டாமன்சாரா உத்தாமா

ஆள்கூறுகள்: 3°8′5.96″N 101°37′28.86″E / 3.1349889°N 101.6246833°E / 3.1349889; 101.6246833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாமன்சாரா உத்தாமா
Damansara Utama
சிலாங்கூர்
டாமன்சாரா உத்தாமா
டாமன்சாரா உத்தாமா
Map
டாமன்சாரா உத்தாமா is located in மலேசியா
டாமன்சாரா உத்தாமா
      டாமன்சாரா உத்தாமா
ஆள்கூறுகள்: 3°8′5.96″N 101°37′28.86″E / 3.1349889°N 101.6246833°E / 3.1349889; 101.6246833
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
மாநகராட்சி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
மக்கள்தொகை (2018)
 • மொத்தம்142,000
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு47400

டாமன்சாரா உத்தாமா (மலாய்: Damansara Utama; ஆங்கிலம்: Damansara Utama); சீனம்: 白沙罗万达) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதி ஆகும்.

இந்தப் புறநகர்ப் பகுதியை டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை; கிழக்கில் செக்சன் SS20 (Section SS20) எனவும்; மேற்கில் செக்சன் SS21 (Section SS21) எனவும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது. மற்றும் இந்த டாமன்சாரா உத்தாமா புறநகர்ப் பகுதி; பெட்டாலிங் மாவட்டத்தின் சுங்கை பூலோ முக்கிம் (Sungai Buloh Mukim) துணைப் பிரிவுக்குள் ஒரு பகுதியாகவும் உள்ளது.[1]

பொது[தொகு]

பெட்டாலிங் ஜெயா மாநகரம்; எண்கள் இடப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவும் செக்சன் (Section) என்று அழைக்கப்படுகிறது.[2]

  • S - கிழக்கு பெட்டாலிங் ஜெயா (Section)
  • SS - மத்திய மற்றும் மேற்கு பெட்டாலிங் ஜெயா (Sungai Way - Subang)
  • PJU - வடக்கு பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya Utara)
  • PJS - தெற்கு பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya Selatan)

வரலாறு[தொகு]

1970-களின் இடைக் காலப் பகுதியில் சி ஓய் சான் ஓல்டிங்ஸ் (See Hoy Chan Holdings Sdn. Bhd) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான பாரமவுண்ட் கார்டன் (Paramount Garden) நிறுவனத்தின் கீழ் டாமன்சாரா உத்தாமா கட்டுமானம் தொடங்கியது.

முதலில் பெட்டாலிங் ஜெயாவின் SS22 பிரிவை மட்டுமே உள்ளடக்கி இருந்தது. பின்னர் SS22A பிரிவு டாமன்சாரா உத்தாமா வீடமைப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இருபிரிவு வீடுகளும்; வளமனைகளும் கட்டப்பட்டன.[3]

சாலைகள் அமைப்பின் தாக்கங்கள்[தொகு]

டாமன்சாரா உத்தாமா சற்று அமைதியான; ஒதுக்குப்புறமான இடமாகக் கருதப் படுகிறது. இருப்பினும், அண்மையில் இந்த நகர்ப்புறத்திற்கு அருகில்;

ஆகிய மூன்று சாலை அமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன. அதனால் இங்குள்ள மக்களும் அதன் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

டாமன்சாரா உத்தாமாவில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் சீனர்; மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் நடுத்தர வருமானம் அல்லது மேல் வருமானம் கொண்டவர்கள். இவர்களில் பலர் இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இடத்தின் அமைப்பு; மற்றும் நெடுஞ்சாலைகளுடனான நல்ல இணைப்பு போன்ற காரணங்களினால் இங்குள்ள வீடுகளின் விலையும் எப்போதும் அதிகரித்தவாறு உள்ளது.

போக்குவரத்து[தொகு]

டாமன்சாரா உத்தாமா நகர்ப் பகுதியை அணுகுவதற்கு மூன்று நெடுஞ்சாலைகள் உள்ளன. அவையாவன:

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாமன்சாரா_உத்தாமா&oldid=3741364" இருந்து மீள்விக்கப்பட்டது