள்+60-3
போக்குவரத்துப் பதிவெண்கள்B

காப்பார், (மலாய்: Kapar; ஆங்கிலம்: Kapar; சீனம்: 卡帕尔); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.[1]

காப்பார் நகரம் மலாக்கா நீரிணையில் பாயும் காப்பார் ஆற்றுக்கு (Kapar River) அருகில் உள்ளது. இந்த நகரத்தின் மேற்கில், பெரிய அளவிலான சதுப்பு நிலம் உள்ளது. ஆனால் கடலை ஒட்டிய சில பகுதிகளில் மட்டும் மீட்கப்பட்டு உள்ளது.

பொது[தொகு]

காப்பார் நகரம் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகிய மூன்று இணத்தவர்களைக் கொண்ட ஒரு பகுதி. மலாய் மக்களில் பலர் ஜாவானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். நகரப் பகுதி சீனர்களால் நடத்தப்படும் கடைகளினால் நிரம்பியுள்ளது.

இந்தியர்கள் பெரும்பாலும் புறநகர்ப்பகுதிகளில் வாழ்கின்றனர். காப்பார் பகுதியில் நிறைய செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்த போது தமிழர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள்.

கிள்ளான் மாவட்டம்[தொகு]

கிள்ளான் மாவட்டம் (Klang District) மாவட்டத்திற்கு வடக்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா லங்காட் மாவட்டம்; கிழக்கில் பெட்டாலிங் மாவட்டம்; ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளன.[2] மேற்கே மலாக்கா நீரிணை; 53.75 கி.மீ. அளவிற்குக் கடற்கரை பகுதியைக் கொண்டு உள்ளது.

இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கிள்ளான் (Klang City). மற்ற நகரங்கள் கிள்ளான் துறைமுகம், பண்டமாரான், காப்பார், மேரு மற்றும் பண்டார் சுல்தான் சுலைமான். இந்த மாவட்டம் கிள்ளான் மற்றும் காப்பார் என இரண்டு முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

கிள்ளான் ஆறு இந்த மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் முடிவு அடைகின்றது. மேலும் இந்த மாவட்டத்தின் கடல் பகுதிகளில் கிள்ளான் தீவு; இண்டா தீவு; செட் மாட் சின் தீவு; நண்டு தீவு; தெங்கா தீவு; ரூசா தீவு; செலாட் கெரிங் தீவு; பிந்து கெடோங் தீவு போன்ற தீவுகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kapar is located in the region of Selangor. The distance from Kapar to Malaysia's capital Kuala Lumpur (Kuala Lumpur) is approximately 34 km". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2023.
  2. "BACKGROUND". luas.gov.my.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பார்&oldid=3996978" இலிருந்து மீள்விக்கப்பட்டது