சிலாங்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலாங்கூர்
Selangor

سلاڠور دار الإحس
மாநிலம்
சிலாங்கூர் தாருல் ஏசான்
மனத்தூய்மையின் வாழ்விடம்
Selangor Darul Ehsan
சிலாங்கூர் Selangor-இன் கொடி
கொடி
சிலாங்கூர் Selangor-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: உண்மையும் உறுதிப்பாடும்
பண்: Duli Yang Maha Mulia
மாட்சிமை தங்கியவர்
சிலாங்கூரின் அமைவிடம்
சிலாங்கூரின் அமைவிடம்
தலைநகர்சா ஆலாம்
அரசு
 • சுல்தான்சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா
 • மந்திரி பெசார்டத்தோ ஸ்ரீ அமிருதீன் ஷாரி
பாக்காத்தான் ஹரப்பான்
பரப்பளவு
 • மொத்தம்8,104 km2 (3,129 sq mi)
மக்கள்தொகை (2010 மதிப்பீடு)
 • மொத்தம்54,11,324
 • அடர்த்தி66.77/km2 (172.9/sq mi)
மனித வளர்ச்சிக் குறியீடு
 • HDI (2010)0.810 (மிகக் கூடுதல்)
மலேசிய அஞ்சல் குறியீடு40xxx to 48xxx
60xxx to 68xxx
மலேசியத் தொலைபேசி03
மலேசிய வாகனப் பதிவெண்கள்B
மலாயா கூட்டரசு1895
ஜப்பானியர் ஆட்சி1942
மலாயா கூட்டமைப்பு1948
இணையதளம்http://www.selangor.gov.my

சிலாங்கூர், (மலாய்:Selangor), மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இதற்கு 'டாருல் இசான' அல்லது 'மனத்தூய்மையின் வாழ்விடம்' என்னும் அரபு மொழியில் நன்மதிப்பு அடைமொழியும் உண்டு.

இந்த மாநிலத்தின் வடக்கே பேராக் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்திற்கு தெற்கே நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்கள் உள்ளன. கிழக்கே பகாங் மாநிலம் உள்ளது.

ஆகத் தெற்கே ஜொகூர் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் தான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், மலேசியக் கூட்டரசு நிர்வாக மையமான புத்ராஜெயா போன்றவை இருக்கின்றன.(சிலாங்கூர் மாநில வரைபடத்தைப் பார்க்கவும்.).

சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக சா ஆலாம் விளங்குகின்றது. மாநிலத்தின் அரச நகரம் கிள்ளான்.[1] மற்றொரு பெரிய புறநகர்ப் பகுதியாகப் பெட்டாலிங் ஜெயா இருக்கின்றது. பெட்டாலிங் ஜெயாவிற்கு 2006 ஜூன் 20-இல் மாநகர் தகுதி வழங்கப்பட்டது.

மலேசியாவிலேயே மிகவும் பணக்கார மாநிலமாகவும், மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும் சிலாங்கூர் மாநிலம் புகழ் பெற்று விளங்குகின்றது.[2]

கிள்ளான் பள்ளத்தாக்கு நவீன மயமாகி வருவதால், சிலாங்கூர் மாநிலம் மிகத் துரிதமான வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் நெடுஞ்சாலைகளும், போக்குவரத்து வசதிகளும் மிகச் சிறப்பான உள்கட்டமைப்புகள் கொண்டவை. மலேசியாவிலேயே அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலமாக விளங்கும் சிலாங்கூரில், மக்களின் வாழ்க்கைத் தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.

சொல்லியல்[தொகு]

’கோத்தா டாருல் ஏசான்’ வளை விதானவழி.
ஷா ஆலாம் அரச பள்ளிவாசல்.
பத்துமலை முருகன் திருக்கோயில்.
சிலாங்கூர் சுல்தானின் அரண்மனை.
போர்ட் கிள்ளானில் இருக்கும் துறைமுகம்.
சிப்பாங் பார்முலா1 கார் பந்தயத் திடல்.
மலேசியாவிலேயே மிகப்பெரிய பேரங்காடி.

