சபாக் பெர்ணம்

ஆள்கூறுகள்: 3°46′12″N 100°58′48″E / 3.77000°N 100.98000°E / 3.77000; 100.98000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபாக் பெர்ணம்
Sabak Bernam
சிலாங்கூர்
சுங்கை பெர்ணம் தோட்டத்தின் படகுத்துறை
சுங்கை பெர்ணம் தோட்டத்தின் படகுத்துறை
சபாக் பெர்ணம் is located in மலேசியா
சபாக் பெர்ணம்

      சபாக் பெர்ணம்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°46′12″N 100°58′48″E / 3.77000°N 100.98000°E / 3.77000; 100.98000
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்சபாக் பெர்ணம் மாவட்டம்
நிர்வாக மையம்சுங்கை பெசார்
அரசு
 • ஊராட்சிசபாக் பெர்ணம் ஊராட்சி
(Sabak Bernam District Council)
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு45400
தொலைபேசி எண்கள்++60-3-3224
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்www.mdsb.gov.my

சபாக் பெர்ணம் (மலாய்: Sabak, Selangor; ஆங்கிலம்: Sabak, Selangor; சீனம்: 沙白镇) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் (Sabak Bernam District) உள்ள ஒரு சிறிய நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. வட மேற்கே உள்ளது.[1]

இந்த நகரம் ஒரு கடலோர நகரமாகும். மலாக்கா நீரிணையை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த நகரம், பெர்ணம் ஆற்றின் (Bernam River) தெற்கே, பேராக் சிலாங்கூர் மாநிலங்களின் எல்லையில் உள்ளது.

பொது[தொகு]

Map
சபாக் பெர்ணம்

செம்பனை தோட்டங்கள் தான் இந்த நகரத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளில் முதலிடம் வகிக்கிக்ன்றன. தனிநபர்கள் சிறிய செம்பனைத் தோட்டங்களை வைத்து இருக்கிறார்கள்.

சைம் டார்பி (Sime Darby) போன்ற தனியார் நிறுவனங்களும் பெரிய அளவில் செம்பனைத் தோட்டங்களைக் கொண்டு இருக்கின்றன. இந்த நகரம் புதிய வடிகால் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பாதையில் (Drainage Systems Infrastructure Development) உள்ளது.

நெல் விவசாயம்[தொகு]

சுங்கை பெசாரின் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள்; சிறு நடுத்தர தொழில்துறையினர்; மற்றும் மீனவர்கள். தென்னை உற்பத்தி, செம்பனை உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர். நெல் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது.[2]

சபாக் பெர்ணம் சிலாங்கூரில் ஒரு மிகப்பெரிய நெல் விளையும் பகுதியாகும். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் சிறு விவசாயிகளின் கொக்கோ பண்ணைகள் இருந்தன.[3]

அமைவு[தொகு]

சபாக் பெர்ணம் நகரம், சிலாங்கூரில் அதி வடக்கு திசையில் உள்ள நகரமாகும். மேலும் இது சா ஆலாம் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மாநகரங்களில் இருந்தும் மிகத் தொலைவில் உள்ள தொகுதியாகும். கோலாலம்பூர் நகரத்தில் இருந்து 5 மலேசிய நெடுஞ்சாலை 5 (Malaysia Federal Route 5) மூலமாக இந்த நகரத்தைச் சென்று அடைய 2 மணி நேரம் பிடிக்கும்.

பொது போக்குவரத்து[தொகு]

சபாக் பெர்ணம் நகரத்திற்கு எவ்விதமான தொடருந்து சேவைகளும் மெட்ரோ சேவைகளும் இல்லை. இருப்பினும் 'சபாக் பெர்ணம் - கோலாலம்பூர் விரைவு பேருந்து' (Sabak Bernam-Kuala Lumpur Ekspres) எனும் பேருந்து சேவைகள் ஒவ்வொரு நாளும் உள்ளன.

புடு சென்ட்ரல் (Pudu Sentral) பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஏழு பேருந்து பயணங்கள் இயக்கப்படுகின்றன.  SP8  பிளாசா ராக்யாட் தொடருந்து நிலையம் (Plaza Rakyat LRT Station); மற்றும்  SBK17  மெர்டேகா தொடருந்து நிலையம் (Merdeka MRT Station) ஆகிய தொடருந்து நிலையங்கள் மூலமாக புடு சென்ட்ரல் பேருந்து நிலையத்தை அடைந்த பின்னர்; அங்கிருந்து சபாக் பெர்ணம், செகிஞ்சான், சுங்கை பெசார் மற்றும் தெலுக் இந்தான் நகரங்களுக்குச் செல்லலாம்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாக்_பெர்ணம்&oldid=3705632" இருந்து மீள்விக்கப்பட்டது