உள்ளடக்கத்துக்குச் செல்

கோலா குபு பாரு

ஆள்கூறுகள்: 3°34′N 101°39′E / 3.567°N 101.650°E / 3.567; 101.650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா குபு பாரு
Kuala Kubu Bharu
Map
கோலா குபு பாரு is located in மலேசியா
கோலா குபு பாரு
      கோலா குபு பாரு       மலேசியா
ஆள்கூறுகள்: 3°34′N 101°39′E / 3.567°N 101.650°E / 3.567; 101.650
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு சிலாங்கூர் மாவட்டம்
முக்கிம்அம்பாங் பெச்சா
உருவாக்கம்1780
நிறுவப்பட்டது1925
அரசு
 • நிர்வாகம்உலு சிலாங்கூர் நகராட்சி
Hulu Selangor Municipal Council (MPHS)
 • சுல்தான்சுல்தான் இப்ராகிம் சா
பரப்பளவு
 • மொத்தம்1,756.301 km2 (678.112 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,94,387
 • அடர்த்தி111/km2 (290/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
44xxx
மலேசியத் தொலைபேசி எண்+6-03-60
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்B, W
இணையதளம்[1]

கோலா குபு பாரு (மலாய்: Kuala Kubu Bharu; ஆங்கிலம்: Kuala Kubu Bharu; சீனம்: 新古毛) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். கோலாலம்பூர் மாநகருக்கு வடக்கே 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த நகருக்கு கே.கே.பி. (KKB) எனும் அடைமொழி சுருக்கப் பெயரும் உள்ளது. சிலாங்கூரில் தூங்கும் நகரம் என்று சொல்லப்படுவதும் உண்டு.[2]

1925-ஆம் ஆண்டில் மலாயா பிரித்தானியா கூட்டாட்சி அரசாங்கத்தால் (British Federated Malay States) திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முதல் மலேசிய நகரம் எனும் பெருமை இந்த நகரத்தைச் சார்கிறது. நகரத் திட்டமிடல் வல்லுநர் சார்லஸ் குரோம்ப்டன் ரீட் (Charles Crompton Reade) என்பவரால் திட்டமிடப்பட்டு இந்தக் கோலா குபு பாரு நகரம் உருவாக்கப்பட்டது.[3]

பொது

[தொகு]

கோலா குபு பாரு நகரத்தில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கட்டிடங்கள் நிறைய உள்ளன. பெரும்பாலும் உள்ளூர் மக்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள். மேலும் அவை அந்தக் காலக் கட்டத்தின் கலாசாரம் மற்றும் கட்டிடக்கலை வடிவ அமைப்புகளைக் காட்சிப் படுத்துகின்றன.[2]

முன்பு சிலாங்கூர் ஆற்றின் இரண்டு துணை ஆறுகளுக்கு இடையில் அமைந்து இருந்தது. 18-ஆம் நூற்றாண்டில் ஒரு சுரங்க நகரமாகத் தன் வரலாற்றைத் தொடங்கியது. அதன் செழிப்பான காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கியது.[4]

வரலாறு

[தொகு]

இந்த நகரின் வழியாகச் சிலாங்கூர் ஆறு செல்கிறது. முன்பு அதில் ஓர் அணை கட்டி இருந்தார்கள். 1883-ஆம் ஆண்டில், அந்த அணை உடைந்து பெரும் வெள்ளத்தை உண்டாக்கி, அந்த நகரத்தையே மூழ்கடித்தது. கோலா குபு பாருவின் அப்போதைய மாவட்ட அதிகாரி, சர் சிசில் ரேங்கிங் (Sir Cecil Ranking) என்பவரும் கொல்லப்பட்டார்.[4]

1926-இல் இரண்டாவது முறையாக உடைந்த போது முழு நகரத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது. குவான் யின் கு சி சீனர் கோயில் (Guan Yin Gu Si Temple) மற்றும் அல் இடாயா பள்ளிவாசல் (Al-Hidayah Mosque) மட்டுமே வெள்ளத்தில் இருந்து தப்பித்தன.

இரண்டாவது முறை வெள்ளம்

[தொகு]

வெள்ளத்தைத் தொடர்ந்து, நகரத்தை உயரமான இடத்திற்கு மாற்றி மீண்டும் கட்டத் தொடங்கினார்கள். முதலில் இந்த நகரம் கோலா குபு (Kuala Kubu) என்று அழைக்கப்பட்டது. வெள்ளம் ஏற்பட்ட பிறகு, இந்த நகரத்திற்குக் கோலா குபு பாரு (Kuala Kubu Bharu) அல்லது புதிய கோலா குபு (New Kuala Kubu) என மறுபெயரிடப் பட்டது.

மேற்கோள்

[தொகு]
  1. "Portal Rasmi Majlis Perbandaran Hulu Selangor | Terus Maju". mphs.gov.my. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
  2. 2.0 2.1 "Kuala Kubu Bharu (KKB) is fondly known by travellers as a sleepy town in Selangor. It is located approximately 70 km from the capital city of Kuala Lumpur through highway 1 and is the main gateway for people heading to one of Malaysia's favourite hill stations, Fraser 's Hill". www.ipl.org. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
  3. "Kuala Kubu Bharu A Garden City Tour (Asia's First Garden Township) - Portal Rasmi Majlis Perbandaran Hulu Selangor (MPHS)". mdhs.gov.my/. Archived from the original on 6 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 31 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "The storm ripped open the dam in the area, causing the raging waters to wipe out everything in its path including Kuala Kubu's District Officer of the time, Sir Cecil Ranking". பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Adopted from Tragedi Kuala Kubu 1883 - Buku Rekod Malaysia Edisi Kedua, Ghulam Jie M Khan
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_குபு_பாரு&oldid=3998449" இலிருந்து மீள்விக்கப்பட்டது