சௌக்கிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சௌக்கிட்
Chow Kit
秋杰单
Chow Kit station (Kuala Lumpur Monorail) (exterior), Kuala Lumpur.jpg
நாடு  மலேசியா
மாநிலம் Flag of Kuala Lumpur, Malaysia.svg கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம்
நகரத் தோற்றம் 1857
மாநகரத் தகுதி 1. பெப்ரவரி 1972
அரசு
 • கோலாலம்பூர் மாநகர மேயர் அகமட் புவாட் இஸ்மாயில்
 • அடர்த்தி 6,696
நேர வலயம் MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே) கண்காணிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு 5xxxx
அனைத்துலக முன்னொட்டுக் குறி +60
இணையதளம் http://www.dbkl.gov.my

சௌக்கிட் (Chow Kit) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள துணை மாவட்டம். இது சௌக்கிட் சாலையில் இருக்கிறது. சௌக்கிட் சாலையின் இரு புறமும் ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் என இரு சாலைகள் இணையாகச் செல்கின்றன. முன்பு காலத்தில் சௌக்கிட் பகுதியில் லோக் சௌக்கிட் எனும் ஈயத் தொழில் செல்வந்தர் இருந்தார். அவர் நகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் பல தார்மீகப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவிகள் செய்தார். அவரின் நினைவாக அப்பகுதிக்கு சௌக்கிட் என்று பெயர் வந்தது.[1]

1960ஆம் ஆண்டுகளில் சைக்கிட் பகுதிகள் சீனர்களின் கோட்டையாக விளங்கின. 2000 ஆம் ஆண்டுகளில் மாற்றம் கண்டது. இப்போது இந்தோனேசியர்களின் சொர்க்கபுரியாக மாறி விட்டது. இங்கு இப்பொது அதிகமான மலாய்க்காரர்களும் சந்தை வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். சௌக்கிட் அருகில் கம்போங் பாரு எனும் மலாய்க் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு மலாய்க்காரர்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

சௌக்கிட் பசார் எனும் சந்தையில் காய்கறிகள், இறைச்சிகள், மீன்கள் போன்றவை விறகப்படுகின்றன. வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் சௌக்கிட் பசாருக்கு வருகை புரிவது வாடிக்கையாகி விட்டது. இங்குள்ள இரவுச் சந்தையும் மிகப் பிரபலமானது.[2] 2003ஆம் ஆண்டு இங்கு ஒற்றைத் தண்டவாள நிலையம் (Monorail) கட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஒற்றைத் தண்டவாளச் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌக்கிட்&oldid=1900988" இருந்து மீள்விக்கப்பட்டது