செராஸ்
செராஸ் | |
---|---|
புறநகர் முக்கிம் | |
Cheras | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 3°6′25″N 101°42′59″E / 3.10694°N 101.71639°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
முக்கிம் | செராஸ் |
தொகுதி | செராஸ்; உலு லங்காட் |
அரசு | |
• மேயர் | நோர் இசாம் டாலான் |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 560xx, 432xx |
மலேசியத் தொலைபேசி எண் | +603-9 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | W ; V |
இணையதளம் | www.dbkl.gov.my www.mpkj.gov.my |
செராஸ், (மலாய்: Cheras; ஆங்கிலம்: Cheras; சீனம்: 蕉赖); என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி அமைப்பில், அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி. அதே வேளையில் இது ஒரு முக்கிம். சிலாங்கூர் மாநிலத்தின் உலு லங்காட் மாவட்டத்திலும் தன் எல்லையைக் கொண்டு உள்ளது.
மலேசியாவில் மக்கள் அதிகமாகவும்; நெருக்கமாகவும் வாழும் நகரங்களில் செராஸ் நகரமும் ஒன்றாகும். செராஸ் பகுதி இரு நாடாளுமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
1. செராஸ் தொகுதி
2. உலு லங்காட் தொகுதி
1974-ஆம் ஆண்டு வரையில் செராஸ் தொகுதி; உலு லங்காட் மாவட்டத்தின் கீழ் இருந்தது. 1995-ஆம் ஆண்டில் செராஸ் தொகுதி என்று ஒரு புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.
வரலாறு[தொகு]
2018-இல், செராஸ் மக்கள் தொகை இன வாரியாக[1]
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகிய இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கிய செராஸ் மாவட்டத்தின் வரலாறு, 1900-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தொடங்குகிறது. அந்தக் காலக் கட்டத்தில் செராஸ் பகுதியில் நிறைய ரப்பர்த் தோட்டங்கள் தோன்றின. கணிசமான அளவிற்கு இந்தியர்கள் குடிபெயர்ந்தார்கள்.
செராஸ், சுங்கைவே, புடு புறநகர்ப் பகுதிகளில் ஈயச் சுரங்கங்கள் உருவாகின. ஹக்கா (Hakka) சீன இனத்தவர் பெருமளவில் குடியேறினர்.[2]
ஜாலான் புடு உலு[தொகு]
1930-ஆம் ஆண்டுகளில், ஜாலான் புடு உலு என்று இப்போது அழைக்கப்படும் சாலையில் இரண்டு வரிசைகளில் 21 கடைவீடுகள் கட்டப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, 2010 மே மாதம் ஏற்பட்ட ஒரு பெரிய தீ விபத்தினால் 14 கடைவீடுகள் அழிந்து போயின.[3]
அப்போதைய காலத்தில் கோலாலம்பூர் தலைநகரையும் காஜாங் நகரையும் இணைக்கும் முக்கிய சாலையாக புடு சாலை இருந்தது. சிங்கப்பூருக்குச் செல்வதற்கு அந்தச் சாலைதான் ஒரே சாலையாகவும் இருந்தது. 1991-ஆம் ஆண்டில் செராஸ் நெடுஞ்சாலை திறக்கப் பட்டதும், புடு சாலையைப் பயன்படுத்துவது குறைந்து போனது.
செராஸ் கல்வி நிலையங்கள்[தொகு]
முன்பு காலத்தில் செராஸ் முழுவதுமே, சிலாங்கூர் மாநிலத்தின், ஐந்தாவது பெரிய மாவட்டமான உலு லங்காட்டின் ஒரு பகுதியாக இருந்தது. செராஸ் என்றதும் ஒரு பெரிய இடத்தை நினைவு படுத்தும். பெரும்பாலான கல்வி நிலையங்களும்; ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகளும் அங்குதான் இருந்தன.[4]
இருப்பினும், 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தை உருவாக்குவதற்காக, செராஸ் மாவட்டத்தின் பெரும் பகுதி, மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[5] அதன் பின்னர் செராஸ் அதன் செல்வாக்கைச் சன்னம் சன்னமாக இழந்து விட்டது.
செராஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]
செராஸ் புறநகர்ப் பகுதியில் இரு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 601 மாணவர்கள் பயில்கிறார்கள். 57 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவற்றுள் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி, 2020 மார்ச் 2-ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய பள்ளி.[6]
மலேசியாவில் 527-ஆவது தமிழ்ப்பள்ளி[தொகு]
பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் 527-ஆவது தமிழ்ப்பள்ளியாக தோற்றம் கண்டது. இந்தப் பள்ளியில் நவீன வசதிகள் கொண்ட 24 வகுப்பறைகள் உள்ளன. RM 21.08 மில்லியன் ரிங்கிட் செலவில், காஜாங் நகருக்கு அருகில் கட்டப் பட்டது. இருப்பினும் இந்தப் பள்ளி செராஸ் வட்டாரத்தைச் சார்ந்து உள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் முயற்சியின் கீழ் புதிதாக 7 புதிய தமிழ்ப் பள்ளிகளைக் கட்டுவதற்காக சிறப்பு நிதிகள் ஒதுக்கப் பட்டன. அந்த ஏழு புதிய தமிழ்ப் பள்ளிகளில் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும்.[7]
மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளி[தொகு]
மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. ஒரு நவீன தமிழ்ப் பள்ளிக்கு உரிய அனைத்து வசதிகளையும் கொண்டு இருக்கும் மிகச் சிறந்த பள்ளியாகக் கருதப் படுகிறது.[8]
பாலர் வகுப்புகளுக்கான வசதிகள்; இரு கணினி அறைகள்; இரு அறிவியல் ஆய்வு அறைகள்; ஒரு கணினி ஆய்வு அறை; மாணவர் வழிப்பாட்டு அறைகள்; நவீன சிற்றுண்டிச் சாலை; சிறிய மருத்துவச்சாலை என பல நவீன வசதிகளைக் கொண்ட பள்ளியாகத் திகழ்கின்றது.[9]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
WBD0170 | செராஸ் | SJK(T) Cheras | செராஸ் தமிழ்ப்பள்ளி | 56100 | கோலாலம்பூர் | 241 | 25 |
BBD4065 | செராஸ் | SJK(T) Bandar Mahkota Cheras (2020 மார்ச் 2-ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய பள்ளி)[10] |
பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி | 43200 | காஜாங் | 360 | 32 |
இரவு நேர வானவெளி[தொகு]

செராஸ் நகர்ப் பகுதியில் இருந்து கோலாலம்பூரின் இரவு நேர வானவெளி. அம்பாங் பகுதியில் உள்ள மலையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". https://election.thestar.com.my/.
- ↑ August 29, Chung Ying Yi / The Edge Malaysia (29 August 2020). "Streetscapes: Old road in Cheras still popular". https://www.theedgemarkets.com/article/streetscapes-old-road-cheras-still-popular. பார்த்த நாள்: 30 January 2022.
- ↑ "In the early 1900s, Cheras became a centre for the growing rubber plantation and tin mining industries, attracting many Hakka Chinese to the area. By the 1930s, two rows of 21 shophouses was built by a rubber merchant in Pudu Ulu, which serves as the town centre of Cheras.". https://www.trx.my/city/cheras-where-charming-history-meets-modern-vibrancy. பார்த்த நாள்: 30 January 2022.
- ↑ "Institut Pendidikan Guru Kampus Ilmu Khas Cheras, Kuala Lumpur". http://ipgkik.moe.edu.my/. பார்த்த நாள்: 30 January 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "History of Cheras" (in en). https://www.propsocial.my/topic/2051/history-of-cheras-posted-by-propsocial-editor. பார்த்த நாள்: 30 January 2022.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2021-11-29.
- ↑ "செராஸில் நாட்டின் 527ஆவது தமிழ்ப்பள்ளி.". http://nanban.com.my/news_detail.php?nid=2466. பார்த்த நாள்: 30 January 2022.
- ↑ "பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி - 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பள்ளி". https://www.youtube.com/channel/UCteOZPp6WUuLKI71eR1mWtA. பார்த்த நாள்: 30 January 2022.
- ↑ "பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/Cilipadimybuddy/posts/bandar-mahkota-cheras-sjk-tamilnew-state-of-the-art-school-opening-for-year-2020/433176637380902/. பார்த்த நாள்: 1 December 2021.
- ↑ "Sujathashree Pubhalaan". https://www.facebook.com/sujah75/posts/2699396743512512.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kuala Lumpur