கோம்பாக் மாவட்டம்

ஆள்கூறுகள்: 3°16′27.3″N 101°34′14.6″E / 3.274250°N 101.570722°E / 3.274250; 101.570722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோம்பாக் மாவட்டம்
மாவட்டம்
Gombak District
Location of கோம்பாக் மாவட்டம்
கோம்பாக் மாவட்டம் is located in மலேசியா மேற்கு
கோம்பாக் மாவட்டம்
கோம்பாக் மாவட்டம்
கோம்பாக் மாவட்டம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°16′27.3″N 101°34′14.6″E / 3.274250°N 101.570722°E / 3.274250; 101.570722
தொகுதிபண்டார் பாரு செலாயாங்
உள்ளூராட்சிசெலாயாங் நகராட்சி மன்றம்
(மேற்கு)
அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம்
(கிழக்கு)
அரசு
 • நகராட்சி மன்றத் தலைவர்அமிருல் அசிசான் ரகிம்
 • மாவட்ட அதிகாரிவான் மொகமட் பாவான்தே
பரப்பளவு
 • மொத்தம்997.1 km2 (385.0 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்6,29,971
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
அஞ்சல் குறியீடுகள்48xxx, 52xxx-54xxx, 68xxx
மலேசியாவில் தொலைபேசி எண்கள்+6-03-41, +6-03-60, +6-03-61, +6-3-62
போக்குவரத்துப் பதிவெண்கள்B

கோம்பாக் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Gombak; ஆங்கிலம்: Gombak District; சீனம்: 鹅唛县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.

இந்த மாவட்டத்திற்கு தென்கிழக்கில் மலேசியத் தலைநகரம் கோலாலம்பூ அமைந்து உள்ளது. கிழக்கில் கெந்திங் மலை.

கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் (Klang Valley) அமைந்து உள்ளது. தவிர, கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் தான் அமைந்து உள்ளன.

கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்: பத்து ஆராங்; குவாங்; ரவாங்; குண்டாங்; கோம்பாக்; செலாயாங்; கெப்போங்; மற்றும் உலு கிள்ளான்.

1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது.

1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றம் செய்யப்பட்டது.

நிர்வாகப் பகுதிகள்[தொகு]

செலாயாங் நகராட்சி மன்றம் (மேற்கு); அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (கிழக்கு); ஆகிய நகராட்சி மன்றங்களால் கோம்பாக் மாவட்டம் நிர்வாகம் செய்யப் படுகிறது.

கோம்பாக் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]

  1. பத்து (Batu)
  2. ரவாங் (Rawang)
  3. செதபாக் (Setapak)
  4. உலு கிள்ளான் (Ulu Klang)

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

கோம்பாக் மாவட்டத்தின் நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகள்

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சபாக் பெர்ணம் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[2]

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[3]

மக்கள் தொகையியல்[தொகு]

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்[தொகு]

கோபாக் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

கோம்பாக் மாவட்டத்தில் 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,868 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.[4]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD7451 பத்துமலை SJK(T) Batu Caves பத்துமலை தமிழ்ப்பள்ளி 68100 பத்துமலை 1024 73
BBD7452 பத்து ஆராங் SJK(T) Batu Arang பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி 48100 பத்து ஆராங் 254 25
BBD7453 குவாங் SJK(T) Kuang குவாங் தமிழ்ப்பள்ளி 48050 ரவாங் 179 16
BBD7454 ஜாலான் கோலா சிலாங்கூர் SJK(T) Bukit Darah புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி 47000 சபாக் பெர்ணம் 159 20
BBD7455 ரவாங் SJK(T) Rawang ரவாங் தமிழ்ப்பள்ளி 48000 ரவாங் 1052 59
BBD7456 தாமான் மெலாவாத்தி SJK(T) Taman Melawati தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி 53100 கோலாலம்பூர் 200 17

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோம்பாக்_மாவட்டம்&oldid=3623663" இருந்து மீள்விக்கப்பட்டது