கோம்பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோம்பாக் (Gombak) மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும். கோலாலம்பூர் மாநகரின் வடக்கே வங்சா மஜூவின் எல்லையில் இது அமைந்துள்ளது.[1] இந்த நகரைச் சுற்றியுள்ள பிற நகரங்கள் உலு கெலாங், அம்பாங், பத்து மலை. சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலைப் பெற்று புலம்பெயர்ந்த மினாங்கபாவு மக்கள் 1800-களில் இந்த நகரை நிறுவினர். கோம்பாக்கின் பெரும்பகுதி சிலாங்கூரிலும் ஒரு சிறு பகுதி கோலாலம்பூர் கூட்டாட்சி நிலப்பகுதியிலும் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "Gombak, visitselangor". பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோம்பாக்&oldid=3502243" இலிருந்து மீள்விக்கப்பட்டது