உள்ளடக்கத்துக்குச் செல்

பெஸ்தாரி ஜெயா

ஆள்கூறுகள்: 3°22′38″N 101°24′50″E / 3.37722°N 101.41389°E / 3.37722; 101.41389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஸ்தாரி ஜெயா
(பத்தாங் பெர்ஜுந்தை)
Bestari Jaya
Batang Berjuntai
சிலாங்கூர்
Map
பெஸ்தாரி ஜெயா is located in மலேசியா
பெஸ்தாரி ஜெயா

      பெஸ்தாரி ஜெயா       மலேசியா
ஆள்கூறுகள்: 3°22′38″N 101°24′50″E / 3.37722°N 101.41389°E / 3.37722; 101.41389
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோலா சிலாங்கூர் மாவட்டம்
நிர்வாக மையம்கோலா சிலாங்கூர்
உருவாக்கம்1880-களில்
அரசு
 • ஊராட்சிகோலா சிலாங்கூர் ஊராட்சி
(Kuala Selangor District Council)
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு
45600
தொலைபேசி எண்கள்+603-3271
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்www.mdks.gov.my

பெஸ்தாரி ஜெயா (முன்னர்: பத்தாங் பெர்ஜுந்தை) (மலாய்: Bandar Bestari Jaya; ஆங்கிலம்: Bestari Jaya முன்னர்: Batang Berjuntai); சீனம்: 八丁燕带); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் (Kuala Selangor District) உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 40 கி.மீ. வட மேற்கே உள்ளது.

1900-ஆம் ஆண்டுகளில், மலேசியாவில் தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்த இடங்களில் பத்தாங் பெர்ஜுந்தை நகரமும் ஒன்றாகும். மலேசிய இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த கல்விமான்கள்; எழுத்தாளர்கள்; ஆசிரியர்கள் பலரை உருவாக்கிய பெருமை இந்த நகரத்திற்கு உண்டு.

1900-ஆம் ஆண்டுகளில், பிரித்தானியர்கள் இங்கு பல ரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். நைகல் கார்டனர் தோட்டம் (Nigel Gardner Estate); பத்தாங் பெர்ஜுந்தை தோட்டம் (Batang Berjuntai Estate); தென்னமரம் தோட்டம் (Tennamaram Estate); செயிண்ட் அண்டிரூ தோட்டம் (St. Andrew Estate) போன்ற தோட்டங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.[1]

அந்த வகையில் இங்கு சில தமிழ்ப்பள்ளிகளும் தோற்றுவிக்கப்பட்டன. அதன் பின்னர், 1970-களில், தனியார் நிறுவனங்கள் செம்பனை தோட்டங்களைத் தோற்றுவித்தன.

வரலாறு[தொகு]

ஏறக்குறைய 150 ஆண்டுகளாக இந்த நகரத்தை பத்தாங் பெர்ஜுந்தை நகரம் என்று மலேசிய மக்கள் அழைத்து வந்தார்கள். எனினும் 2007-ஆம் ஆண்டில் அந்தப் பெயர் குறித்து ஒரு சர்ச்சை ஏற்பட்டது. மலாய் மொழியில் அந்தப் பெயர்ச்சொல் கிளைவிட்ட தண்டு என்பதைக் குறிப்பதாகவும் அந்தச் சொல் 'வேறு' பொருளைக் குறிப்பிடுகிறது என்றும் வாதிடப்பட்டது.

பத்தாங் (மலாய்: Batang) என்றால் தண்டு; பெர்ஜுந்தை (மலாய்: Berjuntai) என்றால் கிளைவிட்ட என்று பொருள் படும். ஆகவே இந்தச் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க பெஸ்தாரி ஜெயா என்று மாற்றம் செய்யப்பட்டது.

இருப்பினும் பத்தாங் பெர்ஜுந்தை எனும் சொல் இன்றும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பெயர் மாற்றத்தை அறியாத வெளியூர் மக்கள் புதிய பெயரால் அடிக்கடி குழப்பம் அடைகின்றனர்.

அத்தாப்பு வீடுகள்[தொகு]

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் சின்னம்

1937-ஆம் ஆண்டில், பத்தாங் பெர்ஜுந்தை ஒரு காட்டுப் பகுதியாக இருந்தது. மேலும் அந்த நகரில் "அத்தாப்பு" (Nipa Palm) வீடுகள் மற்றும் ஒரு சில மளிகைக் கடைகள் மட்டுமே இருந்தன. மேலும் அத்தாப்பு வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரப்பர் தோட்டங்கள் இருந்தன. எனவே ரப்பர் மரம் சீவும் தொழில் முக்கியத் தொழிலாளக இருந்தது.

இன்றும், பத்தாங் பெர்ஜுந்தை நகரின் பிரதான தெருவில் ஒரு சாலையும், இரண்டு வரிசை கடைகளும் எதிர் எதிரே உள்ளன. தெருவில் ஒரு டத்தோ கோயில் மற்றும் ஒரு காவல் நிலையம், ஒரு நகராட்சி அலுவலகம், ஒரு மாவட்டச் சேவை மையம், மற்றும் யுசி சீன தொடக்கப் பள்ளியும் மற்றும் ஒரு தமிழ் தொடக்கப்பள்ளியும் உள்ளன.[2]

உள்ளூர் தகவல்களின்படி, 1937-ஆம் ஆண்டில், பத்தாங் பெர்ஜுந்தை நகரத்தின் மக்கள் தொகை 3,000. அவர்களில் பெரும்பாலோர் சீனர்கள். இங்கு ஓர் ஈயச் சுரங்கம் இருந்தது. அந்த ஈயச் சுரங்கம் இருந்த இடம் இப்போது சிலாங்கூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக (Selangor University of Technology) (UNISEL) மாறிவிட்டது.

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி[தொகு]

இந்தப் பள்ளியின் பழைய பெயர் பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி. 2007-ஆம் ஆண்டில் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பள்ளியில் 495 மாணவர்கள் பயில்கிறார்கள்; 39 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[3]

இந்தப் பள்ளி 1945-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஐயம் பிள்ளை (Iyam Pillai) என்பவர் தலைமையாசிரியராகப் பொறுப்பு வகித்தார். 1987-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி தன் வெள்ளிவிழாவைக் கொண்டாடியது.[4]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD3048 பெஸ்தாரி ஜெயா
(பத்தாங் பெர்ஜுந்தை)
SJK(T) Bestari Jaya[5] பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 495 39

மேற்கோள்கள்[தொகு]

  1. "St. Andrew Estate: The estate was 3 miles of gravel track from the main road and 5 miles from town. When it rained the road became soggy and quite a challenge to the driver's competency in manoeuvring the vehicle" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 May 2023.
  2. "Simple town. In recent years, it is popular to raise swallows. Bading swallow belt. bring swallows". Sin Chew Daily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 May 2023.
  3. Maruthamuthu, Vani. "பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி - PUSAT SUMBER SJKT BESTARI JAYA" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  4. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  5. Razak, Najib (28 April 2013). "பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி - Majlis Perasmian SJKT Bestari Jaya". பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஸ்தாரி_ஜெயா&oldid=3998443" இலிருந்து மீள்விக்கப்பட்டது