சிலாங்கூர் எனும் சொல்லின் தோற்றத்தைப் பற்றிய விவரங்கள் வரலாற்றில் அதிகமாகத் தெரியவில்லை. ஆனால், ‘சிலாங்காவ்’ எனும் சொல்லிலிருந்து சிலாங்கூர் எனும் சொல் வந்திருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

‘சிலாங்காவ்’ (மலாய்: Selangau), என்பது ஒரு வகையான பூச்சியைக் குறிப்பதாகும். சிலாங்கூர் ஆற்றின் வட மேற்குப் பகுதிகளில் இந்தப் பூச்சியினம் அதிகமாகக் காணப்படுகின்றது. ‘சிலாங்’ (மலாய்: Selang), ‘ஊர்’ எனும் சொற்களில் இருந்து சிலாங்கூர் எனும் சொல் வந்து இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.

சிலாங்’ என்பது மலாய்ச் சொல். ‘ஊர்’ என்பது தமிழ்ச் சொல். ‘சிலாங்’ என்றால் நீரிணை. ‘ஊர்’ என்றால் ஒரு நிலப்பகுதி. இதைத் தவிர, இன்னும் ஒரு நியாயமான சொல்லியல் நியதியும் இருக்கின்றது.

மூங்கில் காடுகள்[தொகு]

’சிலா’ ‘ங்கோர்’ (மலாய்: Sela), (மலாய்: ngor) எனும் இரு மலாய்ச் சொற்களில் இருந்தும் சிலாங்கூர் எனும் சொல் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகின்றது. ‘சிலா’ எனும் சொல் ஒரு நில இடுக்கைக் குறிப்பதாகும். ‘ங்கோர்’ எனும் சொல் மூங்கிலைக் குறிப்பதாகும்.

முன்பு காலத்தில் சிலாங்கூர் ஆற்றின் கரையோரங்களில் நிறைய மூங்கில் காடுகள் இருந்தன. அதனால், அப்படியும் பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்கின்றார்கள். 1301 லிருந்து 1400 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்த ஸ்ரீ பாதுக்கா மகாராஜா என்பவர் சிலாங்கூரை ஆட்சி செய்து வந்தார். அவருடைய ஆட்சியில் சிலாங்கூர் சமர்லிங்கா ([[மலாய் மொழி: Samarlinga) என்று அழைக்கப்பட்டது.

சீனத் தளபதி செங் ஹோ 1400-களில் சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவர் தன்னுடைய பயணக் குறிப்புகளில் கிள்ளான் ஆறு, சிலாங்கூர் டாராட் (Selangor Darat) எனும் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

வரலாறு[தொகு]

15ஆம் நூற்றாண்டில் சிலாங்கூர் மாநிலத்தை மலாக்கா சுல்தானகம் ஆட்சி செய்து வந்தது. 1511-இல் போர்த்துகீசியர்களிடம் மலாக்கா வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர், மலாக்காவையும் அதைச் சார்ந்த நிலப்பகுதிகளையும் ஆட்சி செய்வதற்கு ஜொகூர் அரசு, அச்சே அரசு, சயாமிய அரசு, போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், போன்றவர்கள் போட்டி போட்டனர்.

பூகிஸ்காரர்கள் வருகை[தொகு]

இந்தக் கட்டத்தில் சிலாங்கூரின் பல பகுதிகளில் ஈயம் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.[4] இதுவும் சிலாங்கூரைக் கைப்பற்றுவதற்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. 1641-இல் போர்த்துகீசியர்களிடமிருந்து மலாக்காவை டச்சுக்காரர்கள் கைப்பற்றினர். அவர்கள் சுலாவாசித் தீவிலிருந்து பூகிஸ் மக்களைச் சிலாங்கூருக்கு கொண்டு வந்தனர்.

இந்தப் பூகிஸ்காரர்கள் தான் இப்போதைய சிலாங்கூர் சுல்தானகத்தை அமைத்தவர்கள் ஆகும்.[5] அப்போது சிலாங்கூரின் முதல் தலைநகரமாகக் கோலா சிலாங்கூர் இருந்தது. 1766-இல் கோலா சிலாங்கூர் அமைக்கப்பட்டது.[6]

அதற்கு முன்னர் சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் மினாங்காபாவ் இனத்தவர் இருந்தனர். பூகிஸ்காரர்களின் வருகையால் மினாங்கபாவ் இனத்தவர் நெகிரி செம்பிலான் மாநிலப் பகுதிகளுக்குப் புறம் தள்ளப்பட்டனர். மினாங்கபாவ் இனத்தவர், இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிலிருந்து குடியேறியவர்கள். அவர்கள் சிலாங்கூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்திலிருந்து வந்தனர்.

