சபாக் பெர்ணம் மாவட்டம்
சபாக் பெர்ணம் மாவட்டம் | |
---|---|
![]() | |
Sabak Bernam District | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°40′N 101°05′E / 3.667°N 101.083°E | |
தொகுதி | சுங்கை பெசார் |
உள்ளூராட்சி | சபாக் பெர்ணம் நகராட்சி மன்றம் |
அரசு | |
• நகராட்சி மன்றத் தலைவர் | நாசிர் மாமாட் |
• மாவட்ட அதிகாரி | பகாரின் மாட் அகிர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 997.1 km2 (385.0 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 1,03,153 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே+8) |
அஞ்சல் குறியீடுகள் | 45xxx |
தொலைபேசி எண்கள் | +6-03 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
சபாக் பெர்ணம் மாவட்டம் (மலாய்: Daerah Sabak Bernam; ஆங்கிலம்: Sabak Bernam District; சீனம்: 沙白安南县) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.
இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை உள்ளன.
சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: சபாக்; சுங்கை பெசார்; செகிஞ்சான். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் சபாக் பெர்ணம் நகரம் ஆகும்.
பொது[தொகு]
சபாக் பெர்ணம் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தின் நெல் விளையும் கேந்திரப் பகுதி. அந்த வகையில் சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கை விவசாயம். இந்த மாவட்டம் சிலாங்கூரின் அதி மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
நிர்வாகப் பகுதிகள்[தொகு]
சபாக் பெர்ணம் மாவட்டம், சபாக் பெர்ணம் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.
சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]
- பாகன் நக்கோத்தா ஒமார் (Bagan Nakhoda Omar)
- பாஞ்சாங் பெண்டேனா (Panchang Bendena)
- பாசிர் பாஞ்சாங் (Pasir Panjang)
- சபாக் (Sabak)
- சுங்கை பாஞ்சாங் (Sungai Panjang)
மலேசிய நாடாளுமன்றம்[தொகு]
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சபாக் பெர்ணம் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[2]
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P95 | சபாக் பெர்ணம் | முகமட் பைசா முகமட் பாக்கே | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்) |
P96 | சுங்கை பெசார் | முசுலிமின் யகியா | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்) |
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்[தொகு]
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[3]
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P92 | N1 | சுங்கை ஆயர் தாவார் | ரிசாம் இஸ்மாயில் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P92 | N2 | சபாக் | முஸ்தாயின் ஒஸ்மான் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
P93 | N3 | சுங்கை பாஞ்சாங் | இம்ரான் தாம்ரின் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P93 | N4 | செகிஞ்சான் | நிங் சுயி லிம் | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்[தொகு]
- கோம்பாக் மாவட்டம்
- உலு லங்காட் மாவட்டம்
- உலு சிலாங்கூர் மாவட்டம்
- கிள்ளான் மாவட்டம்
- கோலா லங்காட் மாவட்டம்
- கோலா சிலாங்கூர் மாவட்டம்
- பெட்டாலிங் மாவட்டம்
- சபாக் பெர்ணம் மாவட்டம்
- சிப்பாங் மாவட்டம்
சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]
சபாக் பெர்ணம் மாவட்டத்தில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 157 மாணவர்கள் பயில்கிறார்கள். 22 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[4][5]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD6039 | சுங்கை பெர்ணம் தோட்டம் | SJK(T) Ladang Sungai Bernam[6] | சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45200 | சபாக் பெர்ணம் | 34 | 8 |
BBD6040 | சபாக் பெர்ணம் | SJK(T) Ladang Sabak Bernam[7] | சபாக் பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45200 | சபாக் பெர்ணம் | 123 | 14 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF)". www.selangor.gov.my. 6 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "SABAK BERNAM - SURUHANJAYA PILIHAN RAYA MALAYSIA (SPR) - SEMAKAN CALON PILIHAN RAYA UMUM KE 14". keputusan.spr.gov.my. 13 செப்டம்பர் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் - 2018". 2018-05-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. 2021-12-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் - Schools". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. 7 டிசம்பர் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Batu 38, Pusat Kegiatan Guru (13 January 2016). "சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Pendidikan Bestari : PKG Batu 38: SJKT LADANG SUNGAI BERNAM". Pendidikan Bestari. 8 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சபாக் பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang Sabak Bernam | The Community Chest". commchest.org.my. 8 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]