உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் (மலாய்: Kerajaan Tempatan di Malaysia அல்லது Pihak Berkuasa Tempatan; ஆங்கிலம்: Local Government in Malaysia; சீனம்:马来西亚地方政府; ஜாவி: کراجاءن تمڤتن دمليسيا ) என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசாங்க அமைப்பு முறைமை ஆகும்.

இந்த அமைப்பு முறைமையின் கீழ்; மலேசியாவில் உள்ள உள்ளாட்சி மன்றங்களை, மலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்கள் நிர்வாகம் செய்கின்றன.

மலேசிய அரசியலமைப்பில் (Constitution of Malaysia) வழங்கப்பட்டுள்ள சட்டத் திட்டங்களின்படி, மலேசியக் கூட்டரசு பிரதேசங்களில் உள்ள உள்ளாட்சி மன்றங்களைத் தவிர, மற்ற அனைத்து உள்ளாட்சி மன்றங்களும், அந்தந்த மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன்.

மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு, மலேசியா முழுவதும் உள்ள உள்ளாட்சி மன்றங்களின் நடைமுறைகளை ஒருங்கிணைத்துத் தரப் படுத்துவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது.[1]

பொது

[தொகு]

மலேசிய உள்ளாட்சி மன்றங்களுக்குச் சட்டங்களை இயற்றவும்; விதி முறைகளை உருவாக்கவும்; மதிப்பீட்டு வரிகளை (Assessment Tax) வசூலிக்கவும் அதிகாரம் உள்ளது. அதே வேளையில், அவற்றின் அதிகார எல்லைக்குள் எந்தவொரு வணிகத்திற்கும் உரிமங்கள் வழங்கவும்; அனுமதிகள் வழங்கவும் உரிமைகள் உள்ளன.

அத்துடன் அவற்றின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளை நிர்வகித்தல்; திட்டமிட்டு அபிவிருத்தி செய்தல்; பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தல்; கழிவுகள் மற்றும் குப்பைகளை அப்புறப் படுத்துதல் போன்ற கடப்பாடுகளும் அந்த உள்ளாட்சி மன்றங்களுக்கு உள்ளன.[1]

உள்ளூர் அதிகார மன்றங்கள்

[தொகு]

ஓர் அரசு ஊழியர் ஓர் உள்ளாட்சி மன்றத்தின் தலைவராக நியமிக்கப் படுகிறார். உள்ளாட்சி மன்றங்கள்; பொதுவாக உள்ளூர் அதிகார மன்றங்கள் (மலாய்: Pihak Berkuasa Tempatan PBT) என்று அழைக்கப் படுகின்றன.

கிராமப்புற மாவட்ட உள்ளாட்சி மன்றம் மற்றும் நகராட்சியின் தலைவர் யாங் டி பெர்துவா (Yang Di-Pertua) என்று அழைக்கப் படுகிறார். நகராட்சி அல்லது மாநகராட்சிகளின் தலைவர்; டத்தோ பண்டார் (Datuk Bandar) என்றும் மேயர் (Mayor) என்றும் அழைக்கப் படுகிறார்.

பொறுப்புகள்

[தொகு]

உள்ளாட்சி மன்றங்களின் வகை

[தொகு]
வகை ஜொகூர் கெடா கிளாந்தான் மலாக்கா நெகிரி செம்பிலான் பகாங் பினாங்கு பேராக் பெர்லிஸ் சபா சரவாக் சிலாங்கூர் திராங்கானு கூட்டாட்சி மொத்தம்
மாநகரட்சிகள் 3 1 1 1 1 2 1 1 3 3 1 1 19
நகராட்சிகள் 7 4 1 3 2 2 4 1 2 4 8 2 40
மாவட்ட ஆட்சிகள் 6 6 11 4 8 10 22 19 1 4 91
சிறப்பு மன்றங்கள் 1 1 1 2 5
மொத்தம் 16 12 12 4 7 12 2 15 1 25 26 12 7 3 155

புள்ளி விவரங்கள்: மலேசிய உள்ளாட்சி, வீட்டுவசதி அமைச்சகம்[2]

வரலாற்றுப் பின்னணி

[தொகு]

மலேசியாவில் உள்ள அரசு அமைப்பு (Government System) பிரித்தானியக் காலனித்துவத்தின் பாரம்பரியத்தைச் சார்ந்தது. அதன் பல சட்டத் திட்டங்கள் பிரித்தானியச் சட்டங்களில் இருந்து பெறப்பட்டவை. மற்றும் அவற்றின் மாதிரியில் வடிவம் அமைக்கப் பட்டவை.