ரகசிய கும்பல்கள்[தொகு]

19ஆம் நூற்றாண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் பெரிய அளவிலான பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. ரப்பர் உற்பத்தியில் உயர்வு, பெருமளவில் ஈயக் கனிவள இருப்பு போன்றவை சிலாங்கூர் மாநிலத்தின் அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தின. ஈய இருப்புகள் சீனர்களை அதிகமாகக் கவர்ந்தன. ஆயிரக்கணக்கான சீனர்கள் சீனாவிலிருந்து படை எடுத்தனர்.

இவர்கள் சிலாங்கூரில் தங்களுக்குள் ரகசிய கும்பல்களை உருவாக்கிக் கொண்டனர். சிலாங்கூரின் நிலப்பகுதிகளின் பிரபுகளாக இருந்தவர்களுடன் இணைந்து கொண்ட ரகசிய கும்பல்கள் ஈயச் சுரங்கங்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

சமூக, பொருளாதாரப் பேரழிவுகள்[தொகு]

இந்த ரகசிய கும்பல்கள் வன்முறைகளில் ஈடுபட்டு சிலாங்கூரில் சமூக, பொருளாதாரப் பேரழிவுகளை ஏற்படுத்தின. இது பிரித்தானியர்களின் அடக்கி ஆளும் தன்மைக்கு வழிகோலியது. பிரித்தானியர்கள் அந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதன் விளைவாக 1874-இல் சிலாங்கூர் சுல்தான் ஒரு பிரித்தானிய ஆளுநரை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது.

பிரித்தானியர்கள் உருவாக்கிய ஒரு நிலைத்தன்மையினால் சிலாங்கூர் மீண்டும் வளம் பெற்றது. 1896-இல் பிராங்க் சுவெட்டன்ஹாம் என்பவர் சிலாங்கூரின் பிரிட்டிஷ் ஆளுநராக இருந்தார். அவர் சிலாங்கூரை மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பில் (ஆங்கில மொழி: Federated Malay States) இணைத்தார். அந்த அமைப்பில் ஏற்கனவே நெகிரி செம்பிலான், பேராக், பகாங் மாநிலங்கள் உறுப்பியம் பெற்று இருந்தன. அந்த அமைப்பின் தலைநகரம் கோலாலம்பூரில் இருந்தது.

கோலாலம்பூரை சிலாங்கூர் தாரை வார்த்தது[தொகு]

மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு 1948 -இல் மலாயா கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது. 1957 -இல் சுதந்திரம் பெற்று 1963 -இல் மலேசியா எனும் புதுப்பெயர் பெற்றது. கோலாலம்பூர் மாநகரம் மலேசியாவிற்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் ஒரே தலைநகரமாக விளங்கியது.

1974 -இல் மலேசியக் கூட்டரசு அரசாங்கத்திற்கு சிலாங்கூர் மாநிலம் கோலாலம்பூரை ஒரு கூட்டரசு பிரதேசமாகத் தாரை வார்த்துக் கொடுத்தது. தன்னுடைய அன்புக்கு பாத்திரமான கோலாலம்பூரை கையெழுத்திட்டு எழுதிக் கொடுக்கும் போது, அந்தச் சமயத்தில் சிலாங்கூர் சுல்தானாக இருந்த சுல்தான் சலாவுடின் கண்ணீர் விட்டு அழுததாகவும் சொல்லப்படுகிறது.

சிலாங்கூர் மண்ணில் புத்ராஜெயா[தொகு]

அதன் நினைவாக சிலாங்கூர்-கூட்டரசு பிரதேச எல்லையில் ஓர் அழகிய வளை விதானவழி (Archway) உருவாக்கப்பட்டது. அதற்கு கோத்தா டாருல் ஏசான் (Kota Darul Ehsan) என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்த வளை விதானவழி பெட்டாலிங் ஜெயா மாநகருக்கும் பங்சார் நகரப் பகுதிக்கும் இடையில் கூட்டரசு நெடுஞ்சாலையில் மிகக் கம்பீரமாக அமைந்து உள்ளது.

