பண்டார் புத்திரி பூச்சோங்

ஆள்கூறுகள்: 3°1′1.2″N 101°37′26.4″E / 3.017000°N 101.624000°E / 3.017000; 101.624000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டார் புத்திரி
பூச்சோங்
புறநகரம்
Bandar Puteri Puchong
பண்டார் புத்திரி பூச்சோங்
பண்டார் புத்திரி பூச்சோங்
பண்டார் புத்திரி பூச்சோங் is located in மலேசியா
பண்டார் புத்திரி பூச்சோங்
பண்டார் புத்திரி
பூச்சோங்
தீபகற்ப மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°1′1.2″N 101°37′26.4″E / 3.017000°N 101.624000°E / 3.017000; 101.624000
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)

பண்டார் புத்திரி பூச்சோங் (மலாய்: Bandar Puteri Puchong; ஆங்கிலம்: Puchong Puteri Town; சீனம்: 蒲种公主城); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் பெருநகர்ப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு புறநகரம் ஆகும்.[1]

இந்தப் பண்டார் புத்திரி பூச்சோங் நகர மையம்; ஐ.ஓ.ஐ. குழுமத்தினரால் (IOI Group: IOI Corporation Berhad) உருவாக்கப்பட்டது. பூச்சோங் ஜெயா (Puchong Jaya) மற்றும் கின்ராரா (Bandar Kinrara) நகரங்களையும் இந்தக் குழுமம் தான் உருவாக்கியது.[2]

பொது[தொகு]

பண்டார் புத்திரி பூச்சோங் நகர மையத்திற்குள் பல முக்கிய வங்கிகள் உட்பட பல்வேறு வணிக மையங்கள் உள்ளன. இது ஒரு பரபரப்பான வணிக மையமாகத் திகழ்கிறது.

இந்த நகரத்தின் வடக்கில் சுபாங் ஜெயா மாநகரம், கின்ராரா நகரம்; தெற்கில் புத்ராஜெயா நகரம்; சிப்பாங் நகரம்; கிழக்கில் செர்டாங் நகரம்; மேற்கில் புத்ரா அயிட்ஸ் ஆகிய நகர்ப் புறங்கள் உள்ளன.

பூச்சோங் நகரத்தின் வளர்ச்சி[தொகு]

பூச்சோங் நகரம், அண்மைய காலத்தில் பண்டார் பூச்சோங் நகர மையம் (மலாய்: Pusat Bandar Puchong; ஆங்கிலம்: Puchong Town Centre) என்று பெயர் மாற்றம் அடைந்தது. இந்தப் பண்டார் பூச்சோங் நகர மையத்திற்கு ஒட்டிய நகரம் தான் பண்டார் புத்திரி பூச்சோங்.

பூச்சோங் நகரத்தின் வளர்ச்சியினாலும்; சுபாங் ஜெயா புறநகர் வளர்ச்சியினாலும்; அவற்றின் அருகாமையில் பல நகர்ப் புறங்கள் தோன்றின. அந்த வகையில், கடந்த 30 ஆண்டுகளில் பழைய பூச்சோங் நகரத்தைச் சுற்றிலும் பல புதிய நகர்ப் புறங்கள் தோன்றின. அதனால் பழைய பூச்சோங் நகரத்திற்கு பண்டார் பூச்சோங் என பெயரும் வைக்கப்பட்டது.

1970-ஆம் ஆண்டுகளில் பூச்சோங் நகரின் உள்கட்டமைப்பு பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கியது. இப்போது மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பல தொழில் துறை மண்டலங்கள், வணிக மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உருவாகி உள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் நகரமயமாக்கல் துரிதமான வளர்ச்சி கண்டு உள்ளது.[3]

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம்[தொகு]

பண்டார் புத்திரி பூச்சோங்; சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

பெட்டாலிங் மாவட்டத்தில் இருக்கும் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (Subang Jaya City Council) நிர்வாகத்தின் கீழ் உள்ள இதர இடங்கள்:

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]