இருப்பினும் காலப்போக்கில், மலேசியாவின் தனித்துவமான பல உள்ளூர் சமூகக் கலாச்சாரப் பண்புகள், அந்தச் சட்டங்களில் இணைக்கப்பட்டு விட்டன.[3]

பினாங்கு நகராட்சிப் பகுதி

[தொகு]

1801-ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள், பினாங்கில் ஒரு மதிப்பீட்டாளர் குழுவை (Council of Assessors) நிறுவினர். அந்தக் குழு, பினாங்கு நகராட்சிப் பகுதியைத் திட்டமிடுதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டது.

அதுவே அன்றைய மலாயாவில், உள்ளூராட்சி அரசாங்கத்தின் அடிப்படைத் தொடக்கமாக அமைந்தது. பினாங்கிற்குப் பிறகு, உள்ளூராட்சி மன்றங்கள் மலாக்காவில் தொடங்கப் பட்டன. அடுத்து கூட்டாட்சி (Federated Malay States) மற்றும் கூட்டாட்சி அல்லாத மலாய் மாநிலங்களிலும் (Unfederated Malay States) தொடர்ந்தன. இறுதியாக சரவாக் இராச்சியம் மற்றும் வடக்கு போர்னியோ (சபா) வரை நீட்டிக்கப்பட்டது.

உள்ளாட்சி மன்றங்களின் வகைகள்

[தொகு]

மலேசியாவில் தற்போது நான்கு வகையான உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன.

உள்ளூராட்சிகள்

[தொகு]

தற்போது மலேசியாவில் மொத்தம் 155 உள்ளூராட்சிகள் உள்ளன. அவற்றின் பிரிவுகள்:

  • 19 - மாநகராட்சிகள்[4]
  • 39 - நகராட்சிகள்[4]
  • 92 - மாவட்ட ஊராட்சிகள்[4]
  • 5 - மேம்பாட்டுக் கழகங்கள்[4]

1973 மறுசீரமைப்புக்கு முன்னர்

[தொகு]

1973-ஆம் ஆண்டில் மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அதற்கு முன்னர் மலேசிய உள்ளாட்சி மன்றங்களில், 6 வகையான உள்ளாட்சிகள் இருந்தன. உள்ளாட்சிப் பதவிகளும் உள்ளாட்சிகளுக்குப் பெயர் வைப்பதிலும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு இருந்தன.

அப்போது மலேசியாவில் இருந்த உள்ளாட்சி மன்றங்களின் எண்ணிக்கை 418. அவை கீழ்க்கண்ட பெயர்களில் செயல்பட்டன:

நிலை அளவுகோல்கள்

[தொகு]

ஒரு நகராட்சிக்கு மாநகராட்சி நிர்வாகத் தகுதியை (City Status) வழங்குவதற்கும் சில அடிப்படை அளவுகோல்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை:

  • குறைந்தபட்ச மக்கள் தொகை 500,000
  • ரிங்கிட் 100 மில்லியனுக்கும் குறையாத ஆண்டு வருமானம்

நகராட்சி நிர்வாகத் தகுதியை (Municipal Status) வழங்குவதற்கும் குறைந்தபட்ச அளவுகோல்கள் உள்ளன.

  • குறைந்தபட்ச மக்கள் தொகை 150,000
  • ரிங்கிட் 20 மில்லியனுக்கும் குறையாத ஆண்டு வருமானம்

இவை ஜூன் 2008-இல் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்கள் இவையாகும்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 kilzacmaster, the. "Local government in Malaysia: Types, functions, organisation, members and budget". Archived from the original on 2018-03-13. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
  2. "BILANGAN PIHAK BERKUASA TEMPATAN MENGIKUT NEGERI SEHINGGA DISEMBER 2020". Local Government Department, Ministry of Housing and Local Government, Malaysia. Local Government Department. 23 December 2020.
  3. Norris, M. W., Local Government in Peninsular Malaysia, David Green Printers, Kettering, North ants, 1980.
  4. 4.0 4.1 4.2 4.3 "Seberang Prai achieves city status". The Star Online (in ஆங்கிலம்). 16 September 2019. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  5. "Criteria Status for Local Authority". Local Government Department. 2019-01-28. Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]