அதன் பின்னர், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரம் சா ஆலாமிற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2001-ஆம் ஆண்டில் புத்ரா ஜெயா எனும் மற்றொரு கூட்டரசு பிரதேசத்தை உருவாக்கத் தீர்மானம் செய்யப்பட்டது. மறுபடியும் அனுமதி கோரி சுல்தான் சலாவுடின் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆக, சிலாங்கூர் மாநிலத்தில் இரு பெரிய நிலப் பகுதிகள் கூட்டரசு அரசாங்கத்திற்கு எழுதிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

வேலை வாய்ப்புகள்[தொகு]

மலேசியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் சிலாங்கூர். கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் பல இலட்சம் பேர் வாழ்கிறார்கள். சிலாங்கூர் மாநிலம் தீபகற்ப மலேசியாவின் நடுமையத்தில் இருப்பதால் அதற்குத் தொழில்துறையில் துரித வளர்ச்சி அடைவதற்கு மிக அருமையான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

உள்ளூர் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய ஏற்படுத்தித் தரப்படுகின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மியன்மார், வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பேர் வந்து வேலை செய்கின்றனர்.

இந்தோனேசியாவிலிருந்து கள்ளத்தனமாக வந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மலேசியாவிற்குள் கள்ளத்தனமாக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அந்த நிலைமை நாட்டின் பாதுகாப்பிற்கு மருட்டலாக அமையும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொகையும் புள்ளி விவரங்களும்[தொகு]

மாவட்ட மக்கள்தொகை[தொகு]

2010 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி சிலாங்கூர் மாநிலத்தின் மக்கள்தொகை 5,411,324. இதில் 52.9 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்; 27.8 விழுக்காட்டினர் சீனர்கள்; 13.3 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 6 விழுக்காட்டினர் மற்றவர்கள்.[7] இதில் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்களும் வெளிநாட்டு நிரந்தரவாசிகளும் சேர்க்கப்படவில்லை.

நிலை மாவட்டங்கள் மக்கள்தொகை
2010
1 பெட்டாலிங் 1,782,375
2 உலுலங்காட் 1,141,880
3 கிள்ளான் 848,149
4 கோம்பாக் 682,996
5 கோலா லங்காட் 222,261
6 சிப்பாங் 212,050
7 கோலா சிலாங்கூர் 210,406
8 உலு சிலாங்கூர் 205,049
9 சபாக் பெர்ணம் 106,158

நகரங்களின் மக்கள்தொகை[தொகு]

நிலை நகரம் மக்கள் தொகை
2010
1 சுபாங் ஜெயா 1,553,589
2 கிள்ளான் 1,113,851
3 அம்பாங் ஜெயா 804,901
4 ஷா ஆலாம் 671,282
5 பெட்டாலிங் ஜெயா 638,516
6 செராஸ் 601,534
7 காஜாங் 448,243
8 செலாயாங் பாரு 265,297
9 ரவாங் 194,577
10 தாமான் குட்வூட் 157,967

அரசியல்[தொகு]

அரசியலமைப்பு சட்டப்படி சிலாங்கூர் மாநிலத்தின் மன்னராகச் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அவர்கள் 2010ஆம் ஆண்டிலிருந்து இருக்கின்றார். மக்கள் கூட்டணியைச் சேர்ந்த டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ரஹிம் முதலமைச்சராகப் பதவி வகிக்கின்றார். மாநிலச் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக டத்தோ ஸ்ரீ டாக்டர் கிர் தோயோ இருக்கின்றார். இவர் பாரிசான் நேசனல் கட்சியைச் சேர்ந்தவர்.

மாநில சட்டசபை[தொகு]

சிலாங்கூர் மாநிலச் சட்டசபை ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. மாநிலச் சட்டசபை சிலாங்கூர் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத்தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிகாலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை சட்டசபை கலைக்கப்பட வேண்டும்.

