உள்ளடக்கத்துக்குச் செல்

வங்சா மாஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்சா மாஜு
Wangsa Maju
புறநகர்
வங்சா மாஜு எல்ஆர்டி நிலையம்
வங்சா மாஜு எல்ஆர்டி நிலையம்
அடைபெயர்(கள்):
அவ்தோர்ன்டன்
Hawthornden
Map
வங்சா மாஜு is located in மலேசியா
வங்சா மாஜு
      வங்சா மாஜு
ஆள்கூறுகள்: 3°12′2″N 101°44′23″E / 3.20056°N 101.73972°E / 3.20056; 101.73972
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
புறநகர்வங்சா மாஜு
தொகுதிகோலாலம்பூர்
உருவாக்கம்26 பிப்ரவரி 1984
அரசு
 • நகராண்மைகோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
53000-53300
மலேசியத் தொலைபேசி எண்+603-402, +603-403, , +603-410, +603-413, +603-414, +603-416
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W ; V

வங்சா மாஜு, (மலாய்: Wangsa Maju; ஆங்கிலம்: Wangsa Maju; சீனம்: 旺沙玛珠); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில், அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி; மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஆகும்.

இந்தப் புறநகர்ப் பகுதி சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் (Gombak) மாவட்டம்; மற்றும் செதாபாக் (Setapak), தாமான் மெலாத்தி (Taman Melati) நகர்ப் புறங்களால் சூழப்பட்டு உள்ளது.

வங்சா மாஜு புறநகர்ப் பகுதி, கோலாலம்பூரில் உள்ள மிகப் பெரிய நகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். வங்சா மாஜு புறநகர்ப் பகுதி பல பிரிவுகளைக் (Seksyen) கொண்டுள்ளது: பிரிவு 1, 2, 4, 5, 6 மற்றும் 10.[1]

பொது[தொகு]

வங்சா மாஜு புறநகர்ப் பகுதியின் பொருளாதாரம் பெரும்பாலும் வணிகமாகும். இங்கு பற்பல வணிகப் பேரங்காடிகள், வணிக மாளிகைகள் மற்றும் இரவு சந்தை தளங்கள் இருப்பதைக் காணலாம்.

வரலாறு[தொகு]

வாங்சா மஜூவில் உள்ள வணிகப் பகுதிகளில் ஒன்று.

வங்சா மாஜு தற்போது அமைந்துள்ள இடம், முன்பு 1900-களில் இருந்து 1980-ஆம் ஆண்டுகள் வரை அவ்தோர்ன்டன் (Hawthornden) எனும் பெயரில் அழைக்கப்பட்டது. வாங்சா மாஜுவின் அசல் பெயர் அவ்தோர்ன்டன். அங்கு நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. பொதுவாக செதாபாக் ரப்பர் தோட்டங்கள் என்று அழைத்தார்கள்.[1]

அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டம், 1900-ஆம் ஆண்டுகளில், லோக் இயூ (Wong Loke Yew) எனும் சீனக் கோடீஸ்வரருக்குச் சொந்தமானது. அவ்தோர்ன்டன் ரப்பர் எஸ்டேட் கம்பெனி (Hawthornden Rubber Estate Company Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் அந்தத் தோட்டம் செயல்பட்டு வந்தது.

அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டம்[தொகு]

அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டத்திற்கு அருகில், கொங்காங் தோட்டம் (Gonggang Estate); கெண்ட் தோட்டம் (Kent Estate); வார்டிபன் தோட்டம் (Wardieburn Estate) போன்ற பல ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அந்தத் தோட்டங்கள் இப்போது இல்லை. வாங்சா மாஜூவைச் சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளின் தோற்றத்தால் மறைந்துவிட்டன.[2]

முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது ஆட்சியின் போது, அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டத்தை ஒரு புதிய நகரமாக உருவாக்க அந்தத் தோட்டம் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில் பண்டார் பாரு வங்சா மாஜு (Bandar Baru Wangsa Maju) நகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது.

கல்வி நிலையங்கள்[தொகு]

துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் (Tunku Abdul Rahman University) (UTAR); துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகக் கல்லூரி (Tunku Abdul Rahman University College) (TARC); ஆகிய பல்கலைக்கழகங்கள் திறக்கப் பட்டதைத் தொடர்ந்து, வங்சா மாஜு நகர்ப் பகுதி, பல்கலைக்கழக மாணவர்களின் முக்கிய குடியிருப்புப் பகுதியாக மாறியுள்ளது.[3]

போக்குவரத்து[தொகு]

பொது போக்குவரத்து[தொகு]

வாங்சா மாஜூ LRT

வாங்சா மாஜூவில் இரண்டு ரேபிட் கேஎல் (RapidKL); இலகு விரைவுப் போக்குவரத்து (Light Rapid Transit) (LRT) நிலையங்கள் உள்ளன.   KJ3   வங்சா மாஜு இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (Wangsa Maju LRT Station); மற்றும்   KJ4   ஸ்ரீ ரம்பாய் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (Sri Rampai LRT Station).

சாலை போக்குவரத்து[தொகு]

கூட்டரசு வழித்தடங்கள் மற்றும் விரைவுச் சாலைகளால் வாங்சா மாஜு சேவை செய்யப் படுகிறது. கெந்திங் கிள்ளான் சாலை (Genting Klang–Pahang Highway) 2; கோலாலம்பூர் நகரத்தை வாங்சா மாஜு மற்றும் செதாபாக் பகுதிகளுடன் இணைக்கிறது.[1]

அம்பாங் மற்றும் பாண்டன் இண்டாவில் (Pandan Indah) இருந்து வரும் வாகன ஓட்டிகள் (Kuala Lumpur Middle Ring Road) (MRR2) 28 சாலையைத் தேர்வு செய்வது வழக்கம்.[1]

டூத்தா-உலு கிள்ளான விரவுச்சாலை (Duta–Ulu Klang Expressway) (DUKE, E33 ) வாங்சா மாஜூவின் தெற்குப் பகுதி வழியாகச் செல்கிறது.[1]

கோம்பாக் மற்றும் பெந்தோங் (Bentong) நகருக்குச் செல்லும் பழைய சாலையும் (Malaysia Federal Route 68) 68 இதன் அருகில்தான் தொடங்குகிறது.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Kaur, Sharen (9 August 2018). "Making an oasis in Wangsa Maju". New Straits Times. https://www.nst.com.my/property/2018/08/399681/making-oasis-wangsa-maju. 
  2. Maju, Budak Wangsa (23 July 2016). "There were many rubber plantations such as the Wardieburn Estate, Gonggang Estate, Kent Estate near Awthornton Rubber Estate. Those estates no longer exist. The estates have disappeared by residential and commercial areas surrounding Wangsa Maju". Budak Wangsa Maju. பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
  3. "A choice place to live with many high-rise and low-cost flats projects - Metro News The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்சா_மாஜு&oldid=3960265" இலிருந்து மீள்விக்கப்பட்டது