சிப்பாங் அனைத்துலக விமானநிலையம்[தொகு]

சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமானநிலையத்தில் விமானங்கள் நிறுத்துமிடம்

நிர்வாகம்[தொகு]

மாவட்டங்களின் பட்டியல்[தொகு]

சிலாங்கூர் 9 நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. கோம்பாக்
  2. உலு லங்காட்
  3. உலு சிலாங்கூர்
  4. கிள்ளான் / போர்ட் கிள்ளான் (முன்பு போர்ட் சுவெட்டன்ஹாம்)
  5. கோல லங்காட்
  6. கோல சிலாங்கூர்
  7. பெட்டாலிங்
  8. சபாக் பெர்ணம்
  9. சிப்பாங்

உள்ளாட்சி மன்றங்கள்[தொகு]

சிலாங்கூர் மாநிலத்தில் 12 உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன. அவையாவன:

  1. பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ)[8]
  2. ஷா ஆலாம் மாநகராட்சி (MBSA)[9]
  3. உலு சிலாங்கூர்மாவட்ட நகராட்சி (MDHS)[10]
  4. கோலா லங்காட் மாவட்ட நகராட்சி (MDKL)[11]
  5. கோலா சிலாங்கூர் மாவட்ட நகராட்சி (MDKS)[12]
  6. சபாக் பெர்ணம் மாவட்ட நகராட்சி (MDSB)[13]
  7. அம்பாங் ஜெயா மாவட்ட நகராட்சி (MPAJ)[14]
  8. காஜாங் நகராட்சி (MPKj)[15]
  9. கிள்ளான் நகராட்சி (MPK)[16]
  10. செலாயாங் நகராட்சி (MPS)[17]
  11. சிப்பாங் நகராட்சி (MPSepang)[18]
  12. சுபாங் ஜெயா நகராட்சி (MPSJ)[19]

சுற்றுலா இடங்கள்[தொகு]

  • I-City - ஷா ஆலாம்[20]
  • மலேசிய வனவிலங்கு காட்சியகம் - National Zoo of Malaysia (Zoo Negara) in Ampang Jaya - 4,000 வனவிலங்குகள்[21]
  • சிப்பாங் பார்முலா 1 கார் பந்தய திடல் - Formula One Malaysian Grand Prix[22]
  • சன்வே லாகூன் - Sunway Pyramid in Bandar Sunway[23]
  • ஸ்ரீ கெம்பாங்கான் - தெ மைன்ஸ் - The Mines Wonderland in Sri Kembangan[24]
  • நீர் விளையாட்டு மையம் - Wet World Water Park in Shah Alam
  • பத்துமலை கோயில் - Batu Caves in Selayang[25]
  • ஷா ஆலாம் நீல பள்ளிவாசல் - Shah Alam's Blue Mosque
  • ஷா ஆலாம் காட்சியகம் - Shah Alam Gallery,
  • ஹை 5 - High 5 Bread Town
  • சிலாங்கூர் நூலகம் - Selangor State Library in Shah Alam
  • சுல்தான் அப்துல் அஜீஸ் அரச காட்சியகம் - Sultan Abdul Aziz Royal Gallery
  • ஆலாம் ஷா அரண்மனை - Alam Shah Palace
  • புலாவ் கெத்தாம் நண்டுத்தீவு - Crab Island (Pulau Ketam) in Klang
  • கடல்கரைகள் - Bagan Lalang, Sepang Gold Coast, Batu Laut Beach and Morib Beach
  • மின்மினிப் பூச்சி சரணாலயம் - Firefly Sanctuary, Kuala Selangor Nature Park
  • புக்கிட் செராக்கா மலேசிய தாவர பூங்கா - Malaysia Agriculture Park Bukit Cerakah in Shah Alam
  • காமன்வெல்த் வனப் பூங்கா - Commonwealth Forest Park and Forest Research Institute of Malaysia (FRIM) in Selayang
  • அம்பாங் வன காப்பகம் - Ampang Forest Reserve
  • காஞ்சிங் வனப் பூங்கா - Kanching Recreational Forest in Ampang Jaya.
  • 1 உத்தாமா - 1 Utama in Bandar Utama
  • தெ கர்வ் - The Curve, e@Curve (formerly known as Cineleisure Damansara)
  • இக்கானோ - Ikano Power Centre
  • ஐக்கியா - IKEA in Mutiara Damansara
  • துரோப்பிக்கானா - Tropicana City Mall in Damansara Utama
  • சுபாங் பேரட் - Subang Parade

கல்வி[தொகு]

தேசிய பல்கலைக்கழகங்கள்[தொகு]

பெயர் சுருக்கம் உருவாக்கம் இடம்
தேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் IIUM 1983 கோம்பாக்
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் UiTM 1999 ஷா ஆலாம்
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் UKM 1970 பாங்கி
புத்ரா பல்கலைக்கழகம் UPM 1971 செர்டாங்

தனியார் பல்கலைக்கழகங்கள்[தொகு]

பெயர் சுருக்கம் உருவாக்கம் இடம்
Al-Madinah International University MEDIU 2006 ஷா ஆலாம்
Binary University College of Management and Entrepreneurship BUCME 1984 பூச்சோங்
CITY University College of Science and Technology CITY UC 1984 பெட்டாலிங் ஜெயா
Cyberjaya University College of Medical Sciences CUCMS 2005 சைபர் ஜெயா
University of Selangor UNISEL 1999 பெஸ்தாரி ஜெயா, ஷா ஆலாம்
International University College Of Nursing IUCN 2009 பெட்டாலிங் ஜெயா
International University College Of Technology Twintech TWINTECH 1994 பாங்கி
Infrastructure University Kuala Lumpur IUKL 1973 காஜாங்
Limkokwing University of Creative Technology LUCT 1992 சைபர் ஜெயா
Malaysia University of Science and Technology MUST 2000 பெட்டாலிங் ஜெயா
Management and Science University MSU 2002 ஷா ஆலாம்
Masterskill University College of Health Sciences MASTERSKILL 1997 செராஸ்
Multimedia University MMU 1994 சைபர் ஜெயா
SEGi University SEGi 1977 கோத்தா டாமன்சாரா
Selangor International Islamic University College KUIS 1995 பாங்கி
Sunway University SYUC 1987 சுபாங் ஜெயா
Taylor's University TAYLOR 1969 சுபாங் ஜெயா
Tenaga Nasional University UNITEN 1976 காஜாங்
Tun Abdul Razak University UNIRAZAK 1998 பெட்டாலிங் ஜெயா
Universiti Tunku Abdul Rahman UTAR 2002 துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்
UOW Malaysia KDU University College UOWMKDU 1983 டாமன்சாரா உத்தாமா

அனைத்துலக பல்கலைக்கழகங்கள்[தொகு]

பெயர் சுருக்கம் உருவாக்கம் இடம் பூர்வீகம்
Monash University Monash 1998 சுபாங் ஜெயா ஆஸ்திரேலியா
University of Wollongong UOW 1975 சுபாங் ஜெயா ஆஸ்திரேலியா
University of Nottingham UNMC 2000 செமினி பிரிட்டன்

உடல்நல பராமரிப்பு[தொகு]

சிலாங்கூரில் உள்ள முக்கிய மருத்துவமனைகள்:

அரசு மருத்துவமனைகள்

தனியார் மருத்துவமனைகள்

  • அசுந்தா மருத்துவமனை
  • சுபாங் ஜெயா மருத்துவ மையம்
  • சன்வே மருத்துவ மையம்

பல்லூடகம்[தொகு]

சிலாங்கூரில் பல வானொலி நிலையங்களும் தொலைக்காட்சி நிலையங்களும் இலவச சேவைகளை வழங்கி வருகின்றன. அவற்றின் விவரங்கள்;

தொலைக்காட்சி[தொகு]

  • மலேசிய வானொலி தொலைக்காட்சி (RTM)
    • TV1 (மலேசியா)|TV1
    • TV2 (மலேசியா)|TV2
    • TVi
    • TV AlHijrah
  • Media Prima
    • TV3 (மலேசியா)|TV3
    • ntv7
    • 8TV (மலேசியா)|8TV
    • TV9 (மலேசியா|TV9
துணைக்கோள தொலைக்காட்சி
  • ஆஸ்ட்ரோ|Astro
இணையத் தொலைக்காட்சி
  • TVSelangor
  • Asia News Network|ANN

வானொலி[தொகு]

பல வானொலி நிலையங்கள் இலவச சேவைகளை வழங்கி வருகின்றன. அனைத்தும் எப்.எம். அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றன. அவற்றின் விவரங்கள்:

அரசாங்க ஒலிபரப்புகள்

  • Klasik Nasional (98.3)
  • Muzik FM (95.3)
  • Ai FM (106.7)
  • Traxx FM (100.1)
  • மின்னல் எப்.எம் (96.3) தமிழ் ஒலிபரப்பு
  • Asyik FM (91.1)
  • Selangor FM (100.9)
  • KLFM (97.2)
  • Pahang FM (107.5)

தனியார் வானொலி நிலையங்கள்

  • Era (103.3)
  • Sinar FM (96.7)
  • XFM (103.0)
  • Hot FM (97.6)
  • Suria FM (105.3)
  • Best104 (104.1)
  • Hitz.fm (92.9)
  • Mix FM (94.5)
  • Lite FM (105.7)
  • Red FM (104.9)
  • Fly FM (95.8)
  • BFM (89.9)
  • Capital FM (88.9)
  • 988 (98.8)
  • My FM (101.8)
  • One FM (88.1)
  • THR (99.3) தமிழ் ஒலிபரப்பு

செய்தித்தாட்கள்[தொகு]

சிலாங்கூரில் வெளியாகும் செய்தித்தாட்கள்:

  • Berita Harian (மலேசிய மொழி)
  • Utusan Malaysia (மலேசிய மொழி)
  • Kosmo! (மலேசிய மொழி)
  • Harian Metro (மலேசிய மொழி)
  • Sinar Harian (மலேசிய மொழி)
  • Selangor Kini (மலேசிய மொழி)
  • New Straits Times (ஆங்கிலம்)
  • The Star (ஆங்கிலம்)
  • The Malay Mail (ஆங்கிலம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Klang was mentioned in many historical documents such as the Chinese's maritime map who accompanied Admiral Cheng Ho, the Portuguese apothecary and writer Tomes Pires mentioned about a tin mining place called "Calam"". Archived from the original on 2013-02-11. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
  2. "Malaysian State GDP Per Capita" (PDF). Malaysian Dept. of Statistics. Archived from the original (PDF) on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
  3. Kuala Selangor District Council: Latar Belakang Kuala Selangor (Malay) பரணிடப்பட்டது 2010-08-18 at the வந்தவழி இயந்திரம் Retrieved February 10, 2012.
  4. Selangor's history dates to the 16th century, when rich tin deposits were found in the region.
  5. "The history of the Bugis influence in Selangor started way back in 1722 when the five Bugis Brothers, named Daeng Perani, Menambung, Merewah, Chelak and Kemasi assisted Raja Sulaiman to oust Raja Kechil". Archived from the original on 2013-02-11. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
  6. "Selangor's first capital, Kuala Selangor was established in 1766 which was later replaced by Kuala Lumpur". Archived from the original on 2013-02-11. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
  7. Selangor has the largest population in Malaysia at 5,411,324 as of 2010. The state's ethnic composition consists of Malay 52.9%, Chinese 27.8%, Indian 13.3%, and other ethnic groups 6%.
  8. "Copyright © 2012 Majlis Bandaraya Petaling Jaya". Archived from the original on 2012-02-15. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  9. "Hakcipta Terpelihara 2012 © Majlis Bandaraya Shah Alam (MBSA)". Archived from the original on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  10. "Majlis Daerah Hulu Selangor (MDHS)". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  11. "Majlis Daerah Kuala Langat (MDKL)". Archived from the original on 2012-10-26. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  12. "Majlis Daerah Kuala Selangor (MDKS)". Archived from the original on 2011-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  13. The Sabak Bernam Local Authority was first known as the Sabak Bernam District Council.
  14. Portal Rasmi Majlis Perbandaran Ampang Jaya (MPAJ)
  15. Majlis Perbanadaran Kajang (MPKj)
  16. "Majlis Perbanadaran Kelang (MPK)". Archived from the original on 2012-01-26. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  17. Majlis Perbanadaran Selayang (MPS)
  18. "Majlis Perbanadaran Sepang (MPS)". Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  19. Majlis Perbanadaran Subang Jaya (MPSJ)[தொடர்பிழந்த இணைப்பு]
  20. i-City located in Shah Alam, Selangor is known as the city of digital lights.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. Zoo Negara Malaysia is managed by the Malaysian Zoological Society, a non-governmental organization established to create the first local zoo for Malaysians.
  22. Every year, the fastest drivers in the world visit Malaysia to compete in the Malaysian Formula One Grand Prix.
  23. "Sunway Lagoon is a multi-award winning attraction recognized by the International Association of Amusement Parks and Attractions (IAAPA) as Asia's Best Attraction". Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  24. "Built around a former mining-pool, the Mines Wonderland is an exciting theme-park with watersports". Archived from the original on 2012-02-14. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  25. The cave is one of the most popular Hindu shrines outside India, dedicated to Lord Murugan. It is the focal point of Hindu festival of Thaipusam in Malaysia.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாங்கூர்&oldid=3686839" இலிருந்து மீள்விக்கப்பட்டது